இடுகைகள்

நூற்றாண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆனந்தபஜார் பத்திரிகை - நூற்றாண்டைக் கொண்டாடும் நாளிதழ்!

படம்
  anandabazar patrika 100 year supplementary 29 oct 2021 ஆனந்த பஜார் பத்திரிகை - நூற்றாண்டு கடந்த சாதனை! குறிப்பிட்ட மொழியில் பணியைத் தொடங்கி, பிறகு அனைத்து மொழிகளிலும் முக்கியமான நாளிதழாக அல்லது ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்பது நிச்சயம் சாதனைதான். அதுவும் குறிப்பிட்ட கொள்கைக்காக நாளிதழைத் தொடங்கியவர்களுக்கு சமரசம் செய்வது மிக கடினமாகவே இருக்கும்.  தமிழிலும் கூட தமிழ்நாட்டிற்காக, அதனை தனிநாடாக்க பத்திரிகை தொடங்கி இன்றுவரை அதற்கான உழைப்பில் இருக்கும் சில பத்திரிகைகள் உண்டு. இப்படி தொடங்கும் பத்திரிகைகளில் உள்ள இயக்குநர், ஆசிரியர் நாளிதழை நடத்துபவர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருப்பது ஆச்சரியமல்ல. அப்படித்தான் நாளிதழை கட்டுப்படுத்தி வைத்து இலக்கை நோக்கி நடத்துகிறார்கள்.  ஆனந்த  பஜார் பத்திரிகை இன்று ஏபிபி ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏபிபி நாடு என யூடியூப் சேனலைப் பார்த்திருப்பீர்கள். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த ஊடக நிறுவனத்தின் டிவி சேனல்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் டிஜிட்டல் வலைத்தளமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் டிவி சேனல்களை தொடங்கலாம். வங்காள மொழியி

திரைப்படங்களில் உணர்ச்சிகளை உருவாக்குவது கடினமானதுதான்! - சத்யஜித்ரே நூற்றாண்டு - நேர்காணல்

படம்
  சத்யஜித்ரே நூற்றாண்டு 2021 சத்யஜித்ரே வங்காளத்தைச் சேர்ந்த முக்கியமான திரைப்பட இயக்குநர். அவரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆங்கில மாத இதழான பிரன்ட்லைன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல் இது.  செஸ் பிளேயர்ஸ் படத்தில் நவாப்புகளைப் பற்றி பேசியிருப்பீர்கள். குழந்தையாக இருக்கும்போது நீங்கள் லக்னோவிலிருந்து கல்கத்தா வந்தவர். எப்படி இதனை சித்திரித்தீர்கள்? நல்லது. அங்கு நவாப்புகள் யாருமில்லை. அங்கு எனது மாமா மட்டுமே இருந்தார். அதுல்பிரசாத் சென் எனும் அவர்தான் வங்காள பாடல்களுக்கு இசையமைத்து வந்த பிரபலமான ஆள். நாங்கள் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்ததால், பாடல்களை உருவாக்கப்படுவதையும் உருதை நல்ல முறையில் உச்சரிப்பதையும் அறிந்திருந்தேன். லக்னோவில் உள்ள பாரம்பரிய முறையும் எனக்கு தெரிந்த ஒன்றுதான். நான் லக்னோவிற்கு நடிகை அக்தாரி பாயை பார்க்கப் போனேன். ஜல்சாகர் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்கலாம் என்று யோசனை இருந்தது. அங்கு அவருடைய கணவர் வழக்குரைஞராக இருந்தார். அவரின் உடல்மொழியைப் பார்த்தேன்.எனவே அவரை நவாபாக நடிக்க வைத்தேன்.  எனவே நான் சிறுவனாக இருந்தபோத

நரசிம்மராவின் நூற்றாண்டு விழா மறக்கப்பட்டுவிட்டதா?

படம்
  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நூற்றாண்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு நரசிம்மராவ் பற்றி நினைக்கும்போது பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வந்திருக்கலாம். காங்கிரஸின் பின்னாளைய தோல்விகளுக்கும், பாஜகவின் எழுச்சிக்கும் பாபர் மசூதி அளவுக்கு வேறெந்த விஷயமும் உதவியிருக்காது என்பதே உண்மை. நரசிம்மராவை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர, தெலுங்கானா அரசுகள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.  இந்தியா அந்நிய செலவாணி பிரச்னையில் தவித்த போது 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவை கடன் பிரச்னையிலிருந்து மீட்க அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றுவரை நாட்டிற்கு உதவி வருகின்றன. தங்களிடமிருந்த  தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்து 200 மில்லியன் டாலர்களை திரட்ட இந்தியா திணறி வந்தது. நரசிம்மராவ் 2004இல் காலமானபோது, நாட்டில் 140 பில்லியன் டாலர்கள் அந்நியசெலவாணி இருப்பில் இருந்தது. இதனை அவர் எளிதாக சாதித்து விடவில்லை. டாக்டர் மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். மன்மோகனை நிதியமைச்சராக நியமித்த