அறிவியல் பிட்ஸ் - 2070ஆம் ஆண்டில் காணாமல் போகும் கள்ளி!

 















2070ஆம் ஆண்டில் அழியும் கள்ளி!

வெப்பம் அதிகமுள்ள நிலப்பரப்பில் கள்ளி வகை தாவரங்கள் வாழ்வது நாம் அறிந்ததுதான். அண்மையில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆய்வில், கள்ளிகள் கூட வெப்பம் அதிகரித்து வந்தால் அழிந்துவிடும் என கூறியுள்ளனர். உலகிலுள்ள 60 சதவீத கள்ளி இன தாவரங்கள் 2070ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் அழிந்துவிடும் என மதிப்பிட்டுள்ளனர். இதுபற்றிய ஆய்வு நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் 400க்கும் அதிகமான தாவர மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் அட்லாண்டிக் காடுகள் என பல்வேறு சூழல்களில் கள்ளி இன தாவரங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த கள்ளிகள் காணப்படுகின்றன. விளைச்சல் நிலங்கள் அதிகரிப்பு, நிலத்தின் வளம் இழப்பு, பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகியவை கள்ளி அழிவிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.  “நாங்கள் செய்த ஆராய்ச்சியில் கள்ளி இன தாவரங்கள் 60 முதல் 90 சதவீதம் அழிய வாய்ப்புள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாக உள்ளது” என அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் பைலட் கூறினார். பூமியில் உள்ள கடல்களை உள்ளடக்கி அதிகரித்துள்ள வெப்பத்தின் அளவு 1.1 டிகிரி செல்சியசாக உள்ளது. 

 

Global warming even cacti can't take the heat


சூழல் பாதுகாப்பு வலைத்தளங்கள்


Mylittleplasticfootprint.org

மை லிட்டில் பிளாஸ்டிக் ஃபுட்பிரிண்ட் என்ற வலைத்தளத்தில் ஆப் வசதி உள்ளது. இதனை போனில் பதிந்துகொண்டால், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை எப்படி குறைப்பது, அதற்கு மாற்று பொருட்கள் என்ன, தினசரி வாழ்க்கையை பிளாஸ்டிக் பொருட்களை குறைத்து வாழ்வது எப்படி என பல்வேறு ஐடியாக்களை கொடுக்கிறார்கள். 

wwf.org.uk/podcast

உலக கானுயிர் நிதிய அமைப்பின் வலைத்தளம். இதில் நடிகர் மற்றும் வானொலி பிரபலமான செல் ஸ்பெல்மன் கால் ஆப் தி வைல்ட் என்ற பாட்காஸ்டை நடத்தி வருகிறார். இதில் சூழல் அறிவியலாளர்கள், பிரபலங்கள் சூழலைக் காப்பது பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள்.  


சிங்கத்தின் முக்கிய உணவு

முக்கியமான முதன்மை உணவு, காட்டெருமை. ஆண்டுக்கு 1,600 கி.மீ. தூரம் இடம்பெயர்கிறது. மரங்கள் அடர்ந்த இடம், புல்வெளிகள் என இரைதேடி திரிவதால் எளிதாக சிங்கத்திற்கு இரையாகிறது. இதற்கடுத்த முக்கிய உணவு, வரிக்குதிரை. இவை, எதிரிகளிடமிருந்து தப்பிக்க எப்போதுமே குழுவாக அலையும் பழக்கம் கொண்டவை.

நீர்யானையும் சிங்கத்தின் முக்கியமான உணவுதான். ஆனால், நான்கு டன்னுக்கு அதிக  எடையுள்ள விலங்கை சிங்கம் தனது குடும்பத்துடன் ஒன்றாக கூடி வேட்டையாடி உண்கிறது.  

ஆறு மீட்டர் உயரத்தில் உள்ள ஒட்டகச்சிவிங்கியை சிங்கம் தனது முக்கியமான உணவாக கொள்வதில்லை. ஆனால் காயமுற்ற ஒட்டகச்சிவிங்கியை பசியுள்ள சிங்கம் பார்த்துக்கொண்டிருக்காது அல்லவா?  


How it works 2019


the week junior 

16 april 2022

கருத்துகள்