சேறாய் அள்ளிவீசப்படும் அலுவலக அரசியல் மலம்! கடிதங்கள் - கதிரவன்
5.2.2022
மயிலாப்பூர்
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
நான் நேற்று கார்ட்டூன் கதிரவனிடம் பேசினேன். நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு வந்துவிட்டாராம். அவர் மயிலாப்பூர் வருகிறேன் என்றார். ஆனால் சில நாட்களில் என்ன வேலையோ உடனே ஊருக்குப் போய்விட்டார். இனி சென்னைக்கு வரும்போது நானே அவரைப் போய் பார்த்து லெஜண்ட் கலைஞருக்கு மரியாதை செய்ய நினைத்துள்ளேன்.
ரஷ்மி பன்சல் எழுதிய நூலைப் படித்து முடித்தேன். இருபது தொழிலதிபர்கள் பற்றிய கதை. தமிழில் நன்றாகவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. லஷ்மி விஷ்வநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆபீசில் யார் பெயர் மூளையின் ஐக்யூ சார்ந்து முன்னே இருக்கும் என சதி ஆலோசனைகள் நடைபெறுகிறது. அதிகளவு தாக்குதலை என்மீதுதான் கோ ஆர்டினேட்டர் தொடுக்கிறார்.
வசை, அவதூறு, வீண்பழி, சாடை பேசுவது என அனைத்துக்கும் இப்போது புதிதாக பழகி வருகிறேன். வீட்டிலேயே அப்பாவிடம் இதை எதிர்கொண்டிருப்பதால், பெரிய அதிர்ச்சி இல்லை. வேலை மனநிலை தான் கெட்டுப்போய்விடுகிறது. எவ்வளவு நாள் தாங்க முடியும் என்று பார்ப்போம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் படித்து வருகிறேன். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்க லிஸ்டில் எந்த நூலும் இல்லை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக