இடுகைகள்

ஹிஜாப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி

படம்
  நர்கேஸ் மொகம்மதி நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா? ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.  ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. பெண்கள்,

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்கள

உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்

படம்
அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.  பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம்.  உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது அதில்தான்

இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

படம்
  சௌதி அரேபியா  பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார்.  ஈரான் 1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.  பாகிஸ்தான்  2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது.  இந்தோனேஷியா 2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன.  இந்தியா டுடே  பின்டிரெஸ்ட் 

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன