நம்பிக்கை ஊட்டும் எதிர்கால தொழில்துறை தலைவர்கள் - ஃபோர்ப்ஸ் 500 இதழ்
சாரா பாண்ட், எக்ஸ்பாக்ஸ் பிரிவு தலைவர். |
எதிர்கால
தலைவர்கள்
ஃபோர்ப்ஸ்
500 இதழ்
சாரா பாண்ட் Sara bond
நிறுவன துணைத்தலைவர்
எக்ஸ்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட்
யேல் பல்கலைக்கழகத்தில்
படித்தவர். ஹார்வர்ட்டில் எம்பிஏ படிப்பு. மெக்கின்சி நிறுவனத்தில் ஆலோசகர். டி மொபைல்
நிறுவனத்தில் திட்ட வல்லுநராக பணியாற்றினார். பிறகு, 2017ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்தில் இணைந்தார். இப்போது எக்ஸ்பாக்ஸின் விளையாட்டுகளை, தயாரிப்புகளை வணிகப்படுத்தும்
பிரிவில் பணியாற்றி வருகிறார். உலகில் எந்த இடத்தில் என்ன கருவிகளை வைத்திருந்தாலும்
எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை விளையாட முடியும் சூழலை உருவாக்கியது சாராவின் சாதனை.
ஜூவோரா, செக்
என பட்டியலிடப்பட்ட இரண்டு பொது நிறுவனங்களின் போர்டில் உறுப்பினராக இருக்கிறார். ஊக்கமூட்டும்
தலைவராக உயர்ந்து வந்துகொண்டிருக்கிறார் சாரா என நிறுவனத்தை கவனிப்பவர்கள் கூறிவருகிறார்கள்.
பிராடி ப்ரூவர் |
பிராடி ப்ரூவர் Brady brewer
முதன்மை சந்தை அதிகாரி
ஸ்டார்பக்ஸ்
ஸ்டார்பக்ஸின்
வெற்றிக்கு முக்கியமான காரணம் அதன் டிஜிட்டல் லாயல்டி திட்டம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
ஆகிய திட்டங்களாகும். இதன் வழியாக ஸ்டார்பக்ஸ் உலகம் முழுக்க பெரும் புகழ் பெற்றது.
பிராடி, இந்த திட்டத்தை சந்தைப்படுத்தலில் இணைத்துக்கொண்டு செயல்பட்டார். கூடவே தொழில்நுட்பத்தையும்
பயன்படுத்தினார்.
வாஷிங்டன்
பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் பற்றிய பாடத்தைப் படித்தார். விஸியோ, அவென்யூ என
இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னாளில், இந்த இரு நிறுவனங்களையும்
மைக்ரோசாஃப்ட் வாங்கிக்கொண்டது. ஸ்டார்பக்ஸில் இருபத்திரெண்டு ஆண்டுகளாக பணியாற்றி
அமெரிக்கா, ஹாங்காங் (ஐந்து ஆண்டுகள்), டோக்கியோ (மூன்று ஆண்டுகள்) என தனது அனுபவங்களை
வளர்த்துக்கொண்டுள்ளார். மேலே தொடக்கத்தில் கூறிய இரண்டு திட்டங்களையும் உருவாக்கியவர்
பிராடி ப்ரூவர்தான். அதை திறமையாக செயல்திறனுடன் செயல்படுத்தி வெற்றிகண்டுள்ள ஊக்கமூட்டும்
தலைவர் என தொழில்துறையினர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
டேவிட் ராலின்சன் |
டேவிட் ராலின்சன் David rawlinson
இயக்குநர்
க்யூரேட் ரீடெய்ல்
பெருநிறுவனங்களின்
வட்டாரத்தில் டேவிட் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்த தொடங்கியுள்ளார். சிடாடெல்லில்
உள்ள ராணுவப்பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர். பிறகு, ஹார்வர்டில் எம்பிஏ பட்டம்
பெற்றிருக்கிறார். ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா என இருவரின் நிர்வாகம் சார்ந்து
பணியில் பங்குபெற்றிருக்கிறார்.
2021ஆம் ஆண்டு,
க்யூரேட் ரீடெய்ல் நிறுவனத்தில் இயக்குநராக இணைந்தார். இதற்குப் பிறகு விற்பனை, வாடிக்கையாளர்களுக்கான
பொருட்கள் பற்றிய தகவல் நிறுவனமான நீல்சன் க்யூ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த
நிறுவனம் டிவி ரேட்டிங் தொடர்புடையது. டபிள்யூ டபிள்யூ கிரெய்ங்கர், க்யூரெட்டின் இ விற்பனையைக் கவனிக்கிறார். ஃபோர்ப்ஸ் இதழில் இடம்பெற்றுள்ள
ஐநூறு நிறுவனங்களில் நடத்தும் எட்டு கறுப்பின தலைவர்களில் டேவிட்டும் ஒருவர்.
ஆண்ட்ரூ மெக்டொனால்ட் |
ஆண்ட்ரூ மெக்டொனால்ட் Andrew macdonald
துணைத்தலைவர்
ஊபர்
2019ஆம் ஆண்டு
ஆண்ட்ரூ, ஊபரின் உலக அளவிலான வணிகத்தில் கால் பதித்தார். 2012ஆம் ஆண்டு முதலாக நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்தான். இந்தப்
பதவிக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற செயல்பாடுகளுக்கு துணைத்தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
கூடுதலாக உலக வணிக மேம்பாட்டையும் கவனித்து வந்தார்.
39 வயதான
ஆண்ட்ரூ காரையும், பைக், ஸ்கூட்டர்களையும் பகிர்ந்துகொள்ளும் பிரிவையும் பார்த்துக்கொள்கிறார்.
கூடுதலாக, உலகம் முழுக்க நடக்கும் ஊபரின் வணிகத்தையும் மேற்பார்வை செய்துவருகிறார்.
2009ஆம் ஆண்டு ஊபர் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் எழுந்தாலும் அதை
திறமையுடன் சமாளித்து நிறுவனம் முன்னேறி வருவதற்கு ஆண்ட்ரூவின் உழைப்பு முக்கியமான
காரணம்.
எரிக் கிளைமன், ராம்ப் |
எரிக் கிளைமன் Eric glyman
துணை நிறுவனர், இயக்குநர்
ராம்ப்
2019ஆம் ஆண்டு,
கிளைமன் துணை நிறுவனராக இருந்து ராம்ப் நிறுவனத்தைத் தொடங்கினார். பெருநிறுவனங்களுக்கு
கிரடிட் கார்டைக் கொடுப்பது, குறைவாக செலவழிக்க கற்றுக்கொடுக்கும் சேவையை ராம்ப் வழங்குகிறது.
இதுபோல கிரடிட் கார்டு கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளமான பரிசுகள், பாய்ண்டுகளை வழங்கி
செலவழிப்பதை ஊக்குவிப்பார்கள். ராம்ப், ஊழியர்கள் செலவழிப்பதைப் பற்றிய அறிக்கைகளை
மாத இறுதியில் வழங்கி விடுகிறது. 2022ஆம் ஆண்டு
இந்த நிறுவனத்தின் மதிப்பு 8.1 பில்லியன் டாலர்களாக உள்ளது.
கிளைமனை,
எதிர்காலத்தில் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான தலைவராக கருதுகிறார்கள். மாஸ்டர் கார்டின்
முன்னாள் இயக்குநரான அஜய் பங்காவுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இன்னொருவரையும்
கூட கூறுகிறார்கள். அவர், விசாவின் துணைத்தலைவரான அல் கெல்லி.
தல்லாரா |
க்யூ தன்ஹ் தல்லாரா Que thanh
dallara
நீரிழிவுப் பிரிவுத் தலைவர்
மெட்ரோனிக்
நிறுவனத்தின்
பிரிவுத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகப்போகிறது. இவரது நீரிழிவுப் பிரிவு 2.3 பில்லியன்
டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது. சந்தையில் 7 சதவீதம் பெற்றுள்ள நிறுவனத்தின் வருமானம்
2022ஆம் ஆண்டு 31.7 பில்லியனாக இருந்தது.
அண்மையில்
எப்டிஏ அமைப்பு, மெட்ரோனிக் நிறுவனத்தின் தானியங்கி இன்சுலின் விநியோக எந்திரத்தை விற்க
அனுமதி அளித்துள்ளது. இந்த எந்திரம் தனித்துவமான சென்சாரைக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்டில்
நான்கு ஆண்டுகள் வேலை செய்தவரான தல்லாரா, தனது தொழில்நுட்ப அறிவை மெட்ரோனிக்கில் சிறப்பாக
நுட்பமாக பயன்படுத்தி வருகிறார். ‘’தல்லாரா,
நீரிழிவு பிரிவு வணிகத்தை பல்வேறு விதங்களில் மாற்றி அமைத்துள்ளார். நாங்கள் எந்த விஷயங்களுக்கு
முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்’’ என்று சொன்னது மெட்ரோனிக்கின்
இயக்குநரான ஜியோஃப் மார்த்தா.
ஜியோஃப் கால்வின்/
பாவ்லோ காஃபினோ/பைஜ் மெக்கிளாஃப்லின்/கின்ஸி குரோவ்லி
ஃபோர்ப்ஸ்
ஜூன் – ஜூலை 2023
கருத்துகள்
கருத்துரையிடுக