தொன்மை வரைபடங்கள் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றன?

 










தொன்மை வரைபடங்களின் வரலாறு!


இன்று கூகுள் நிறுவனத்தின் மேப் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் குறைவு. இணைய வசதி இருந்தால், இச்சேவையை உலகின் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம. காணவேண்டிய இடங்களை அடையாளம் கண்டறிய முடியும். இன்று எப்படி சாலையோரம் உள்ள வரைபட பலகை அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடங்களைப் பார்த்து இடங்களைக் கண்டறிகிறோம்.தொன்மைக்காலத்தில் இடங்களைக் கண்டறிய வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  

தொன்மைக்காலத்தில், பிரான்சின் லஸ்காக்ஸிலுள்ள குகையில் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் 16,500 ஆண்டுகள் என அகழ்வராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதில், எருதுகளும், பறவைகளும் குறியீடாக இடம்பெற்றுள்ளன. இவை வரைபடத்தில் நட்சத்திரங்களாக அறியப்படுகின்றன.  

இதைப்போலவே தற்போது  பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படும் தொன்மையான  வரைபடம் ஒன்றுள்ளது.  கி.மு.6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என மதிப்பிடப்படும்  இந்த  வரைபடத்திற்கு, பாபிலோனியன் மேப் ஆஃப் தி வேர்ல்ட் (Babylonian map of the world)  என்று பெயர். 13 செ.மீ. நீளத்தில் கொண்ட களிமண்ணில் உருவாக்கப்பட்ட வரைபடம் இது. இதைக் கண்டறியப்பட்ட பாபிலோன் நகரம், தற்போதைய ஈராக்கின், பாக்தாத் நகர் அருகே உள்ளது. 

இன்றைய நவீன வரைபடங்களின் முன்னோடி, எகிப்தைச் சேர்ந்தவரான கிளாடியஸ் டோலமி (Claudius Ptolemy) ஆவார். கி.பி.100ஆம் ஆண்டில் பிறந்த டோலமி, கணிதம், வானியலில் சிறந்தவர் .  இவர், தன் கணித திறன் மூலம் பிரிட்டன் முதல் ஆப்பிரிக்கா வரை 10 ஆயிரம் இடங்களை வரைபடங்களில் குறித்து வைத்தார்.  இதற்குப் பின்னர், 1569ஆம் ஆண்டு பெல்ஜிய வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்காடர் (Geradus mercador), கடல் மாலுமிகளுக்கென உலக வரைபடத்தை உருவாக்கினார். உருளை வடிவத்தில் இருந்த உலக வரைபடத்திற்கு, மெர்காடர் புரொஜெக்ஷன் (The Mercator projection)என்று பெயர்.  பல்வேறு வடிவத்தில் உலக வரைபடங்களை உருவாக்கிய மெர்காடர், ’அட்லஸ்’ என்ற வார்த்தையும்  உருவாக்கி அறிமுகப்படுத்தினார். 

மெர்காடரின் வரைபடம், மாலுமிகளுக்கு இடங்களை துல்லியமாக அறிந்து வழிகாட்டி உதவியது உண்மைதான். ஆனால், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் வரைபடத்தில் மிகப்பெரிதாக காட்டப்பட்டன என்பதை பல புவியியல் வல்லுநர்கள் ஏற்கவில்லை. இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக நாம் கடல் மற்றும் நிலப்பரப்பை துல்லியமாக கண்காணிக்க முடிகிறது. நவீன இணையவசதி, வரைபடங்களை பெருமளவு மேம்படுத்தியுள்ளது.  

தொன்மைக்காலத்தில் வரைபடங்களை வரைந்தவர்கள், தங்களது உழைப்பை பிறர் திருடாமல் இருக்க, அதில் போலி தெருக்களை உருவாக்கினர். ஒருவரது வரைபடத்தை இன்னொருவர்  நகல் செய்தால், போலியான தெருவும் அதில் வந்துவிடும். இதை வைத்து நகல் வரைபடத்தை எளிதில் அறிய முடிந்தது. 


Find your way around the world of maps

the week junior uk 9 apr 2022

https://www.nationalgeographic.org/encyclopedia/gerardus-mercator/

கருத்துகள்