இடுகைகள்

இணையம் தணிக்கை- சீனா- லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தணிக்கை எனும் ஒடுக்குமுறை!

படம்
சீனாவின் தணிக்கை ! கடந்தாண்டு சீன அரசு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த தடை விதித்தது . தணிக்கைக்கு உட்படாமல் செய்தி பரிமாறும் அதன் வசதிதான் இதற்கு காரணம் . வெளியுலகில் பயன்படுத்தும் ஃபேஸ்புக் , கூகுள் , டிவிட்டர் ஆகியவற்றுக்கு இணையாக சீனாவில் ரென்ரென் , பைடு , வெய்போ ஆகியவை செயல்பட்டு வருகின்றன . அமெரிக்காவுக்கு அடுத்து மிகப்பெரிய வணிகச்சந்தை கொண்ட நாடு சீனா . புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்களின் சேவைகளை நீங்கள் பெறமுடியாதுதான் ஆனால் அதற்கு ஈடான சீன நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தலாம் . எ . கா . அமேஸான் - அலிபாபா , யூட்யூப் - யூகூ . " அரசியல்ரீதியிலும் , மக்களின் பாதுகாப்பு விஷயங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களை விட உள்நாட்டு நிறுவனங்களை சீன அரசு நம்புகிறது " என்கிறார் பிட்டிஃபென்டர் நிறுவன இயக்குநர் , ஜாகிர் உசைன் . மேலும் அலிபாபா , டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் உலகளவிலான போட்டியையும் எதிர்கொண்டு வருகின்றன . இந்தியாவின் வணிகம் முழுக்க உலக நாடுகளின் கொள்கை சார்ந்த உள்ள நிலையில் சீனாவின் வர்த்தக , தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கற்கவேண்டியது நிறைய உள்ளது .