தனித்துவமான பாத்திரங்களின் இயல்பை பேசும் மின்னூல்! - What an idea sirji
பொதுவாக மசாலா படங்களில் பரிசோதனை முயற்சிகளை நிறைய இயக்குநர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று வரும் புதிய இயக்குநர்கள் அதையும் ஒரு கை பார்க்கிறார்கள். இன்று தியேட்டரில் வெளியாகும் படம் கடந்து ஓடிடி என்பது தனி ஒரு வணிகமாக மாறிவருகிறது.
வணிகப் படங்களில் தனித்துவமான பாத்திரங்களை நெருக்கடிகளுக்கு பணியாமல் உருவாக்கி வெற்றி பெற வைப்பது கடினம். அப்படியான சில பாத்திரங்களை மட்டுமே இந்த நூல் பேசுகிறது.
படம் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் கூட சில பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது. சினிமா என்பது நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாக மாறி வெகு காலமாகிறது. அப்படியான சில மசாலா படங்களில் பாத்திரங்களைப் பற்றி பேசி அதன் உளவியலை ஆராய்வதே நூலின் நோக்கம். நூலின் அனைத்து படங்களும், பாத்திரங்களும் மகத்தானவை என்று கூறமுடியாது. எனது மனதிற்கு வித்தியாசமான பாத்திரங்கள் என்று தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தால் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!
லாய்ட்டர் லூன்
நூலைப் பெற...
கருத்துகள்
கருத்துரையிடுக