இரண்டாவது முறையாக கால வேட்டையர்களைத் தடுக்கும் பத்திரிகையாளர் குழு - கால வேட்டையர்கள் - 2

 

 

 

 

 

Lion-Muthu Comics: August 2016

 

 

கால வேட்டையர்கள் நூலில் உள்ள இரண்டாவது கதை.......


இதில், புதுமையான பகுதிகளை சுற்றிப்பார்க்க ஆர்வமுடையவர்களை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. அவர்களின் பின்புலங்களை விசாரித்து முடிந்தளவு தனிநபர்களாக இருக்கும்படி பார்த்து சுற்றுலாவிற்கு கூட்டிச்செல்கிறது. இப்படி செல்பவர்கள் எவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை. இதுபற்றி புலனாய்வு செய்ய பத்திரிகையாளர் மீண்டும் மாறுவேடத்தில் சுற்றுலா பயணியாக செல்கிறார். அப்படி செல்லும்போது, பயணத்தில் புதுமணத்தம்பதியாக முதல் கதையில் பார்த்தோமே ஆர்வக்கோளாறு லௌரியும் இருக்கிறாள். அவளுக்கு அந்த பயண பின்னணி தெரியாது. ஆனால் ஒருமுறை பத்திரிகையில் டிராவல்ஸ் விளம்பரத்தை பார்க்கிறாள். அது வினோதமான அறிவிப்பாக இருக்கிறது. மேலும், அதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செ்ன்று விசாரிக்கிறாள். அங்கு வயதான பெண்மணி தன்னுடைய மருமகள் பயணத்திற்கு சென்றாள். ஆனால் திரும்ப வீடு திரும்பவில்லை என புகார் கொடுத்தபடி நிற்கிறாள். இதுபற்றி விசாரிக்க முற்படுகையில் அவளை குள்ளர்களின் ஆட்கள் சூட்களில் கடத்துவதற்கு நெருங்குகிறார்கள். இதை அடையாளம் கண்ட லௌரி சாமர்த்தியமாக தப்புகிறாள். பிறகு பயணத்திற்கு ஆண்கள் மேல் மையல் கொண்ட அத்தை ஒருவரையும் ஒப்புக்கொள்ள செய்து விடுகிறாள். இதுதான் லௌரியின் கதை.

இந்த காமிக்ஸ் கதையில் யுலா கிளைமேக்ஸில் வரும் போலீஸ் போல கடைசியில்தான் வருகிறாள். அவளும் போலீஸ்தானே? மற்றபடி அனைத்து ஆக்சன்களையும் பத்திரிகையாளரும், லௌரியுமே பார்த்துக்கொள்கிறார்கள். செமத்தியான ஆக்சன்கள் கதை நெடுக உள்ளன. அதிலும் மர்ம மாளிகை, தூசு படிந்த அறை, போன்களுக்கு தடை என திகில் கதைக்கான டெம்பிளேட். அத்தனையும் அம்சமாக பொருந்துகிறது. அந்த இடத்தில் என்ன திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் குள்ளர்கள் என்பதை யுலா அறிந்து தனது பத்திரிகையாளர் தோழர் மூலம் எப்படி அதை முறியடிக்கிறாள் என்பதே கதை.

இரண்டு கதைகளுமே கருப்பு வெள்ளைதான். அத்தனையும் தரமான வசனங்கள், சண்டைக்காட்சிகள் மூலம் வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது.


கோமாளிமேடை டீம்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்