பெண்களின் உடல், நாயின் இறைச்சியா? - ஹேரி ஹெய்ட்னிக் கொடூரம்!
அசுர குலம்
ஹேரி ஹெய்ட்னிக்
சைலன்ஸ் ஆப் தி லேம்ஸ் படத்தில் பஃபல்லோ பில் எனும் கேரக்டர் இவரை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான். பெண்களை அடித்து, உதைத்து, செக்ஸ் வைத்துக்கொண்டு அவர்களை சங்கிலியால் கட்டி செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பது இவரது பாணி.
இதில் கொடுமை, இறந்து போன பெண்களை வெட்டி சமைத்து அதை நாயின் உணவில் கலந்து தனது செக்ஸ் அடிமைகளுக்கு அவர்கள் அறியாமலேயே உணவில் கலந்து தின்ன வைத்ததுதான்.
1943 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் பிறந்த ஹேரிக்கு, வாய்த்த அப்பா கடுமையான அரை சைக்கோ போலத்தான். சிறிய தவறு என்றாலும், கருணையே பார்க்காமல் அடித்து துவைத்துவிடுவார். தண்டனையும் பகிரங்கமாக மற்றவர்கள் பார்க்கும்படி நடக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து சார் பாவம் சார் என்று சொல்லும்படி அவர்களும் பார்க்க தண்டனை தரும் வெயில் பட தந்தை போல.
இப்படி வளர்ந்தவர் சிறிய வயதிலேயே முதிர்ச்சியான மனநிலை கிடைத்துவிட்டது. அத்தனை அவமானங்களையும பட்டதால் தனியாகவே திரிந்தார். பிறகு ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனாலும் சிறுவயதில் ஏற்பட்ட மனக்குறைபாடு பிரச்னையில் பணியையும் குலைக்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு பாதிரியாருக்கான பயிற்சியை முடித்து உள்ளூர் சர்ச் ஒன்றை தொடங்கினார். சிறிய முதலீடுதான். ஹேரியின் பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது. பெண்களை வளைத்து சொன்னபடி கேட்க வைத்த தும் இப்படித்தான்.
1986 ஆம் ஆண்டு ஜோசஃபினா ரிவேரா என்ற விலைமாதை செக்சுக்காக கூட்டி வந்தார். அவரோடு ஒன்றுகூடி சந்தோஷம் அனுபவித்தார். ஆனால் அவர் உடையை அணியத் தொடங்கியதும், பின்புறமாக வந்து கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். கொல்லாதே நீ சொல்வதைக் கேட்கிறேன் என்றவுடன் தொடங்கியது சித்திரவதை. சங்கிலியை கழுத்தில் கட்டி கீழ்தளத்திற்கு கேரி அழைத்துச் சென்றார். அங்கு சென்று, ரிவேரா அலறி பதறி தடுக்கும்வரை அவரை அடித்துக்கொண்டே இருந்தார். பின் அவரை மரப்பெட்டி போன்ற இடத்தில் வைத்து அடைத்தார். சாப்பாடு அதெல்லாம் கிடையாது. பட்டினியும் செக்சும் மட்டும்தான் அங்கு வரும் பெண்களுக்கு.
பின் அங்கு ஐந்து பெண்கள் வந்தனர். அதில் இருவர் இறந்துவிட்டனர். அதில் ஒரு பெண் அங்கு அரைகுறை பட்டினியாக இருந்த பெண்களுக்கு வைக்கப்பட்ட நாய் உணவில் சமைத்து பரிமாறப்பட்டார். அப்படி சமைத்து பரிமாறப்பட்ட பெண், மனநிலை குறைபாடு கொண்டவர். பெயர் சாண்ட்ரா லிண்ட்ஸே.
இவரின் உடல் பாகங்களை வெட்டி சமைக்கும்போதுதான், அந்த பிளாட்டிலுள்ள பிறர் நரமாமிச கருகல் வாடை தாங்காமல் போலீசை கூப்பிட்டனர். ஆனால் போலீஸ் டிடெக்டிவ், எனது இரவு உணவை கருக்கிவிட்டேன் என்று ஹேரி சொன்னதை நம்பி திரும்பி போய்விட்டார். அவர் உள்ளே வந்திருந்தால் கதையே நான் லீனியராக மாறியிருக்கலாம்.
ஜோசஃபினா ரிவேரா தன்னை ஹேரியின் நம்பிக்கைக்குரிய பெண்ணாக மாற்றிக்கொண்டார். இதனால் தப்பித்துச்செல்ல முடியும் என நம்பினார். அதனால் தப்பித்து ஹேரியை போலீசில் மாட்டி விட்டதோடு பிற பெண்களையும் காப்பாற்ற முடிந்தது. பிற பெண்களை பிடிக்க ஹேரி ரிவேராவை பயன்படுத்த நினைத்தார். இதைப் பயன்படுத்தி வெளியில் சென்ற ரிவேரா தப்பி, பிற பெண்களையும் காப்பாற்றிவிட்டார்.
1988 ஆம் ஆண்டு ஹேரி குற்றம் சாட்டப்பட்டார். பின்னர்தான் அவரின் சர்ச்சுக்கு வருபவர்களை ஆராய்ந்தால், பலரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கண்டுபிடித்தது. 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஷ ஊசி போட்டு ஹேரி அரசால் கொல்லப்பட்டார்.
இவர் தொடர்பான வீடியோக்களை யூடியூபில் தேடினால் கிடைக்கும் பாருங்கள்.
நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளம்