செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்






பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத்









அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.

 

மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது.

தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?

அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றால் வலி. தாகமாக இருக்கிறது என்றால் தாகம். இருளுக்குள் வாழ்கின்ற அதைச் சுற்றி வருகிற உயிரினங்கள் நாம் என்பதைத் தாண்டிய இயல்பை தன்னுணர்வு கொண்டுள்ளது. தன்னுணர்வு இல்லாத நிலையில் நாம் வாழும் உலகம், நான் என்ற உணர்வு, பல்வேறு உணர்ச்சிகள், புதிய அமைப்பு என எதுவுமே உருவாகி இருக்காது. தன்னுணர்வுதான், நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது.

சென்டியன்ஸ் கொள்கை என்ற ஒன்றை தத்துவமாக கூறுவார்கள்.’’ தன்னுணர்வு நிலை கொண்ட ஒரு பொருள், அறமதிப்பீடு நிலைக்குள் வந்துவிடும்’’ என்பதே அதன் வரையறை. இந்த அடிப்படையில் ஒருவருக்குள் இயங்கும் தன்னுணர்வு காரணமாக உலகை நாம் புரிந்துகொண்டு அதற்கேறப வாழ்வை அமைத்துக்கொள்கிறோம். மனிதர்கள் அல்லாத உயிரினங்களைப் பக்குவதாக கருணையோடு நடத்துகிறோம். இதேவகையில் புதிதாக பிறந்த குழந்தைகளை, எதிர்கால எந்திரங்களையும் அணுகுகிறோம்.

உங்கள் அப்பா, இந்தியர். அம்மா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். உங்களது வாழ்க்கை பற்றி கூறுங்கள்.

தெற்கு ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் பகுதியைச் சேர்ந்தவன் நான். ஆறு வயதில் அலகாபாத்திற்கு குடும்பத்தோடு சென்ற நினைவு உள்ளது. அதைக்கடந்து இந்தியா தொடர்பாக பெரிய நினைவுகள் ஏதுமில்லை. இளம் வயதில் இந்திய, இங்கிலாந்து கலாச்சாரங்கள் பற்றிய யோசித்திருக்கிறேன். இந்தியாவில் இருக்கும்போது என்னை நான் வேறு ஒரு மனிதராக உணர்ந்தேன். இந்த உணர்வு நிலை எனக்கு ஊக்கம் கொடுத்தது என்று கூறவேண்டும்.

சாட் ஜிபிடியில் உங்கள் வாழ்க்கை பற்றி எழுதக்கூறியுள்ளீர்கள் என அறிந்தோம். அது சரியாக வேலை செய்ததாக நினைக்கிறீர்களா?

அப்படி எழுதக்கூறியதில் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. நான் பெற்ற பட்டம், வாழும் இடம் பற்றியும், எதில் திறமையானவன் என்பதை சரியாக கூறியது.ஆனால், நான் பிறந்த இடம், பிஹெச்டி பெற்றது பற்றியும் வேறு தகவல்களையும் தவறாக எழுதிக்காட்டியது. தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த சொன்னபோது நிலைமை இன்னும் மோசமானது. தற்போதைய நிலையில் செயற்கை நுண்ணறிவு நிறைய விஷயங்களை சரியாக அடையாளம் காணவில்லை எனலாம்.

செயற்கை நுண்ணறிவு தன்னுணர்வு பெறுவது பற்றி நாம் கவலைப்படவேண்டுமா?

தவறான செய்திகள், போலிச்செய்திகள், போலியான புகைப்படங்கள் என நாம் கவலைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இனிமேல் நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்களை நம்புவதே கடினமாகத்தான் இருக்கும். செயற்கை நுண்ணறிவு பல்வேறு விஷயங்களை கையாளும்போது நிறைய பிரச்னைகள் எழும்.

அதற்காக டெர்மினேட்டர் போல தன்னுணர்வு பெற்று மக்கள் இனத்தை கூண்டோடு அழித்துவிடும் என நினைக்கவேண்டியதில்லை. அது தவறான சிந்தனை. அதன் அறிவும், தன்னுணர்வும் ஒன்றாக சேரும்போது  மேலும் திறன் கொண்டதாக மாறும்.

 ஏற்கெனவே நிலையான தன்மை இல்லாத சூழலில் செயற்கை நுண்ணறிவின் வருகை, பேரழிவை தருவதாகவே அமையும். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் தன்னுணர்வு கொண்ட செயற்கை நுண்ணறிவை உருவாக்க முயன்று வருகின்றன. தன்னுணர்வு கொண்ட நாம், எந்திரங்களோடு உரையாடுவதற்கு தயாராகவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

 Sharmila ganesan ram

Toi

Being you a new science of consciousness – anil seth 


https://www.youtube.com/watch?v=lyu7v7nWzfo

https://www.amazon.in/Being-You-Inside-Story-Universe/dp/0571337708

கருத்துகள்