குளித்தால் கலோரிகள் குறையுமா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
குளித்தால் கலோரிகள் குறையுமா?
குளித்தால் இறந்த தோல் செல்கள் நம் உடலை விட்டு நீங்கும் என்பதுதான் ஆராய்ச்சி உண்மை. ஆனால் நீங்கள் கேட்டது போன்ற சமாச்சாரத்தையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
2017 ஆம் ஆண்டு, லாப்போரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குளியல் பற்றி ஆராய்ந்து ஓரு உண்மையைக் கண்டுபிடித்தனர். அதன்படி, குளித்தால் உடலின் வளர்சிதை மாற்ற வேகம் மாறுபடுகிறது என்று கண்டறிந்தனர். எப்படி பார்த்தாலும் குளித்து கலோரிகளை குறைக்க முடியாது. அப்படி குறைக்க வேண்டும் என்றால், இதமான வெந்நீரில் ஒருமணிநேரம் குளிக்கவேண்டும். அப்படி குளித்தாலும் பிரிட்டானியா டைகர் பிஸ்கட் சாப்பிட்டால் உடலில் சேரும் கலோரிகளை மட்டுமே குறைக்க முடியும். தோராயமாக 61 கலோரிகள்.
எனவே இப்படி கேள்வி கேட்பதை விட்டுவிட்டு பதினைந்து நிமிடங்கள் நடந்தால் போதும். எளிமையாக உடலின் கலோரிகள் குறையும்.