மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

 










தி பைசைக்கிள் புராஜெக்ட்


மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர். 

அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது..

இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான். 

ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள்ளிக்கு பல கி.மீ. நடந்து சென்று படித்திருக்கிறார். சைக்கிள் என்பது அப்போதைக்கு அவருக்கு பெரிய கனவு. 

திட்டத்தில் நிறைய தடைகளை ஹேமந்த் எதிர்கொண்டிருக்கிறார். சைக்கிள்களை பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து பெறுவது கடினமாக இருந்திருக்கிறது. அதற்கென ஒப்பந்தமானவர்கள் வேலையைப் பார்த்து பதறி ஓடியிருக்கிறார்கள். பிறகு பழுதான சைக்கிளை அப்படியே கொடுத்தால் வாங்குபவர்கள் மனது கஷ்டப்படும் என பெயிண்ட் அடித்து சற்று பளிச்சென மாற்றும் ஐடியா உருவாகியிருக்கிறது. 

rd







கருத்துகள்