டைம் இதழில் இடம்பிடித்த கலைத்துறை பிரபலங்கள்! பீட்டே டேவிட்சன், குவிண்டா பிரன்சன், மிலா குனிஸ்
குவின்டா ப்ரன்சன்
quinta brunson |
குவின்டா ப்ரன்சனை வெறும் எழுத்தாளர் என்று கூறிவிடமுடியாது. அவர் தயாரிப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் என பொறுப்புகளை ஏற்று செய்தார். தான் செய்யும் வேலையை மாணவராக கற்றுக்கொள்ளவும், அதில் தேர்ந்த குருவாகவும் இருக்க முடிவது ஆச்சரியம்தான். டிவி தொடர்களில் நிறைய மாற்றங்களை தனது நடிப்பு, தயாரிப்பு மூலம் செய்து வருகிறார்.
அப்போட் எலிமெண்டரி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பொதுக்கல்வியில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் வரும் நகைச்சுவையில் பிரச்னைகளை பேசுவதுதான் குவின்டாவின் தனித்துவம். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது நிகழ்ச்சி மூலம் சிறப்பாக இணைத்து அறிய வேண்டுவனவற்றை அறிய வைப்பதுதான் குவிண்டாவின் புத்திசாலித்தனம். தடைகளை உடைத்து நகைச்சுவை மூலம் நிறைய கதவுகளை குவின்டா திறந்து வைத்துள்ளார்.
லெப்ரோன் ஜேம்ஸ்
கூடைப்பந்தாட்ட வீரர்
மிலா குனிஸ்
ஆங்கிலப்பட நடிகை
மிலா குனிஸ், அமெரிக்காவிற்கு தனது அம்மா, சகோதரருடன் வந்தவர். நடிகர் ஆஸ்டின் கட்சரை மணந்துகொண்டவர் மிலா குனிஸ். இருவருமே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிரச்னையில் அங்குள்ள மக்களுக்கு நிதிதிரட்டி உதவியுள்ளனர்.
தொழில் சார்ந்து தான் ஏற்ற பாத்திரம் அம்மா, மகள், பாட்டி, தோழி என ஏதாகிலும் அதில் தனக்கான முத்திரையைப் பதித்துள்ளார் மிலா குனிஸ். தான் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதில் மிலா குனிஸ் எப்போதும் கவனமாகவே இருக்கிறார். அதைக்குறித்த பெருமையுடன் வாழ்கிறார் என்று கூறலாம்.
சால்டனா
ஆங்கிலப்பட நடிகர்
பீட்டே டேவிட்சன்
தனிக்குரல் கலைஞர்
பீட்டே டேவிட்சன் ஜஸ்டின் பைபரை ரோஸ்ட் செய்தபோது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது பீட்டே டேவிட்சன் பற்றி எந்த செய்தியையும் அறியவில்லை. அந்த காலத்தில் அவர் மைக்கைப் பிடித்து அமெரிக்காவின் இரட்டை கோபுர விபத்தில் இறந்து போன தனது அப்பாவைப் பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு எனது போனுக்கு வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய சிறுமி, தன்னுடைய நண்பர் ஒருவர் உங்களுடன் பேச விரும்புகிறார் என்று சொன்னாள். அப்போதுதான் முதல்முறையாக பீட்டே டேவிட்சனின் முகத்தை போனின் திரையில் பார்க்கிறேன். என்னை சந்திக்கவேண்டுமென கூறினார். நானும் சரி என்றேன். பிறகு இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு சிலமாதங்கள் கழித்து எனது கனவான எஸ்என்எல்லில் பங்கேற்கும் வாய்ப்பு பீட்டே ஜாக்சன் மூலம் கிடைத்தது. அதை மறக்கவே முடியாது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளப்போகிறேன் என்று அறிந்ததும் என் அம்மாவுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முதல்நாள் இரவு நான் பீட்டே ஜாக்சனின் அபார்ட்மென்டிற்கு சென்றேன். அங்கு அவர் என்னை நண்பனாக நடத்தி சிரிக்க வைத்தார்.
பீட்டே ஜாக்சன் நம்பிக்கை தரும் கலைஞனாக இருப்பதற்கு முக்கியமான காரணம், அவரின் அடிப்படை இயல்புகளை அவர் மறைத்துக்கொள்ளாததுதான். அவர் எப்படிப்பட்ட மனிதர் என எப்போதும் மறைத்துக்கொண்டதில்லை. வெற்றிக்கும் பல்வேறு மனிதர்களுடன் இணைந்துகொள்வதற்கும் இதுவே அவருக்கு உதவுகிறது என நினைக்கிறேன். பீட்டே ஜாக்சனுக்கு வயது 28. அவர் இன்னும் செய்வதற்கான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
Time Magazine
கருத்துகள்
கருத்துரையிடுக