பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

 












 பச்சை விரியனின் விஷத் தாக்குதல்!




இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 

கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலின் செல்களைத் தாக்கி அழிக்கிறது.  பாம்பினால் கடிபட்டவர்களுக்கு பாலிவேலன்ட்(Polyvalent antivenom) எனும் விஷமுறிவு மருந்து வழங்கப்படுகிறது. 

உலகம் முழுக்க ஆண்டுதோறும் 1 கோடியே 40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதில் விஷத்தால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 1,25,000. இதில்,  77 சதவீதம் பேர் மருத்துவமனைகளுக்கு வரும் முன்னரே பாம்பு விஷத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு, ஊனம் ஆகிய சிக்கல்களை சந்தித்துள்ளனர். இந்தியாவில் ஜூனிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் பாம்பின் தாக்குதல் தீவிரமாக உள்ளது. இதில், விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் 58 சதவீத அளவில் பாம்புகளால் கடிபட்டுள்ளனர். 




Be especially chary of green pit vipers

The hindu july 17,2022

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்