பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்
பணம் விரயமாகும் வழி |
27.1.2022
அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா?
நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம்
கங்கை’ என பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன்.
ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே,
அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின்
மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது.
கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு
வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என
வருத்தப்பட்டார்.
‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின்
சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும். சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன்.
பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர்
இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே
இருக்கிறது.
வினோத் மேத்தா பற்றிய நூலை இன்னும் படிக்கத் தொடங்கவில்லை.
ஷோபாடே கட்டுரைகளைப் படித்துவிட்டுத்தான் அந்த நூலை கையில் எடுக்கவேண்டும். விகடனைச்
சேர்ந்த பத்திரிகையாளர் அருண் பிரசாத், காந்திய ஆளுமை சுனில் கிருஷ்ணனை, நேர்த்தியான
கேள்விகளைக் கேட்டு நேர்காணல் எடுத்திருந்தார்.
விகடன் இதழ் நூறு பக்கம் – 35 ரூபாய் வருகிறது.
நன்றி
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக