இடுகைகள்

குடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹைடெக் மாத்திரை, மரபணு நோய்களை ஆராயும் முறை!

படம்
  ஹைடெக் மாத்திரை தடுப்பூசி, இன்சுலின் என பலரும் ஊசி வழியாக மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த  ஊசி வழி மருந்தை, மாத்திரை வடிவில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதுதான் அலெக்ஸ் ஆப்ராம்சனின் ஐடியா. அலெக்ஸ் கண்டறிந்துள்ள ஹைடெக் மாத்திரையில் சோமா (Soma)என்ற சிறு கருவி உள்ளது. இதனை சாதாரண மாத்திரை போல விழுங்கினால் போதும்.  உணவுக்குழாய் வழியே வயிற்றுச்சுவர்களுக்குச் செல்லாமல் மருந்து ரத்தவோட்டத்தில் எளிதாக கலந்து விடுகிறது. எலிகளிடமும், பன்றிகளிடமும் செய்த முதல்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது அலெக்ஸ் குழு.  மரபணு நோய்களை ஆராயும் முறை மனித நோய்களுக்கு காரணமாகும் மரபணுக்களை அடையாளம் கண்டால், நோய்களை முன்னரே கண்டறிந்து தடுக்கலாம். நோய் ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைத்து நோய்களை தடுப்பதே ஆராய்ச்சியாளர்களின்  எண்ணம்.  அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் ஷின் ஜின், ஜீன் தெரபி பற்றி ஆய்வு செய்து வருகிறார். “தொடக்கத்தில் ஒரு நேரத்தில் ஒரு செல் அல்லது ஒரு மரபணு என்று ஆராய முடியும

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி 

சில்வர் பாயில் ஸ்வீட்டுகள் உடலைப் பாதிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சாக்லெட்டுகளை சாப்பிட்டிருப்போம். அதிலும் பல்வேறு சில்வர் பாயில்களை அகற்றாமல் சாப்பிடுவது இயல்பானது. இது உடலை பாதிக்குமா? இந்த சில்வர் பாயிலை இறந்த மாடுகளின் குடலில் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதத்தில் செய்தி எழுதியிருந்தார்கள். இயற்கையான பொருள் ஓகே. ஆனால் இந்த சில்வர் அல்லது அலுமினிய பாயில் பொருட்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இது உடலுக்கு பாதிப்பு தரும் அளவில் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை. திருப்தியாக பால் ஸ்வீட்டுகளை கடித்துச் சாப்பிடுங்கள். நன்றி - பிபிசி 

உடல்நலத்திற்கு குடல் நலம் மிக முக்கியம் - மேகன் ரோசி

படம்
நேர்காணல் மேகன் ரோசி, ஊட்டச்சத்து வல்லுநர், கிங் கல்லூரி லண்டன் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும்போது முத்தமிட்டால் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் என்கிறீர்களே? நம்முடைய எச்சிலில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன.அவை முத்தமிடும்போது இணையரின் வாயிற்குள் செல்கிறது. இது அவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுகிறது. உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். எனவே தம்பதிகள் தம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் எப்படி வயிறு சார்ந்த உணவு வல்லுநர் ஆனீர்கள். என்னுடைய பாட்டி குடல் சார்ந்த புற்றுநோயால் காலமானார். தினசரி, சிகிச்சை பலனளிக்காமல் அவர் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டேன். பலரும் சிறுநீரகம், குடல் பாதிப்பு என இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை. எனவே நான் குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். இதன் விளைவாகவே  உணவு மீது ஆர்வம் கொண்ட நான், குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் குழு கூட பதற்றம் கொண்டு அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் குடல் சா