உண்ணிச்செடியில் கைவினைப்பொருட்களை செய்யலாம்!

 














உண்ணிச்செடியில் என்ன செய்யலாம்?


கர்நாடக மாநிலத்தில் சோளகர் பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், வருமானத்திற்கு கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் லாந்தனா எனும் உண்ணிச்செடியைப் பயன்படுத்துகின்றனர். பழங்குடிகளுக்கான கைவினைப் பயிற்சியை பெங்களூருவிலுள்ள அசோகா சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளை (ATREE) வழங்கிவருகிறது. மேற்கிந்திய மலைத்தொடரில் உள்ள காடுகளின் 40 சதவீதப் பரப்பை, உண்ணிச்செடி ஆக்கிரமித்துள்ளது. 

உண்ணிச்செடிக்கு தாயகம், தென் அமெரிக்கா. 1800ஆம் ஆண்டு, இத்தாவரம், பிரிட்டிஷார் காலத்தில் இந்தியாவுக்குள் அலங்காரச்செடியாக வந்தது.  நிலப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து வளரும் தன்மை கொண்டது உண்ணிச்செடி. இந்திய அரசின் வனத்துறை அறிக்கை 2021 இல், 29 ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உண்ணிச்செடியும் உண்டு. இந்திய நிலப்பரப்பில், ஆக்கிரமிப்புத் தாவரங்கள், 9,793 ச.கி.மீ தூர நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. 

2003ஆம் ஆண்டு, மகாதேஸ்வரா மலையில் வாழும் சோளகர்கள், லாந்தனா கைவினைப்பொருட்கள் மையத்தை உருவாக்கினர். சிறு தொழில்நிறுவனமாக உள்ள இந்த மையம், 650 பழங்குடிகளுக்கு கைவினைப் பொருட்களை செய்ய பயிற்சியளித்துள்ளது. இந்த வகுப்பில் பயிற்சி பெற்றவர்களில் 40 சதவீதம் பேர், பெண்கள். உண்ணிச்செடிகளை வெட்டி வந்து அதனை 4 மணி நேரம் வேக வைத்து பல்வேறு பொருட்களை செய்யத் தொடங்குகின்றனர். வேக வைப்பதால் செடியிலுள்ள முட்கள் எளிதாக நீக்கப்படுகின்றன. தண்டுகள், எளிதாக வளையும் தன்மையையும் பெறுகிறது. 


Twist in the lantana tale

sandeep hanchanale, siddappa setty

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29739-2015-11-25-17-15-19

https://medium.com/centre-for-social-and-environmental-innovation/twist-in-the-lantana-tale-a870d5c7c33

கருத்துகள்