வல்லுறவு பிறகு மன்னிப்பு - காமவெறியன் டிசால்வோ





Black and white photo of Albert DeSalvo in police custody.




அசுரகுலம்

ஆல்பெர்ட் டிசால்வோ

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் தனியாக வாழும் பெண்களை மிரட்டிய கொலையாளி ஆல்பெர்ட் டிசால்வோ. 1962 -1964 வரையிலான காலகட்டத்தில் 13 க்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்றார். அனைத்து கொலைகளுக்கும் பொதுவான அடையாளம், கைகளும் கால்களும் பெண்களின் உள்ளாடைகளால் கட்டப்பட்டிருக்கும். இந்த ரீதியில் மாதம் இரு கொலைகள் என திட்டமிட்டு ஆல்பெர்ட் செயல்பட்டு வந்தார். 


போலீசுக்கு கிடைத்த முதல் துப்பு, கொலைகாரர் வீட்டின் கதவை, ஜன்னலை உடைத்து உள்ளே வரவில்லை என்பதே. இதன் பொருள், பெண்களுக்கு உள்ளே வருபவர் அதாவது கொலையாளி முன்னமே தெரிந்தவராக இருக்கவேண்டும். அல்லது அவர்கள் அவரை உள்ளே வர அனுமதிக்கின்றனர் என தீர்மானித்துக்கொண்டனர்.


1964 ஆம் ஆண்டு டிசால்வோவின் வல்லுறவு விளையாட்டிற்கு முடிவு கட்டப்பட்டது. வல்லுறவுக்குள்ளான பெண் துணிந்து போலீசில் புகார் செய்தார். எப்படிம்மா உள்ளே வந்தான் என்பதற்கு, டிடெக்டிவ் என்று சொல்லி உள்ளே வந்து வல்லுறவு செய்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்று அந்த பெண் விசாரணையில் கூறினார். இவர் மட்டுமன்றி, இன்னும் ஏராளமான பெண்கள் புகார்களை செட்டாக கொடுத்தனர். முதலில்  யார் என்பதுதானே இங்கே பிரச்னையாக உள்ளது. டிசால்வோவின் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாக அவரை போலீஸ் ஏறத்தாழ நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

சீரழிந்த பால்யம்!

டிசால்வோவின் தந்தைக்கு தவறு என்றால் பிடிக்காது. உடனே தன் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து துவைப்பார். இதனால் குற்றம், தண்டனை பற்றிய கவலைகள் அவரை விட்டு மெல்ல அகன்றன. இதனால் சிறுவயதில் கார் திருட்டு, கொள்ளை ஆகியவற்றுக்காக பனிரெண்டு வயதில் சிறை சென்றார். அங்கு சிறுவர் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு சேர்ந்தால் புத்தராகவாக வெளியே வருவார். நம்மூரைப் போலத்தான் குற்றங்களில் தேர்ந்து வெளியேவந்து மீண்டும் கார்களைத் திருடினார்.


பின்னர், ராணுவத்தில் சேர்ந்தார். அங்கும் கட்டளைகளை ஏற்று செயல்பட முடியவில்லை. இதனால் கட்டளைகளை ஏற்காத குற்றத்திற்காக வெளியேற்றப்பட்டார். பின் 9 வயது சிறுமியை கசமுசா செய்தார் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டார். 1956 ஆம் ஆண்டு முழுமையான ராணுவப்பணியிலிருந்து நீக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் தனது மனைவியைச் சந்தித்தார். மணந்தார்.

1956க்குப் பிறகு மாடல் பெண்களை வேலைக்கு எடுப்பவராக இருந்தார். கிடைத்த பெண்களை அஜக்தா செய்தார். இந்த சமாச்சாரம் பெண்களுக்கும் பிடித்திருந்ததோ இல்லையோ தெரியவில்லை. இவை புகாராக பதிவாகவில்லை. 1960 வாக்கில் கை அரிக்க சில திருட்டுகளை துணிச்சலாக செய்து மாட்டிக்கொண்டார். இதனால் 11 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிட்டது.

தினந்தினம் செக்ஸ்

அப்படித்தான் சொல்லவேண்டும் இரண்டு ஆண்டுகளில் முந்நூறு பெண்களை வல்லுறவு செய்திருந்தார். இவரின் காமவெறி அமெரிக்காவின் ஆறு மாகாணங்களுக்கு நீண்டது. தினசரி ஆறு பெண்கள் என உழைத்தார். 1964ஆம் ஆண்டு நவம்பரில் வல்லுறவு குற்றச்சாட்டிற்காக கைதானார். அரசால் டிசால்வோவை குற்றவாளி என நிரூபிக்க முடியவில்லை. வல்லுறவுக்கு செல்லும்போது பச்சை நிற சூட் அணிவது இவரின் வழக்கம். குற்றம் என அவரே ஒப்புக்கொண்டதால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின் சக கைதியால் 1973ஆம் ஆண்டு குத்திக்கொல்லப்பட்டார்.


நன்றி - தாட்.கோ.வலைத்தளம்.








பிரபலமான இடுகைகள்