அன்டார்டிகாவின் வெடால் கடலில் வாழும் மீன்கள்!
லட்சக்கணக்கான
மீன்கள் வாழும் காலனி!
அன்டார்டிகாவில் வெடால் கடல் அமைந்துள்ளது. இங்கு, 500 மீட்டருக்கு கீழே தான் ஏராளமான மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 240 சதுர கி.மீ. தொலைவில் லட்சக்கணக்கான மீன்களின் வளை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை கரன்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலில் வாழும் ஐஸ் மீன்கள் இங்குள்ள சூழலுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆடுன் பர்சர், ஐஸ் மீன்களைப் பற்றிய தகவல்களை கண்டறிந்தார். இவர் ஜெர்மனியின் ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஐஸ்கட்டிகளை துளைத்துச் செல்லும் வாகனத்துடன் சென்றவர், ஆராய்ச்சியை பதிவு செய்துள்ளார். கடல் படுகையை ஒலி மூலம் வரைபடமாக்கியுள்ளார்.
ஆய்வாளர்கள், நீருக்குள் சென்று ஆய்வு செய்தபோது, வட்டவடிவிலான வளையைக் கண்டனர். அங்கு, சிறுகற்களை அடுக்கி அதில் ஐஸ்ஃபிஷ் தனது முட்டைகளை இட்டிருந்தது. இந்த மீன் இனம், அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிரையும் சமாளித்து மீன் வாழப்பழகிவிட்டது.
மூன்று மணி நேரத்தில் அங்குள்ள மூன்று இடங்களில் ஆய்வு செய்தனர். அங்கும் அடர்த்தியான வகையில் ஐஸ்ஃபிஷ் தனது வளைகளை அமைத்திருந்ததைக் கண்டனர். இந்த மீனோடு, ப்ளூகில் எனும் மீனும் தனது வளைகளை அமைத்திருந்ததை உறுதி செய்தனர். வெடால் கடல் பகுதியில் மட்டுமே ஐஸ்ஃபிஷ் இனப்பெருக்கம் செய்திருப்பது எதற்கு என முழுமையாக ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை. இதற்கு அருகில் ரோஸ் கடல்பகுதி அமைந்துள்ளது. பாதுகாப்பான உணவு கிடைக்கும் பகுதியாக வெடல் கடல் பகுதி அமைந்திருக்கலாம். இன்னொரு வகையில், ஒரே இடத்தில் இனப்பெருக்கும் செய்வது ஆபத்தானது. முட்டைகள் அழிந்தால், ஐஸ்ஃபிஷ் இனம் எளிதில் அழிந்துவிடும்.
வெடல் கடல்பகுதியில், இரண்டு கேமராக்களைப் பொறுத்தி அங்கு நடைபெறும் மாற்றங்களை ஆய்வாளர்கள் பதிவுசெய்து வருகிறார்கள். மீன்கள் மீண்டும் அந்த இடங்களை இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்துகின்றனவா என்று கவனித்து வருகிறார்கள்.
Science news
colossal fish colony found in antartica
Science news 12.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக