சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ராபர்ட் கென்னடி!





Image result for robert kennedy
ராபர்ட் கென்னடி





ராபர்ட் கென்னடி

ஜான் எஃப் கென்னடியின் சகோதரர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர். சகோதர ருக்குப் பின்னர் தேர்தலில் நிற்க நினைத்தார். ஆனால் சதிகார ர்களால் படுகொலை செய்யப்பட்டார். சகோதர ரின் ஆதரவுடன் அவரது ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக, பதவி வகித்தார்.


1925 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் கென்னடி, 1960 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். பின்னர், சகோதரர் படுகொலையான பின்னர் நியூயாரக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் முயற்சியிலும் இருந்தார். 1968 ஆம் ஆண்டு ஜூன் 5 தாக்கப்பட்டு படுகாயமுற்றார். அடுத்தநாள் இறந்துபோனார்.

ராபர்ட்டின் தந்தை ஜோசப் சீனியர், தொழிலதிபர். இவரின் அம்மா ரோஸ், போஸ்டன் நகர மேயர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அனுபவித்தவர்கள்.

ஜோசப்பிற்கு பிரிட்டனில் அமெரிக்கத்தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் ஏற்க, குடும்பம் இங்கிலாந்திற்கு பயணமானது. பின்னர் இரண்டாம் உலகப்போர் வெடிக்க, வேகமாக அமெரிக்காவுக்குத் திரும்பினர். 1939ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு திரும்பியவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஊடகங்களை மரியாதையாக நடத்திய குடும்பங்களில் கென்னடி குடும்பத்திற்கு முக்கிய இடம் உண்டு.

மில்டன் பள்ளியில் தொடக்க கல்வியை கற்றவர், ஹார்வர்டில் படிக்க நினைத்தார். அப்போது இவரின் சகோதரர் ஜோசப் முதல் உலகப்போரில் பங்கேற்று காயமுற்று பலியானார். இதனால் ஹார்வர்டு படிப்பை ஒத்தி வைத்துவிட்டு கடற்படையில்சேர்ந்தார். அப்பணி முடித்து விட்டு வந்து ஹார்வர்டில் அரசு நிர்வாகப்படிப்பு படித்தார். பின்னர் வர்ஜீனியா சட்டப்பள்ளியில் சட்டப்படிப்பு படித்தார். அப்போது ராபர்ட் எனும் பாபிக்கு காதலும் வந்தது. தனது அக்காவின் அறைத்தோழியான ஈதல் சாகல் என்பவரை காதலித்து மோதிரம் போட்டு கைபிடித்தார். பின்னர் 1951ஆம்ஆண்டு வழக்குரைஞர் பணிக்கான பார் தேர்வு எழுதி வென்றார்.

இதன் பின்னர் அமெரிக்க நீதித்துறையில் குற்றப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார். சில ஆண்டுகளிலேயே  ஜான் எஃப் கென்னடி அதிபர் தேர்தலில் நின்றார். அவருக்கு பிரசாரம் செய்ய தனது பதவியை ராஜினாமா செய்தார். செனட்டின் துணைக்கமிட்டி ஆலோசகராக பணியாற்றினார். அங்கும் ஜான் மெக்கார்த்தி என்ற நேர்மையில்லாத ஆள் உள்ளே நுழைய இருவருக்கும் முட்டிக்கொண்டது. அவர் பற்றிய புகாரை ஊடகங்களுக்கு வாசித்துவிட்டு அந்த வேலையையும் கைவிட்டார்.

ராபர்ட் சிறுபான்மையினர் மீதான அக்கறையும் பரிவும் கொண்டவர். அதற்காக குரல் எழுப்பி வந்தவர்களின் முக்கியமானவரும் கூட.

ஜான் எஃப் கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட அந்த ஆண்டே தனது அரசு வழக்குரைஞர் பணியையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு செனட் உறுப்பினராகும் முயற்சியில் இருந்தார். அப்போது இவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுகொண்டிருக்கையில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டார். சகோதரருக்கு அடுத்தபடியாக ராபர்ட் புதைக்கப்பட்டார்.

நன்றி - பயோகிராபி வலைத்தளம்.