இடுகைகள்

சிங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

படம்
                   மிருகராஜூ இயக்கம் குணசேகர் படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி... பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை. படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத

அறிவியல் பிட்ஸ் - 2070ஆம் ஆண்டில் காணாமல் போகும் கள்ளி!

படம்
  2070ஆம் ஆண்டில் அழியும் கள்ளி! வெப்பம் அதிகமுள்ள நிலப்பரப்பில் கள்ளி வகை தாவரங்கள் வாழ்வது நாம் அறிந்ததுதான். அண்மையில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆய்வில், கள்ளிகள் கூட வெப்பம் அதிகரித்து வந்தால் அழிந்துவிடும் என கூறியுள்ளனர். உலகிலுள்ள 60 சதவீத கள்ளி இன தாவரங்கள் 2070ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் அழிந்துவிடும் என மதிப்பிட்டுள்ளனர். இதுபற்றிய ஆய்வு நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் 400க்கும் அதிகமான தாவர மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் அட்லாண்டிக் காடுகள் என பல்வேறு சூழல்களில் கள்ளி இன தாவரங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த கள்ளிகள் காணப்படுகின்றன. விளைச்சல் நிலங்கள் அதிகரிப்பு, நிலத்தின் வளம் இழப்பு, பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகியவை கள்ளி அழிவிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.  “நாங்கள் செய்த ஆராய்ச்சியில் கள்ளி இன தாவரங்கள் 60 முதல் 90 சதவீதம் அழிய வாய்ப்புள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாக உள்ளது” என அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் பைலட் க

இந்தியாவின் அடையாளங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கடந்து வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளது. பல்வேறு சோகமான சம்பவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் நாம் பார்த்துள்ளோம். இந்தியாவின் அடையாளங்கள் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வருகிறது. கொடி, சிங்கம் ஆகியவைதானே அவை பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.  இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் கொண்ட முத்திரை நாணயம், பணம், பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் பதியவைக்கப்படுகிறது. 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி தேசியகீதமான வந்தே மாதரம் பாடலை உருவாக்கினார். சிங்க சின்னம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கம் அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இருந்தாலும் தேசிய விலங்கு என்பது புலியாக உள்ளது.  தேசியக்கொடி  1947ஆம்ஆண்டு ஜூலை 22 அன்று, அரசியலமைப்பு ஹாலில் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமராக பதவியேற்க உள்ள நேரு ஆகியோர் தேசியக்கொடியை தீர்மானிக்க கூடியிருந்தனர். நேரு, தேசியக்கொடியின் நிறம், சர்கா ஆகியவற்றை எப்படி இருக்கவேண்டும் என கூறியிருந்தார். 1906ஆம் ஆண்டு சுயராஜ்ய கொடியை அறிமுகப்படுத்தியிருந்த

காட்டிற்குள் சென்று தான் யார் என்பதை நிரூபித்துக்காட்டும் சிங்கம்! - வைல்ட் - டிஸ்னி

படம்
                  வைல்ட் Directed by Steve "Spaz" Williams Produced by Clint Goldman Beau Flynn Screenplay by Ed Decter John J. Strauss Mark Gibson Philip Halprin Story by Mark Gibson Philip Halprin சாம்சன் என்ற சிங்கம் , ரையான் என்ற மகனுடன் வனவிலங்கு காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றிருக்கிறது . ரையோன் குட்டி சிங்கமாக இருந்தாலும் அதற்கு கர்ஜனை செய்யவருவதில்லை . பூனை போல மியாவ் என்றுதான் குரல் வருகிறது . இதனால் ரையோன் மனம் தளர்ந்து போகிறது . கூடவே இருக்கும் பாம்பு , ஒட்டகச்சிவிங்கி , கரடிகளின் கிண்டல் வேறு மனதைக் காயப்படுத்துகிறது . இதனால் வைல்ட் எனும் காட்டிற்கு சென்று வாழ்ந்தால்தான் தன் இயல்பைப் பெறமுடியும் என நம்புகிறது ரையான் இதற்கான முயற்சியில் தவறுதலாக வண்டி ஒன்றில் ஏற , அந்த வண்டி நகருக்கு செல்கிறது . தன் மகனை தேட சாம்சன் தனியாகத்தான் புறப்படுகிறார் . ஆனால் அவரது இம்சை நண்பர்களும் உடன் வர அவர்களின் கோளாறான கோக்குமாக்கு வேலைகளை சமாளித்து எப்படி சாம்சன் தனது மகனைக் கண்டுபிடித்தது என்பதுதான் கதை .    படத்தைப் பார்த்து

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்