இடுகைகள்

நேர்காணல். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி ஆங்கிலத்தில்: பவன் பலி தமிழில்: பியர்சன் கயே ‘’ கருப்பு பண விவகாரத்தில் பி.ஜே.பி காலங்கடந்த புத்திசாலித்தனத்தைக் கொண்டிருக்கிறது ’’ மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தில் நாட்டின் ரகசிய ஒப்பந்தங்களோடு தொடர்புள்ளதாக கூறி இருக்கிறது இது பற்றி தங்களின் பார்வை என்ன?       பி.ஜே.பி இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து முதல்முறையாக இப்போதுதான் அறிகிறார்களா? அக்கட்சி தலைவர்கள் இதனை முன்னரே அறியாதபோது எப்படி முன்னர் இருந்த காங்கிரஸ் அரசினை குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தை ஒரு ஆண்டிற்கு முடக்க முடிந்தது? எப்படி கணக்கு வைத்திருப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்? உடன்படிக்கை பற்றி அறியாத போது, ஏன் இருட்டைப்பார்த்து காலை உதைக்கவேண்டும்?      உடன்படிக்கை 26 ன்படி ஸ்விட்சர்லாந்து, தேவையான தகவல்களை நீதிமன்றத்திற்கு தர முடியும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? துணிச்சலாக உடன்படிக்கையை மீறினால், ஸ்விஸ் அரசு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைத்தராது இல்லையா? எதிர்கட்சியாக இருந்தபோது, பி.ஜே.பி  கணக்குகளை வெளியிடா

கருணாமனோகரனிடன் நிகழ் இதழுக்காக நடத்திய நேர்காணல்.

      எங்கள் குடும்பம் , பார்ப்பனிய சனாதனத்தை வரம்புமீறிக் காப்பாற்றி வந்த குடும்பம். எங்கள் அப்பா அதில் வெறி பிடித்தவர். ஸ்ரீரங்கத்தில் நான் பிறந்தேன். கோவையில் பத்து ஆண்டுகள் இருந்தோம். ஒரு கட்டத்தில் அகோபில மட ஜீயர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாரிடம் உங்களுக்கிருக்கிற ஞானத்திற்கு கோவில் பணி செய்யலாமே என்றார். உடனே யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். எட்டு பேர் கொண்ட எங்கள் குடும்பம் அதன்பிறகு உருக்குலைந்து சிதைந்துபோய்விட்டது. ஸ்ரீரங்கத்திற்கு திரும்பினோம். எனக்கு வயது பத்து. திடீரென வாழ்வின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டோம். ஒரு ஆண்டு அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு திருவானைக்காவல் சத்திரத்தில் சேர்ந்தேன். எங்கள் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தார். வீட்டோடு அவருக்கு உறவில்லை. அம்மாவுக்கு ‘மகோதரம்’ என்ற வியாதி. இப்படி ஐந்து, ஆறு ஆண்டுகள் சத்திரத்தில் கழிந்தன. சத்திரத்தில் எழுபதிலிருந்து எண்பது விழுக்காடு பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அக்கிரகாரச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டவனாக நான் இவர்களோடு இருந்தேன். இது எனக்கு நல்ல வாய்ப்ப