75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுத்துறை நிறுவனம்!
75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுநிறுவனம்!
1920ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.
1981ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷனை தேசியமயமாக்கி உத்தரவிட்டார்.
1991ஆம் ஆண்டு, பிஐசிஎல் நிறுவனம் நலிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு மத்திய அரசு, பிஐசிஎல் நிறுவனத்தை பல்வேறு சீர்திருத்தங்களால் மீட்க முடியவில்லை என்று அறிவித்தது.
2017ஆம் ஆண்டு, நிதி ஆயோக் அமைப்பு, நிறுவனத்தை மூடிவிடலாம் என ஆலோசனை தெரிவித்தது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிவப்பு நிற கட்டிடத்தில் அமைந்திருந்த பிஐசிஎல் நிறுவனம், லால் இம்லி என்ற பிராண்டில் செல்லமாக அழைக்கப்பட்டது. கம்பளி தொடர்பான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால், மான்செஸ்டர் ஆப் ஈஸ்ட் என வழங்கப்பட்டது.
சிறப்பெல்லாம் பழைய கதை. இப்போது நிறுவனத்தை மூடப்போகிறார்கள்.
தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (NTC) என்ற நிறுவனத்தையும் பிஐசிஎல் நிறுவனத்தோடு சேர்த்து மூடுகிறார்கள். இந்த செயல்பாடு,இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தில் நடைபெறுகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
என்டிசி என்ற நிறுவனமும் 1968 ஆம் ஆண்டிலேயே நலிவுற்று வருகிறது என அறிக்கை வெளிவிட்டாயிற்று. இப்போதுதான் இறுதியாக அந்த நிறுவனத்தை மூட முடிவு செய்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் தொழிலதிபரான சர் அலெக்ஸாண்டர் மெக் ராபர்ட், 1920ஆம் ஆண்டு பிஐசிஎல் நிறுவனத்தை தொடங்கினார். தாரிவால் என்ற பிராண்டில் கம்பளி பொருட்களை தயாரித்து விற்கத் தொடங்கியது.
2001, 2005, 2011 காலகட்டங்களில் இந்திய அரசு பிஐசிஎல் நிறுவனத்தை நல்லநிலைக்கு கொண்டுவர 211 கோடி, 47 கோடி , 338 கோடி என நிதி ஒதுக்கீடு செய்தது. அப்படியும் கூட நிறுவனத்தை சரியான நிலைக்கு கொண்டு வர உதவவில்லை. நிறுவனத்தை குத்தகைக்கு எடுக்க அனுமதி வழங்குவது, மாநில அரசு கொடுக்கும் நிதி சரியான நேரத்திற்கு கிடைக்காதது ஆகியவை நிறுவனத்தை படுகுழியில் தள்ளியது.
2017ஆம் ஆண்டு நிதி ஆயோக் நிறுவனம், பிஐசிஎல் பொது நிறுவனத்தை மூடுவதற்கான ஆலோசனையை வழங்கியது. நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கான சம்பள நிலுவையை வழங்குவதோடு பிஐசிஎல்லின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது.
2021ஆம் ஆண்டு பிஐசிஎல்லின் இழப்பீடு 106 கோடியாகும். நிறுவனத்தில் பணியாற்றிய 1,209 பணியாளர்கள் விஆர்எஸ் பெற்று அதற்கான நிலுவைத்தொகையை பெறவிருக்கிறார்கள்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக