இடுகைகள்

பாலபாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

படம்
  அரசு சொத்தை விற்பது சுலபம் ! அன்புள்ள கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது . புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல . எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது . அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன் . எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல . இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது . குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர் , எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார் . வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார் . இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்

தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்

படம்
    10 திடீரென நேர்ந்த விபத்து ! 26.2.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன் . இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன் . நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன் . ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன் . புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும் . இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன் . எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே . என் . சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன் . ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார் . அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார் . வருத்தமாக இருந்தது . டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது . நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும் . நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே . 2021 ஆம் ஆண்டில் நூலை செம்மைப்பட

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டார்ட்அப் பற்றிய நூலொன்றைப் படி