பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி





Image result for nawab brahumdagh bugti


நேர்காணல்

நவாப் பஹூம்தாக் புக்தி

ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார். 


பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது?

நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது.

அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள். 

தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த பதினைந்து ஆண்டு கால கணக்கு.

பாக். - சீனா பொருளாதார மண்டலம்தான் பலுசிஸ்தான் மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணமா?

பாக். ராணுவம் பலுசிஸ்தான் மக்களை சிறுபான்மையினராக இதுபோன்ற கடத்தல்களையும் கொலைகளையும் செய்து வருகிறது. பொருளாதார மையத்திற்காக பாக் உள்ளே வரும் சீனா, எல்லையற்ற அதிகாரத்தை கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நாங்கள் பலியாகமாட்டோம். எங்களது வளத்தை பறிகொடுக்கவும் போவதில்லை. எங்கள் உயிர் உள்ளவரை இந்த அநீதியை நாங்கள் எதிர்ப்போம்.


மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் உதவியை நாடினீர்களா?

நாங்கள் அவர்களின் உதவியை தற்போது நாடவில்லை. ஆனால் அவர்களை அணுக முயலும் யோசனை உள்ளது. இந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு வலுவான ஆதிக்கம் மற்றும் ஆதரவு உண்டு.


பிரதமர் மோடி  2016 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் பற்றி குறிப்பிட்டார். அதுபற்றி. 

அதற்குப் பிறகுதான் பலருக்கும் பலுசிஸ்தான் மீது கவனம் ஏற்பட்டது என்பது உண்மை. இந்தியா இப்பிரச்னையில் தங்களுடைய வெளிநாட்டு செல்வாக்கைப் பயன்படுத்தி எம் மக்களுக்கு உதவி புரிந்து அமைதியை நிலவச்செய்தால் நன்றாக இருக்கும்.

பலுசிஸ்தானை காஷ்மீரோடு ஒப்பிட்டால் என்ன கூறுவீர்கள்.

இந்தியா தன்னுடைய மாநிலத்தை அரசியல் சட்டப்படி செயல்பட செய்திருக்கிறது. இதில் சரி, தவறு என்பதற்கு இடமில்லை. ஆனால் பலுசிஸ்தானில் பாக் அரசு, ராணுவம் மூலம் வெடிகுண்டுகளை வீசுகிறது. இதுவும் பெல்லட் குண்டு தாக்குதலும் ஒன்றாகாது.

நன்றி - தி வீக் - நம்ரதா பிஜி அகுஜா