சில பானங்களை கூலிங்காக குடிக்கவேண்டிய அவசியம் என்ன?
giphy.com |
மிஸ்டர் ரோனி
சில பானங்களை கூலிங்காக குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்?
பொதுவாகவே மூளை கொடுக்கும் சிக்னல்களில்தான் நம் உடல் இயங்குகிறது. ஆச்சி மோர் குடிக்கலாமா, டெய்லி கம்பெனியின் பன்னீர்சோடா, அல்லது மாங்கனிச்சாறு குடிக்கலாமா என்பதெல்லாம் உங்கள் தாகம் பொறுத்ததல்ல. குறிப்பிட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. எனவே குறிப்பிட்ட பானங்களை கேட்டு வாங்கிக் குடிக்கிறோம்.
பெப்சி போன்றவற்றை குளிர்ந்த நிலையில் இல்லாமல் குடித்தால் இரும்புச்சத்து டானிக் போலவே இருக்கும். எனவே அதனை கூலிங்காக குடியுங்கள் என அக்கம்பெனியே விளம்பரம் செய்கிறது. இந்த பானங்கள் நம் நாக்கிலுள்ள சுவை உணர்வை மட்டுப்படுத்துகின்றன. எனவே நமக்கு கோலா குடித்தால் நன்றாக இனிப்பாக உள்ளது போலத் தெரிகிறது. இதை எப்படி பார்க்கலாம் என்றால் டீ குடிப்பதை விட கூலிங் கோலா ஓகே என்றளவு மனிதர்கள் இதற்கு அடிமையாகிறார்கள்.