உணர்வுகளால் ஆனது சமையல்! - கடிதங்கள்- கதிரவன்

 










16.1.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

இங்கு ஞாயிறு. சிறப்பு திரைப்படம் போல சிறப்பு லாக்டௌன். அறையில் அடைந்து கிடப்பது பெரும் அவஸ்தை. ஊருக்குப் பொங்கலுக்குப் போனவர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யும் ஆப்ஷனைப் பெற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். நான் அமேசானில் ஆர்டர் செய்த புத்தகங்கள் வந்துவிட்டன. இரு புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டன. இன்னும் ஒரு புத்தகம் மாத இறுதியில் கிடைக்கும். மூன்றாவது நபரிடமிருந்து அமேஸான் வாங்கிக் கொடுப்பதால், காலதாமதம் என விளக்கம் கொடுக்கிறார்கள். 

ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாத இதழில், நடிகர் நஸ்ரூதின்ஷா பேட்டி படித்தேன். சமகாலத்தைப் புரிந்துகொண்டு ஓடிடி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். நேர்காணலில் நிறைய விஷயங்களை காலப்போக்கில் புரிந்துகொண்ட அனுபவத்தில் பேசியிருந்தார். சினிமாவில் முஸ்லீம்கள் பங்களிப்பு, முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை, பிரிவினை, புதிய இயக்குநர்கள் என அனைத்துக்கும் விளக்கமாக பதில் சொல்லியிருந்தார். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் தீனி. சசி என்பவர் இயக்கிய படம். அதிக உடல்நிலை கொண்ட செஃப் ஒருவர் பற்றியது. 

சமையல் கணக்குகளால் ஆனதல்ல. உணர்வுகளால் ஆனது. அதனை மகிழ்ச்சியான மனதோடு சமைக்க வேண்டும் என படம் சொல்லுகிறது. அசோக் செல்வன், ரிதுவர்மா, நித்யா என்ற 3 பேரின் பாத்திரங்களும் சிறப்பாக உள்ளது. நித்யாமேனனின் நடிப்பில் மனதை கொள்ளையடித்திருக்கிறார். சமையல் பற்றிய படம். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். நன்றி!

அன்பரசு


  



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்