காபி. காரம்.. கச்சேரி….ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட்

                    1
லூஸ் அண்ட் டைட் தொகுத்தளிக்கும்

            காபி. காரம்.. கச்சேரி….

    ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட்

‘’ டேய் என்ன கலர் கலரா குர்தா போட்டுக்கிட்டு இருக்கற? ’’ என்று டைட் அப்போதுதான் உள்ளே வந்துகொண்டே கேட்க,

‘’ பிரதமரே ஏதாவது விஷயம் செய்யறத விட டிரஸ்ஸத்தான் மாத்தி போட்டு போட்டோ ஷூட் எடுக்கறாரு நாமளும் பெரியாளு ஆக வேண்டாமா? செரி நீங்களும் சீக்கரமா இந்த ரத்தசெவப்பு குர்தா போடுங்க, நானும் கமலா ஆரஞ்சு குர்தா போட்டுக்கறேன் ’’    என்று லூஸ் கர்ம சிரத்தையாகப் பேச,

டைட் ஏக கடுப்பானார். ‘’ ஏய் வென்று அந்தாளு போட்டோ எடுத்துட்டு கழட்டி வெச்சிருவாரு. அப்பிடி போட்டிருந்தாலும் ஏசி ரூமுல இருப்பாப்பல நீ இந்த வெய்யில கோமணத்தயே கழட்டி எறிஞ்சிக்கிட்டு இருக்கறவங்கிட்ட போயி குர்தா போடுன்னு அந்தப்பக்கம் போடா கொய்யால ’’ என்று டைட் எகிறினார். லூஸ் நிலைமைகளை சமாளிக்கும் திருட்டு முழியை உருட்டியபடி,

     ‘’ ஏய் என்னய்யா நீயி அகில உலக தாமர கட்சி வருங்கால தலைவர்கிட்ட பேசறோமுன்னு மரியாத துளி கூட இல்ல ’’ என்று சொல்ல, ‘’ அவங்கிட்டயல்லா சேராத மந்திரஞ் சொல்லச் சொல்லுவானுவ, உனக்கு செட்டாவாது. ஏதாவது தீனி கொடுத்தா ஒடனே அவம் பக்கம் பேச ஆரம்பிக்கறேடா இது எல்லா நியாயமா? ’’

 ‘’ ஆமா நீ செவப்பு கட்சிக்காரங்கிட்ட போவ, அவனுக எப்பவுமே பன்னும் டீயுந்தான தர்றானுவ, அதக்கூட மேக்ஸ் மேக்ஸ் னு பயமுறுத்தறானுவ. பள்ளிக்கொடத்துல அந்த பரிட்சீம்போதுதா செவுறேறி தப்பிச்சு வந்தன். ஆனா இவனுவ லட்டு, பாயாசமுன்னு தர்றானுகப்பா ’’

‘’ அது மேக்ஸ் இல்லடா மார்க்ஸ். சாமி வேல எடுத்து உங் கவட்டயில் சொருவீருவானுவடா இந்த ஆரஞ்சுக்கூட்டம் வேண்டாம் அவஞ்சகவாசம் பாத்துக்கோ… ’’

‘’ ஆமாண்டா லூசு போடி ஏதோ கைய விரிச்சு விரிச்சு அடுத்தவனோட கண்ண குத்தீர மாரி பேசறாப்பல… எக்சைஸூ கீது மேடையில பண்றாரா என்ன? ’’

‘’ வேல அதிகம்ல. யோகா பண்றதுக்கு நேரமிருந்திருக்காது. பாவமப்பா நம்மாளு. அதே நேரங்கெடைக்கறப்ப செஞ்சுக்கறதுதே. இதென்ன ஒரே கம்ளைன்டு மாதிரி சொல்றீங்க டைட் ‘’ டைட் நாளிதழ் படிப்ப முயற்சித்தார். லூஸ் சந்தேகமாய் அவரை பார்த்தான்.

காபி காரம் கச்சேரி – தீவிரமான கலந்துரையாடலை உருவாக்கும் பகுதிக்கு அனுசரணை வழங்குபவர்கள் மெட்ரோ மணி, கில்லர் கபாலி, கவுத்தி சித்தன்.

‘’ இன்னாடா கவுத்தி மெட்ராசுக்கு வந்தியே இவ்வளவு சுருக்கா கெளம்பிட்ட. நம்மளுக்கு ஒரு சவுண்டு விட்டிருந்தா தெருவே கலகலன்னு இருந்திருக்குமேடா ’’ என மெட்ரோ மணி தன் ஆருயிர் நண்பனான ஹெர்குலிஸ் வண்டியில் வந்திறங்கியபடி கேட்டார்.

கில்லர் கபாலி அதைக்கடுமையாக மறுத்தபடி ‘’ இங்க பாருடா இந்த பயல நம்பினினா அம்மா மெஸ்சுக்கு கூட்டிட்டுப்போய் இட்லி வாங்கத்தருவாம் பாரு . ஆனா நம்மளுக்கு ஒரு தெருவே செம சப்போர்ட்டு கருவாட்டுக்கொழம்பு எப்படி இருக்குது? ’’ என கையை கவுத்தியின் மூக்கில் வைத்து தேய்த்தான்.

கபாலியின் கையை விலக்கியபடி, ‘’ அப்பா ஆருயிரு தோழர்களே, உங்கள பாக்காதது தப்புதா. நம்மள சொந்தமல்லா வெலக்கி வுட்டு நாளாவுது. அனுவோட ரூமுக்கு போயிட்டேன். எந்தப்பக்கம் திரும்பினாலும் உடனே செவுருடா.. உக்காந்து வேல பாத்தா பேண்டெல்லாம் ஒரு பொங்கச்சோறு ’’ என்ற கவுத்தியை படு சந்தேகமாக பார்த்த கி.கபாலி 
‘’ என்ன பேண்டுல பொங்கல எதுனா டீவில கீது ஏதாவது புது ஐட்டம் பாத்தயா என்ன? ‘’ என்றவனை எரிச்சலாக பார்த்த மெட்ரோ ‘’யோவ் வெளக்கெண்ணெய் வெண்டக்காயி, அதுக்கெல்லா கொஞ்சனாலும் படிச்சிருக்கோணுமப்பா கபாலி, ஆமா லேகியமித்திரன்கிட்ட எத்தன மருந்து டப்பா வித்தே?

கி.க முகம் விகாரமாகியது. ஐயோ சாமி அவனல்லா மனுசனா என்ன?

‘’ காலயில திங்கறக்கு, தின்னது வெளிய வர்றதுக்கு, மறுபடி பசிக்கறக்கு, குசுவு வராத இருக்கறக்கு, வெளிக்கு அடைக்கமாக இளக்கத்துக்கு, கைகாலு வலுவா இருக்கறதுக்கு ஒவ்வொரு வெரைட்டியா கேட்டா நா என்ன பண்ணுவன்? இந்த வேகத்துல போனா திங்கறதும், வெளிக்கி போறதும் லேகியமாத்தே இருக்குமப்பா!!!‘’

மெட்ரோ மணி கி.க வைப் பார்க்காமல் வாயில் முனகிக்கொண்டே, ‘’ஏய்யா திருவண்ணாமலையில கங்காணி சித்தன் சோறு போட்டாப்பலயா.. இருக்க இருக்க அந்தாளு மாரியோ ஒடக்கமாரி ஆயிராத.. தம்பேரு பெருசா வரோணும்னு என்ன வேணும்னா பண்ணுவாப்பல…பாத்தியா அந்தாளுனால பாதிக்கப்பட்டவன் ஒருத்த எழுதி வெச்ச லெட்டரு ஒண்ண… ஆத்தாடி படுமோசமானவனாட்ட இருக்குதே..’’
கி.கா கவுத்தி கடுமையாக யோசிப்பது போன்றதைப் பார்த்து ஆத்தாடி ஆபத்து என்று ‘’ சும்மா இரு நயினா, மணி எதுக்குலே இம்புட்டு சீரியசா பேசறே… ஏதோ கூகூன்னு படமாமே.. பார்த்தவனல்லா கர்ச்சீப்பு நனையற அளவு அழுவறானுவளாம். அப்பிடி என்னடே படத்துல. எதுக்குடே இந்த அழுவாச்சி? ’’ என்ற கி.க வை முறைத்த

மெ.மணி ‘’ ஏதோ தெரியாம வந்துட்டமுன்னு உக்காந்திருந்திருப்பானுவ. அழுவாச்சி காச இப்படி தொலச்சுக் கட்டீட்டமுன்னுதே.. வேறென்ன. குனிஞ்சு நில்லுனு  கடல்பழம் ஒரு படம் எடுத்தாப்பல. அரசாங்க செய்திப்படமாரி. நாம அழுவுலியா?

கவுத்தி தன்நெற்றியைத் தட்டியபடி ‘’ இங்க காதலிச்சு கல்யாணம் பண்றது எல்லாம் கஷ்டமப்பா.. படத்துல சேத்தி வெச்சா படம் ஹிட்டாயிருது. சம்பாரிக்க ஈஸியான வழி. கூகூ படத்துக்கு 150 ரூவா ஆயிருச்சு தெரியுமா மணியப்பா? ’’ என்றபடி பேசிய கவுத்தியை அதோ அங்க வருது மோசமான விலங்கு என்ற பார்வையுடன் பார்த்தார்கள் மணியும், கபாலியும் மெல்ல விடைபெற்றுக் கிளம்பினான் கவுத்திமலை.









                           2
லூஸ் அண்ட டைட் தொகுத்தளிக்கும்

காபி காரம் கச்சேரி

வேலும், காவியும் வெற்றி

காவிக்கட்சிக்காரர்கள் கொடுத்த லட்டை சோறு போலாக்கி தட்டில்வைத்து தின்றுகொண்டே குதித்துக்கொண்டு வந்தார் லூஸ். குதித்த குதியில் டைட் தன் ஜியோனி போனில் நடத்திக்கொண்டிருந்த காவியை நம்பாதே எனும் போராட்ட எழுத்துக்களின் மேல் பூந்தி விழுந்தது.

டேய் ஏண்டா, லட்டு தின்னதே இல்லையா என் புது செல்போனு நார் சூப்புதே குடிக்கும். லட்டெல்லாம் திங்காது. போனுமேல கொணாந்து கொட்டறே? அறிவிருக்குதாடா?

என்னப்பா நீயி, அந்தக்கட்சி ஜெயிச்சவுடனே உனக்கு தாங்க முடியில போல, எப்படி வேலும், காவியும் நாட்டிற்கே துணை. போடி வின்னிங், ரைசிங் ஸ்டார் இனி அவருதானப்பா, நாங்கூட உறுப்பினர் கார்டு வாங்கலாம்னு பாக்கறன். உங்க கட்சிதே போட்டிருக்கிற அர்ணாக்கொடி கலரு எல்லாம் கேட்கறீங்களே? நியாயமாப்பா? என மிச்ச மீதி லட்டை டைட்டிடம் வேணுமா என்று ஜாடை காட்டிவிட்டு தானே உள்ளுக்குள் தள்ளிவிட்டு சேரை இழுத்துப்போட்டு உட்கார்கிறார்.

அவனுவள நம்பாத, எங்க எத வச்சுருப்பான்னு  தெரியாது. உண்டியல் வெச்சு பணம் கேப்பானுவ. தருலீனா வேல எடுத்த குத்த வருவானுவ.. இதெல்லாம் தேவையா உனக்கு?

அதனால நமக்கு என்ன நாம எல்லாருமே அவனுவளோட சேர்ந்து தோஸ்த்தானா ஆயிருவோம் என்று லூஸ் உருட்டிவிட்ட குடம் போல சிரிக்க, மெர்சலாகிறார் டைட்.

தோஸ்த்தானாவா? வேண்டாமப்பா! சன்னி புள்ள துணையே இப்போதைக்கு போதும். எதுக்கு அதெல்லாம். ஏண்டா கை என்னோட சின்னமுன்னா யாரு வேணா இழுப்பீங்களா? அதுவும் ஆம்பளைங்களோட. இட்ஸ் நாட் எ காம்பர்டபிள் யூ நோ ? இதை கடுமையா எதிர்க்கிறேன் என அவனா? இவனா? நிகழ்ச்சி ஆவேசத்தை முகத்தில் கொண்டுவருகிறார் டைட்.

நீ அப்படி நினைச்சயா! ஓகே. நம்ம கட்டுமரக்காரரு சோத்த மிக்சில அரச்சு குடிச்சு பேசியுமே ஜெயிக்க முடியிலயேப்பா? அஹ்ஹா… அஹ்ஹா என சேரில் இருந்து கீழே உருண்டு விழுந்து சிரிக்கிறார் லூஸ்.

நீ இப்படி எகத்தாளம் பேசறது அந்த முரட்டுக்கும்பலுக்கு தெரிஞ்சிது.. கட்டுமரத்துல கல்லக்கட்டி உள்ள விட்ருவானுவ பாத்துக்க.. இரண்டு திராவிடமுமே அதுல வெகு சாமர்த்தியமான ஆளுக. பாத்துக்க என அடுத்த செய்திக்கு வந்து தன் கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார் டைட்.

கங்காணிச்சித்தன்தா கார்ப்பரேட் காந்தி குல்லாவுக்கு ஓட்டு போடச்சொன்னாப்புல இப்படி அந்தகட்சிக்கு எல்லோரும் சாணி அடிச்சிட்டாங்களேப்பா! என லூஸ் உருக, கடுப்பாகிறார் டைட்.

சோறில்லாம சாவறவஞ் சாவறான் சும்மா ஊழல் ஊழல்னு குரங்கு குல்லாவ மாட்டிட்டு பேட்டி தட்டுனா.. போடியோட மார்கெட்டிங் யார்க்கருல கார்ப்பரேட் காந்தி குல்லா அவுட்டு. என்ன பண்றது? இனி அடுத்த இன்னிங்ஸ்தான பாப்போம்.

கேப்டனை ஒத்து கண்சிவக்க, ஏய், அப்ப லஞ்சம் வாங்கறது தப்பில்லைங்கற, உன்னயமாதிரி… என வசனம் பேச முயற்சிக்க பாதி வசனம் மறந்துபோகிறது. திகைக்கிறார் லூஸ்.

அதே, சுயமாக யோசிச்சு பேசோணுங்கறது, பிரேசர்ஸ் டாட் காம் படத்துக்கு பஃபர் ஆவுற இடையில கேப்டன் படத்த பாத்தா இப்படித்தான ஆவும் என டைட் இதையே அடுத்த கருத்தாக டைம்லைனில் பதிய திட்டமிடுகிறார்.

கண்கள் மெட்ராஸ் ஐக்காரனாக மாற, லூஸ்  நீ ஒரு அகில மக்கள் துரோகி… எனச்சொல்ல,

அடப்பார்றா உலகத்து லெவல்ல போயிட்டமப்பா.. எங்க தலைமுறையில் இது பெரிய சாதனையப்பா.. என பூரித்துப்போகிறார் டைட்.

கட்டுமரத்தலைவரு சொல்வாரு. இன்னைக்கு சேதி, நாளைக்கு ஹிஸ்டரி அப்படீன்னு, தெரியுமா உனக்கு. நாங்கள்ளா அந்தப் பராம்பரியமப்பா!

இன்றைய புருடா நாளைய அண்டப்புளுகு போட்டு கட்டுமரத்து பத்திரிக்கையும், அடிமைக்கட்சிப்பத்திரிக்கையும் வருதே அதச்சொல்றயா.. அட ஏய்யா இப்படி அப்பாவியா இருக்கறே இன்னுமாய்யா அதயெல்லா நம்பற?

ஆகா புள்ளிவிவரத்தை வெச்சு மடக்கிட்டானே என்று வயிறெரிந்த லூஸ், நீ ஒரு காவி மண்டையன், சிமி, எருமை முன்னணி என வாட்டியெடுக்கிறார்.

போடா நீ ஒரு பிரியாணி பொறுக்கி, நாங்கள்ளா இந்த ஊர்ல வாழத்தெரிஞ்சவங்கப்பா கிளம்பு என அடுத்த வேளை கோட்டக்கல் லேகியம் சாப்பிட நகர்ந்தார்.

லூஸ் கெத்துமணி அறைக்கு ஈரக்காத்து ஜன்னலைச்சாத்து அத்தென்டிக் ப்ரெஞ்ச்பட  காணொளிகளை காண விரைந்தார்.



















                                3
காபி காரம் கச்சேரி

           
டைட் தன் ஆரோக்கியம் பேண அங்கிதாதி லேகியத்தை மூச்சுமுட்ட தின்றுவிட்டு, பிராமி தைலம் ஒன்றை தலைக்கு தடவிக்கொண்டு இருந்தார். லூஸ் தின்பதற்கு லேகியத்திலே கூட இனிப்பாக ஏதாவது இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார்.

‘’தம்பி, அங்கே முறுக்கு எல்லாம் இருக்காது. மூளை நல்லா வேல செய்யறக்கு இந்தா இந்த லேகியத்த கொஞ்சம் சாப்பட்றயா?’’ என்ற கேள்விக்கு திகில் பட எபக்ட்டில் பார்வையை பார்த்த லூஸ் அடுத்த டிராஜடிக்கு தாவுகிறார்.

‘’ஆமா, டிராபிக் சிக்னல்ல எட்டி வுழுந்து ஒரு ஸ்கூட்டர் ஆன்டிய மேல வுழுந்து கொல்லப்பாத்தீங்களாமா தகவல் தாராபுரம் டைம்ஸ்ல பாத்தனப்பா?’’ முகம்கொள்ளாத சந்தோஷத்தோட லூஸ் சொல்ல,

இப்ப அதிர்ச்சி லேகிய நாதன் டைட்டிற்கு…’’எல்லாமே ஓரிதழ் தாமரையோட நேரடியான விளைவு, பின்னாடி நல்லா இருந்துதுன்னு முன்னாடி பாத்தா கண்றாவி.. 110சிசி புரவி, அதோட நம்மு கம்பெனி லேடின்னு இணைய பாத்துதே அப்படி ஒரு விபத்து, ஆனா அதுக்குள்ள பேப்பர்ல வந்துருச்சா என்ன? பாத்தயா எல்லாமே கையோட மகிமைதான? ’’
‘’ஆமா, வெள்ளத்தொப்பிய ஜெயில்ல போட்டுட்டாங்க போல.. என்ன ஊழல் ஊழல்னாரு இப்ப தட்டேந்திக்கிட்டு சோறு சோறு ம்பாரு இல்ல டைட் சார்’’
     ‘’அங்க நிறைய ஊழல்கீது நடந்திருக்கும் அதயும் சேர்த்து கண்டுபிடிக்குட்டுமே கறை நல்லதுதானப்பா’’ என பத்து கைகளின் சக்தி போல கையை விரித்துகாட்டுகிறார் டைட்.

     ‘’ இப்படியே எகத்தாளத்த எக்ஸ்டண்ட பண்ணிணீனா சீக்கரமே ரெண்டு கையிலுமே ஆணி அடிச்சிருவானுவப்பா, களமாட நான் தயாரா இல்லையப்பா! ’’

     ‘’வரும்போது செந்தமிழன் கோமானுக்கு கனெக்ஷன் குடுத்துருவோம். அண்ணன் பாத்துக்குவாறு, குடும்பத்தோடு சேர்ந்து போராடுவாரு. போராடி… என கண்சிமிட்டுகிறார் டைட்.

     ‘’ டபுள் மீனிங் இந்ததொடர்ல அனுமதி இல்லப்பா, அதா அந்த முட்டுச்சந்துக்கு வர்றேன். நிஜமாவே சொல்லுவியல்லோ?’’ என ஆர்வத்தில் முகம் பிரகாசிக்கிறது லூசுக்கு.
‘’ போராடி நம்மளை காப்பாத்துவாருன்னு சொல்றன் ’’ என மூச்சுவாங்கி நிறுத்துகிறார் டைட்.

‘’ போய்யா நீயும் உன்னோட லேகியமும் என தேன் மிட்டாய் பாக்கெட்டை வெறிகொண்டு பிய்த்து சாப்பிடுகிறார் லூஸ். அவரின் வேகம் பார்த்து திகிலாகிறார் டைட்.
















                           4
காபி..காரம்.. கச்சேரி…

ஆக்கம்: லாய்ட்டர் லூன்

      டைட் ஆழமான இந்த சமுதாயம் நாம் இல்லையென்றால் என்ன ஆயிருக்கும்? என்று சிந்தனையில் சமைந்திருந்தபோது, லூசின் குதூகல குரல் கேட்டது. ஆ.. கட்டுமரம், ஆ.. மஞ்சத்துண்டு, ஆ.. கடலு என கானாமெட்டில் சித்தரைப்போல பாடிவந்தார்.

‘’பாத்தீங்களா டைட் தம்பி, கட்சு எப்படி கடுச்சிட்டான் பாத்தீகளா?’’

உடனே டைட் ‘’கட்சு இல்லடா கட்ஜூடா ஆரிய மண்டையா, அதென்னடா உங்களுக்கு மட்டும் இந்த தமிழ் மேல அப்படி ஒரு வெறி?’’

‘’இந்தாப்பாரு என்னப்பத்தி என் தலீவரப்பத்தி அவதூறு பண்ணுணீனா நா புரட்டொலிக்கு கடிதம் எழுதி உன்ன பத்தி கண்டபடி எழுதவப்பேன், அப்பறம் எதுக்கு வழக்குரைஞர் அணி, போடுவோமுல கேச யாருகிட்ட?

‘’ஆமா, தபால் அட்டையெல்லாம் கெடைக்கறதில்லையாமா? நிரந்தர முதல்வருக்கும், கட்டுமரத்துக்கும் மட்டும் எப்படி குறையாம இருக்குதாம்?’’

‘’ யோவ் என்ன தைரியம்யா உனக்கு, கொழுப்பு அப்படீங்கறயா? மவுண்ட்ரோட்ல மறியல், நாலு பஸ்ஸ ரெண்டு லிட்டர் பெட்ரோல் ஊத்தி கொழுத்துவம்டா ’’ என பெரும் கோபத்தில் திமிறினார் லூஸ்.

‘’டேய் இட்லிய ஏண்டா இடியாப்பமாக்கி அதிரசம் பிழியற? போஸ்ட் கார்ட சொன்னன்டா’’ என பம்மினார் டைட்.

‘’இங்கபாரு, தேசிய கட்சி ஏதாவது புத்தகத்த படிச்சிட்டு ஏதாவது லோலாயமா பேசினே …. வீட்டுக்கு ஆட்டோ வந்துரும் பாத்துக்க’’

‘’ஒத்த வார்த்தைக்கு எதுக்குடா.. ஆட்டோவல்லாம்.. நா பஸ்லயே போய்க்கறன்’’ என தன்னடக்கமாக மாறினார் டைட்.

‘’நீ ஏறிப்போறக்கு இல்ல நைனா ஆட்டோ, உம்மேல ஏறி முதிக்கற ஆளுக வருவாங்க பஸ்ல வந்தா எனர்ஜி லாசாயிடுமல்ல, பீ கேர்லஸ் தேசியம்’’ என்று ஜிலேபியை வாயில் அப்பி முழுங்கினார் லூஸ்.

ஆகா, வாயத்திறந்தா நம்மு மேல வான்தாக்குதல் அளவுக்கு வில்லங்கம் வளருதே என யோசித்தவரை சிந்தனையை கலைக்கிறார் லூஸ் கழுதைக்குரலில்.

‘’ஆட்டோ மட்டுமல்ல, ஷாக்கா படையும் தயாராயிச்சு, அவனவனெல்லாம் தம் பேரப்புள்ள வெச்சுருக்கற, முன்னாடி தான் பள்ளிக்கொடத்துக்கு போட்டுபோன துணிய தேடி எடுத்து போட்டுக்கிட்டு குச்சிய எடுத்துக்கிட்ட வந்து தெருவுல நிக்கிறானுகப்பா… இனி நீ காந்தின்னா ரத்தவாந்திதாம் பாத்துக்க’’

‘’எனக்கு இன்னுமே கட்டுமரம், கடலு, தண்ணி ஹேங்ஓவரே தீரலியேப்பா’’ என சியாவனப்பிரகாசத்தை வாயில் வழித்துப்போட்டு வெந்நீர் தேடி ஓடுகிறார் டைட்.

‘’ஹலோ மிஸ்டர் ஹெரிடேஜ் திராவிடன், ஏ இந்தப்புலம்பல் நாங்களே கட்டுமரத்த கல்ல கட்டி கடல்ல போடலாமுன்னு இருக்கறோம், நிச்சயம் மேல வராதுல்ல?’’ அப்பாவியாய் பேசுகிறார் லூஸ்.

‘’ திராவிடன் எல்லாம் செத்துட்டான்டா, அவம்பேரச்சொல்லி பொழைக்கறவனல்லா நம்மளுக்கு ஒரு ரூபாயில் இட்லி தின்னுட்டு ஆனந்தபவன்ல 30 ரூபாய்க்கு காபி குடிக்கிறான்டா, நீ நாயாட நரியாட நிகழ்ச்சியில யாருக்கு ஓட்டுபோடோணும்னு எங்கிட்ட கேட்கற’’ என உணர்ச்சியில் மாரத்தான் தலைவரையும் மிஞ்சுகிறார் டைட்.

‘’ அது டைட்டு நீ தெனமும் பேப்பரு படிக்கற என்னாச்சு, உனக்கு நெஞ்சுவலி வருது, ஆனா, என்னப்பாரேன் ஜாடி நம்பர் ஏக் பாக்கறன், வாழ்றனப்பா, இதெல்லாமே சலிச்சுக்கற விஷயமா, ஏ எமோஷன் நம்மு கடமப்பா, நிகழ்ச்சீன்னா யாராவது பாக்கவேண்டாமா? நீயே சொல்லு?’’

காலந்தாண்டா, பேசு…பேசு செரி அந்த ஷெல்பு பக்கத்துல இருக்கற அவரோதிரேகண லேகியத்த எடு சாப்புட்ற நேரமாச்சு என கூற லூஸ் திமிறி ஓடியதில் அமுல் புரோ பான டம்ளர் தரைநோக்கி சடுதியில் நெருங்கியது.


















                           




கருத்துகள்