கிளை ஆக்சிலேட் சுழற்சியைக் கண்டறிந்தவர்! ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ்

















 ஹன்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ் (Hans adolf krebs 
1900 - 1981)




1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, ஜெர்மனியின் ஹில்டேஷெய்ம் என்ற நகரில் பிறந்தார்.  இவரது தந்தை, கண், காது, மூக்கு அறுவை சிகிச்சை வல்லுநர். ஹான்ஸ், தனது 25ஆவது வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றார்.  1932ஆம் ஆண்டு ஃபிரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, பாலூட்டிகளின் உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டின் வழியாக யூரியா எப்படி உருவாகிறது என்பதை ஆய்வு செய்து கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சி ஹான்ஸிற்கு, புகழைப் பெற்றுத்தந்தது. 

 யூதரான ஹான்ஸ், 1933ஆம் ஆண்டு ஜெர்மனியை விட்டு வெளியேறினார்.  இங்கிலாந்திற்கு சென்றவர், 1935ஆம் ஆண்டில், அங்குள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் அங்கு உருவாக்கப்பட்ட உயிரிவேதியியல் துறைக்கு பொறுப்பாளரானார்.  அங்கு செய்த ஆராய்ச்சியில்,உடலிலுள்ள செல்களில் ஆற்றல் பரிமாற்றம் நடப்பதை விவரிக்கும் சிட்ரிக் அமில சுழற்சியைக் (Citric Acid Cycle) கண்டறிந்தார். ஆய்வுப்பணிகளில் பெற்ற புகழ் காரணமாக, ஹான்ஸ் 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராயல் சொசைட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953ஆம் ஆண்டு சிட்ரிக் அமில சுழற்சி கண்டுபிடிப்பிற்காக, ஹான்ஸிற்கு மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசை மற்றொரு ஆய்வாளரான ஃபிரிட்ஸ் லிப்மன் என்பவருடன் பகிர்ந்துகொண்டார். 

1957ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அமெரிக்கரான உயிரிவேதியியலாளர்  ஹான்ஸ் கோர்ன்பர்க்குடன் இணைந்து கிளைஆக்சிலேட் சுழற்சியைக் ( Glyoxylate cycle) கண்டறிந்தார். தாவரம், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றில் நடைபெறும்  வேதிவினைகளைப் பற்றிய ஆராய்ச்சி இது.   

https://www.nobelprize.org/prizes/medicine/1953/krebs/biographical/

கருத்துகள்