இந்திய கலாசார இயல்பில் சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்!

 















சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்!



டில்லியைச் சேர்ந்த சௌரப் அகர்வால், அரசுப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் வகுப்புகளை நடத்தி வந்தார். வகுப்பில் ஒருமுறை, "உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ யார் ?" என  பள்ளி மாணவர்களிடம் கேட்டார். அப்போது மாணவர்கள் உடனே ஸ்பைடர் பேன், சோட்டா பீம் என பதில் சொன்னார்கள். ஆனால் மாணவிகள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.

2019ஆம் ஆண்டு மாணவிகளுக்கான பதிலாகவே, பெண் நாயகிகளைக் கொண்ட காமிக்ஸ் நூல்களை சௌரப் உருவாக்கினார். இவர், அமெரிக்காவின் ஹார்வர்ட், ஐஐடி (காரக்பூர்)  ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர். கேல் பிளானட்(Khel planet) பௌண்டேஷன் தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு  திறன்களைக் கற்றுத்தந்து வருகிறார்.  தபங் கேர்ள், சூப்பர்கேர்ள் அவ்னி, பர்பிள் ஃபிளேம் ஆகிய காமிக்ஸ் நாயகிகள், அனைவருமே சமூக பிரச்னைகளைப் பேசுபவர்கள் என்பதே முக்கியமானது.   

தபங் கேர்ள் (தாரா), பள்ளி மாணவர்களுக்கு உதவும் பாத்திரம். சூப்பர்கேர்ள் அவ்னி (மாயா), டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பவர். இதில் மாறுபட்டது, பர்பிள் ஃபிளேம்தான். இந்த பாத்திரம், டிஸ்லெக்ஸியா குறைபாடு கொண்டது. சௌரப் அகர்வாலின் பெண் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களை உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் வாங்கி வாசித்து வருகிறார்கள். தபங் கேர்ள், சூப்பர்கேர்ள் அவ்னி ஆகிய காமிக்ஸ் பாத்திரங்கள் பாலின பாகுபாடு, வல்லுறவு, சைபர் தாக்குதல், கேலி, கிண்டல் ஆகியவற்றை எதிர்க்கிறார்கள். மேற்குலக சூப்பர்ஹீரோக்களைப் போல் அல்லாமல் உடை, செயல் என அனைத்தையும் இந்தியத் தன்மையோடு சௌரப் அகர்வால் குழுவினர் மாற்றியுள்ளனர். 

பர்பிள் ஃபிளேம் காமிக்ஸ் பாத்திரத்தை வடிவமைத்தது உண்மையில் டிஸ்லெக்ஸியா குறைபாடு கொண்ட 13 வயது நித்யா ரதி தான். 2014ஆம் ஆண்டே,இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ பிரியா காமிக்ஸில் அறிமுகமாகிவிட்டார். பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடும் பாத்திரமான பிரியாவை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான ராம் தேவினேனி. 

https://www.dabunggirl.com/purpleflame

https://www.animationxpress.com/latest-news/with-dabung-girl-comics-saurabh-agarwal-aims-to-inspire-and-motivate-young-girls/

https://www.hks.harvard.edu/alumni/connect/community-stories/saurabh-agarwal-creates-superhero

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்