இடுகைகள்

அனில் சேத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்

படம்
பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத் அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.   மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றால் வலி. த