சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!


johnny depp jail GIF
giphy.com


சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி!


பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது.

பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது.

“இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளியேறியவர்கள் மறுவாழ்வுக்கு ஏ.ஐ. பயிற்சி உதவும்” என்கிறார் புலாலகா. சிறைவாசிகளை ஒதுக்கிவிடாமல் அவர்களை சமூகத்திற்கு அழைத்து வாழும் வழிவகைகளுக்கு யோசிக்கும் பின்லாந்து அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்தானே!

தகவல்: WIRED

நன்றி - தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்