நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி
நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி
ஆங்கிலத்தில்: பவன் பலி
தமிழில்: பியர்சன்
கயே
‘’கருப்பு பண விவகாரத்தில் பி.ஜே.பி காலங்கடந்த
புத்திசாலித்தனத்தைக் கொண்டிருக்கிறது’’
மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தில் நாட்டின் ரகசிய ஒப்பந்தங்களோடு
தொடர்புள்ளதாக கூறி இருக்கிறது இது பற்றி தங்களின் பார்வை என்ன?
பி.ஜே.பி இரட்டை வரிவிதிப்பு
தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து முதல்முறையாக இப்போதுதான் அறிகிறார்களா? அக்கட்சி தலைவர்கள்
இதனை முன்னரே அறியாதபோது எப்படி முன்னர் இருந்த காங்கிரஸ் அரசினை குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தை
ஒரு ஆண்டிற்கு முடக்க முடிந்தது? எப்படி கணக்கு வைத்திருப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும்
என்று கேட்டார்கள்? உடன்படிக்கை பற்றி அறியாத போது, ஏன் இருட்டைப்பார்த்து காலை உதைக்கவேண்டும்?
உடன்படிக்கை 26 ன்படி ஸ்விட்சர்லாந்து, தேவையான
தகவல்களை நீதிமன்றத்திற்கு தர முடியும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? துணிச்சலாக உடன்படிக்கையை
மீறினால், ஸ்விஸ் அரசு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைத்தராது இல்லையா? எதிர்கட்சியாக
இருந்தபோது, பி.ஜே.பி கணக்குகளை வெளியிடாது
மக்களினை அரசு ஏமாற்றுகிறது என முழங்கியது. அரசியல் கட்சி குறிப்பிட்ட நிலைப்பாடு எடுத்துவிட்டு
உடனே அதனை மாற்றிக்கொள்ள முடிகிறது? இப்போது பி.ஜே.பி கூறுகிறது, பெயர்களை வெளியிட
முடியாதென. இப்போதுதான் உடன்படிக்கையினை அதன் தொடர்பை அறிந்திருக்கிறது. தொடர்ந்து
ஆரம்பித்த இடத்திற்கே திரும்பி வந்திருப்பவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுபோன்ற நிலைமையில் மக்கள் அரசியல்வாதிகளை நம்புவது
சிரமமான ஒன்று.
சட்டக்குழுக்கள் இரண்டு வித பார்வையை முன்னே வைக்கிறார்கள். ஒன்று கணக்கு
வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது, இரண்டாவது, அடர்னி ஜெனரல் கூறியபடி, பெயர்களை
வெளியிடுவது நாட்டின் பிரதமர் கையெழுத்திட்ட உடன்படிக்கைகளை பாதிக்கும் என்பதாகும்.
இதில் நீங்கள் எதைத் தேர்வீர்கள்?
ஸ்விட்சர்லாந்து
உடன்படிக்கை தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமான தகவல்களை வரி ஏய்ப்பிற்கான
குற்றத்தைத் தடுக்க நீதிமன்றங்களுக்கு மட்டும் வழங்கலாம் என்று கூறுகிறது. நீதிமன்றத்தில்
மட்டுமே கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் பூஷன் அந்த தகவல்கள் திருடப்பட்டவை
என்று கூறியபோது, நீதிமன்றமானது அது தவறானது என்று கூறிவிட்டது. இந்தியாவின் சட்டங்களின்படி,
கோப்புகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் பெறப்பட்டு இருந்தால், அதனால் நீதிமன்றமும்
வழக்கும் பாதிக்கப்படும். நாம் அரசியல் காரணங்களுக்காக போராடுகிறோமா அல்லது நேர்மையின்மைக்கு
எதிராக இருக்கவேண்டும் என்று போராடுகிறோமா?
பி.ஜே.பி தாமதமாக நடவடிக்கைகளை
எடுக்கிறது என்று நம்புகிறேன். உடன்படிக்கை என்பது சட்டத்திற்கு பயன்படக்கூடிய ஒரு
ஆதாரம். நீதிமன்றங்கள் அவற்றை நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தகவல்கள் திருடப்பட்டால் அவை சட்டத்திற்கு உட்படும் என்று கூறுகிறீர்கள்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதா?
அதுபோன்ற தகவல்களை வைத்து நாம் ஒன்றும் செய்ய
முடியாது. வங்கிகளின்ஐ மூலம் தரப்படாவிட்டால் அத்தகவல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
பட்டியலில் உள்ளவற்றை நாம் ஆதாரமாக கொள்ள முடியாது. தகவல்களுக்கு உறுதியும், சரிபார்த்தலும்,
அங்கீகாரம் தேவை. எந்த தகவல்களாக இருந்தாலும், அதற்கு அங்கீகார முத்திரை அவசியம்.
சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்ஐடி) எப்படி பணியாற்றும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சிறப்பு புலனாய்வுக்குழு பெறும் தகவல்களை நம்பகத்தன்மை
கொண்ட மூலத்திலிருந்து பெறவேண்டும். இப்புலனாய்வுக்குழு உடன்படிக்கையின் கீழ் அதனை
மீறாமல் நம்பகமான ஆதாரங்களின் மூலம் அக்கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைக்கண்டறிய
வேண்டும். கணக்குகளை கண்டறிய பல கோப்புகள் தேவைப்படுகின்றன.
புலனாய்வுக்குழு, ஒரு நீதிபதி போலவும், புலனாய்வாளர்
போலவும், இரு வேறுபட்ட செயல்பாடுகளை செய்யவேண்டும். முடிவுறாத பல வழிகளில் அவர்கள்
பயணிக்கவேண்டியுள்ளது. அவர்கள் தங்களது பயணத்தில் முன்னேறிச்சென்று, தொலைபேசி அழைப்புகளை
ஆராய்ந்து கண்டறிந்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கான தகவல்களை பெற்றால்
மட்டுமே அதிகாரிகள் இதனை வெற்றிகரமாக முடிக்கமுடியும். 17 பேர் கொண்ட இக்குழு அபரிமிதமான
தகவல்களை எப்படி விசாரித்துப்பெற முடியும்? நீதிபதிகள் விசாரிக்க பெறப்படும் இத்தகவல்கள்
அவர்களது கோப்பையின் தேநீர் போன்றதல்ல.
பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அதிலுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க
முடியும் என்று நினைக்கிறீர்களா?
வங்கிகள் அதனை நம்பகத்தன்மையானவை என்று கூறும்
வரை நாம் எந்த சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. விசாரணைகளை போராடித்தான்
செய்யவேண்டும். வங்கிக்கணக்கு வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால், அதன் தகவல்களுக்காக
அந்த வங்கிகளையே சார்ந்திருக்கவேண்டி உள்ளது. வழக்கிற்கான ஆவணங்களையும், அதற்கான நம்பகத்தன்மையினையும்
அவர்கள் உறுதிசெய்து பணபரிமாற்றத்தினை சான்றாக கூற வேண்டும். உடன்படிக்கைப்படி, வங்கிக்கணக்கு
மூடப்பட்டு விட்டால் வங்கி அந்தக்கணக்கு குறித்த எந்த தகவல்களையும் நமக்கு தரவேண்டிய
அவசியமில்லை.
நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் வருமானவரித்துறையினர் ஸ்விஸ் அரசிடம் தகவல்களைப்பெற்று
விசாரணையைத் தொடங்கப்போவதாக கூறியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து..?
ஒருமுறை தகவல்களைப்பெற்றுவிட்டால், வழக்கினை தொடங்கிவிடலாம்.
அவர்கள் சான்றளித்த கோப்புகளை முதலில் பெறவேண்டும். பிறகுதான் விசாரணையில் என்ன வெளியே
வருகிறது என்று தெரியும்.
இந்த வழக்கினை யூகித்தால்
கருப்பு பண விவகாரம் முழுக்க அரசியல் ரீதியானது
என்று கூறலாமா?
நிச்சயமாக, இந்த சர்ச்சை முழுக்க அரசியல்ரீதியானதுதான்.
பி.ஜே.பி மட்டுமே மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த முயல்கிறது. 100 நாளில் எதுவும் நடந்துவிடவில்லை.
நாட்டைப்பற்றி யாருக்கும் அக்கறை, ஆர்வம் கிடையாது.
இந்த விவகாரத்தில் பெரியமீன்கள் தப்பிவிட, சிறியமீன்கள்தான் மாட்டிக்கொண்டனவா?
ஆமாம். பெரிய மீன்கள் தப்பித்துக்கொள்ள
100 வழிகள் உள்ளன.
நிதியமைச்சரின் பேச்சுப்படி பட்டியலில் முந்தைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள்
இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
எப்படி இதுபோன்ற சிந்தனை உருவாகிறது என்று எனக்கு
புரிவதில்லை. இது முழுக்க அரசியல் விளையாட்டு. குற்றத்திற்கு எந்த நிறமும், குழுவும்
அவசியமில்லை. இது 1 அல்லது 20 அமைச்சர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். திட்டமான நோக்கத்தோடு இதில் பணியாற்றவேண்டும். எதிர்க்கட்சிகளை
குறிவைத்து இதனை முன்னெடுக்க வேண்டியதில்லை.
thanks: dc,2014.
கருத்துகள்
கருத்துரையிடுக