தீயசக்தி உலகை மாற்றியமைத்து நீதியின் பக்கம் கொண்டு வரத் துடிக்கும் தீயசக்தி இனக்குழுவின் இளம் தலைவர்!
ஐ இன்கார்னேட்டட் கிரேசி ஹெய்ர் சீன காமிக்ஸ் தொடர் அத்தியாயம் 96- டீமன் கல்ட் எனும் தீமை இனக்குழுவில் வாழும் இளம் தலைவர் உடலில் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. அந்த ஆவி, முரிம் கூட்டணி தலைவரின் மூத்த மகனுடையது. அவர் நேர்மை நாணயம் நம்பிக்கை, கடப்பாரை என ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பொறுக்காமல் தேநீரில் விஷம் கலந்துவிட, ரத்தவாந்தி எடுத்து செத்துப்போகிறார். சாகும்போதே புயல் டிராகன் குழு எனும் தீமை இனக்குழுவை அழித்தொழிக்கும் வேலையை செய்கிறார். அக்குழுவின் தலைவர் கூட நாயகன்தான். அவரது ஆவி, தீமை இனக்குழுவைச் சேர்ந்த இளம் தலைவரின் உடலில் புகுந்தால் என்னாகும்? அதுதான் இந்த காமிக்ஸின் மையம். பொதுவாக நாம் அனைவருமே முப்பது வயதிற்குள் உலகில் வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்கிறோம். அதாவது, திருடப்போகிறோமா, அல்லது பிச்சை எடுக்க போகிறோமா என இரண்டு வாய்ப்புகள் நம்முன் உள்ளன. தேர்ந்தெடுப்பதை பொறுத்து வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளோடு அமையும். நன்மை, நீதி, நியாயம் என்று பேசுபவன், அதற்கு எதிரான குலம் என்று கருதப்படும் இடத்தில் அதை நிர்வாகம் செய்யக்கூடிய பதவிக்கு வந்தால் என்ன செய்வா...