இடுகைகள்

வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வதும். மற்றபடி, ப