ஹைடெக் மாத்திரை, மரபணு நோய்களை ஆராயும் முறை!
ஹைடெக் மாத்திரை
தடுப்பூசி, இன்சுலின் என பலரும் ஊசி வழியாக மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊசி வழி மருந்தை, மாத்திரை வடிவில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதுதான் அலெக்ஸ் ஆப்ராம்சனின் ஐடியா. அலெக்ஸ் கண்டறிந்துள்ள ஹைடெக் மாத்திரையில் சோமா (Soma)என்ற சிறு கருவி உள்ளது. இதனை சாதாரண மாத்திரை போல விழுங்கினால் போதும். உணவுக்குழாய் வழியே வயிற்றுச்சுவர்களுக்குச் செல்லாமல் மருந்து ரத்தவோட்டத்தில் எளிதாக கலந்து விடுகிறது. எலிகளிடமும், பன்றிகளிடமும் செய்த முதல்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மனிதர்களிடம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது அலெக்ஸ் குழு.
மரபணு நோய்களை ஆராயும் முறை
மனித நோய்களுக்கு காரணமாகும் மரபணுக்களை அடையாளம் கண்டால், நோய்களை முன்னரே கண்டறிந்து தடுக்கலாம். நோய் ஏற்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து, அவற்றை மாற்றியமைத்து நோய்களை தடுப்பதே ஆராய்ச்சியாளர்களின் எண்ணம். அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் ஷின் ஜின், ஜீன் தெரபி பற்றி ஆய்வு செய்து வருகிறார். “தொடக்கத்தில் ஒரு நேரத்தில் ஒரு செல் அல்லது ஒரு மரபணு என்று ஆராய முடியும் சூழல் இருந்தது. தற்போது நிலைமை மாறிவருகிறது” என்றார் ஷின் ஜின். இவரது ஆய்வுமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. புதிய ஆய்வுமுறையைப் பயன்படுத்தி மரபணு மாற்றம் மனநிலையை எப்படி பாதிக்கிறது என ஆராய்ந்து வருகிறார்.
மேற்கோள், தகவல்
https://www.scripps.edu/faculty/jin/
https://www.nytimes.com/2019/02/07/health/oral-pill-insulin.html
https://www.agabramson.com/
கருத்துகள்
கருத்துரையிடுக