புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

 



விர்டா ஹெல்த்

கேரோஸ்

ஜெனரேஷன் ஜீனியஸ்

பப்பாயா குளோபல்


ரன்வே





புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள்

தி நார்த் ஃபேஸ்

சர்குலர் குளோத்திங்

ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை

உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ.

தெராபாடி

வலியைக் குறைக்கும் கருவி

வலியில் இருந்து நிவாரணம்

தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களது பொருட்களை நகல் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு போடவும் தெராபாடி தயங்கவில்லை. மசாஜ் செய்வது, தூக்கத்தை மேம்படுத்துவது, வலியைக் குறைப்பது என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக கருவிகளை உருவாக்கி வருகிறது.

ஜெனரேஷன் ஜீனியஸ்

கல்வி நிறுவனம்

கல்வி கற்றுத்தரும் நுட்பமான வழி

தொடக்க கல்வி மாணவர்களுக்கு அறிவியல் கற்றுத் தரும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வீடியோக்களைப் பார்த்து எளிமையாக அறிவியல் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளலாம். அடுத்த ஆண்டு அறிவியலை செய்துபார்க்கும் கருவிகளை வடிவமைத்து வழங்கவிருக்கிறார்கள். தற்போது அமெரிக்காவில் உள்ள 30 சதவீத தொடக்கப் பள்ளிகளை வந்தடைந்திருக்கிறார்கள். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகமுள்ளது. 2017ஆம்ஆண்டு தொடங்கப்பட்ட ஜெனரேஷன் ஜீனியஸ் நிறுவனத்தை அறிவியலாளர் ஜெஃப் வினோகுர், தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த எரிக ரோல்மன் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிறுவனம் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

கேரோஸ்

கார்பன் அளவீட்டு நிறுவனம்

மாசுபாட்டைக் குறைப்போம்

பிரெஞ்சு நிறுவனம், கார்பன் வெளியீட்டைக் கண்டுபிடிக்கும் சேவையை வழங்கி வருகிறது. பூமியைக் கண்காணித்து கார்பன், மீத்தேன் வெளியீட்டை அளவிட்டு எச்சரிக்கிறது. செயற்கைக்கோள், செயற்கை நுண்ணறிவு புவியியல் சார்ந்த  அளவீட்டு முறை என நுணுக்கமாக இயங்கி வியப்பூட்டுகிறது. தனது துல்லியமான தகவல்கள் மூலம் ஐ.நாவின் சூழல் அமைப்புக்கும் உதவி வருகிறது. இதன் துணை நிறுவனர் மற்றும் தலைவர் அன்டோய்ன் ரோஸ்டேண்ட்.

பாலிகன் லேப்ஸ்

பிளாக்செயினை வலுவாக்கும் நிறுவனம்

பாதுகாப்பை உறுதியாக்குவோம்

ஸ்டார்பக்ஸ், நைக், மெடனா ஆகிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பான முறையில் அப்ளிகேஷனை வடிவமைத்துக் கொடுக்கிறது. பாலிகன் லேப்ஸ். இதன் வழியாக பிளாக் செயின் மெல்ல வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வருகிறது. விரைவில் மக்கள் பிளாக்செயின் பாதுகாப்பு கொண்ட வாலட்டை பயன்படுத்துவார்கள் என்பதே நிறுவனத்தின் நம்பிக்கை. நிறுவனத்தின் இயக்குநர் ரியான் வியாட்.

பப்பாயா குளோபல்

பணப்பரிமாற்ற நிறுவனம்

சுதந்திரமான பணப்பரிமாற்றம்

உலகம் முழுக்க பன்னாட்டு நிறுவனங்களில் ஏராளமான மக்கள் வேலை செய்கிறார்கள். பல்வேறு உலக நாடுகளில் இருக்கும் பணியாளர்களுக்கு எப்படி சம்பளத்தை தாமதப்படுத்தாமல் வழங்குவது? இந்த இடத்தில் பப்பாயா குளோபல் எனும் பணப்பரிமாற்ற நிறுவனம் உள்ளே வருகிறது. 160 நாடுகளில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான உரிமத்தை கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் அதன் பிரதமர் நீதித்துறையை முடக்கியபோது போராட்டத்திற்கு தேவையான பணத்தை திரட்டிக்கொடுத்தது, பப்பாயாதான். ஜேபி மோர்கன் சேஸ், டொயோட்டா, மைக்ரோசாஃப்ட் என நிறைய நிறுவனங்கள் பப்பாயாவின் வாடிக்கையாளர்களாக உள்ளன.

விர்டா ஹெல்த்

நீரிழிவு தடுப்பு நிறுவனம்

இந்த நிறுவனம், நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  ஊட்டச்சத்து முறை, உணவு முறை ஆகியவற்றை வடிவமைத்து வழங்குகிறது. இதன் விளைவாக நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. இன்சுலின் எடுத்துக்கொள்வது 94 சதவீதம் குறைந்துள்ளது.

தொன்மையான நோய் தடுப்பு முறைகள் நீண்டகால நோய்களுக்கு பயன் அளிக்காது என விர்டா ஹெல்த் நிறுவனம் நம்புகிறது. அதன் அடிப்படையில் அதன் செய்ல்பாடுகளை நவீனமாக அமைத்துக்கொண்டுள்ளது.

ரன்வே

எழுத்திலிருந்து வீடியோ

கற்பனைக்கு கொடுக்கும் புதிய வடிவம்

நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த நிறுவனம் எழுத்துகளிலிருந்து வீடியோவை உருவாக்குகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் பயன்படுகிறது. எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்திற்கு ரன்வே நிறுவனத்தின் வீடியோ எடிட்டிங் கருவிகள் பயன்பட்டுள்ளன. எழுத்துக்களிலிருந்து வீடியோ உருவாக்குவதை ஒருவர் எளிதாக குறைவான விலையில் செய்ய முடியும். ரன்வே நிறுவனத்தின் இயக்குநர் கிரிஸ்டோபல் வேலன்சுலா.

 

டைம் வார இதழ்

ஜேஎல், பிபி,டிஎஸ், ஏஞ்சலா ஹாப்ட்,


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்