இடுகைகள்

மானியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!

படம்
 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்! இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி.  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே உணவ

இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

படம்
  இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன. கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள்

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை  அதிக பயன்

லிக்விட் நானோ யூரியா- சாதாரண யூரியாவிற்கு மாற்று!

படம்
  இந்தியாவில் விரைவில் லிக்விட் நானோ யூரியா விற்பனைக்கு வரவிருக்கிறது இதனை குஜராத்தில் உள்ள கலோல் தொழிற்சாலை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்திய கூட்டுறவு விவசாயிகள் உரச்சங்க நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அரைலிட்டர் பாட்டில் 240 ரூபாய் வருகிறது. இதில் மானிய உதவி ஏதும் கிடையாது. சாதாரணமாக விவசாயிகள் வாங்கும் யூரியா 50 கிலோ 300க்கு விற்கிறார்கள். 300 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது.  உலகசந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கிறது. இதனை லிக்விட் நானோ யூரியா மாற்றும் என கருதப்படுகிறது.  யூரியா என்பதே நைட்ரஜன் சத்தை செடிகளுக்கு கொடுப்பதுதான். புதிய நானோ ரகத்தில் நைட்ரஜன் நானோ பார்டிக்கிள் வடிவில் இருக்கும். இதனை நேரடியாக செடி அல்லது பயிர் மீது தெளிக்க வேண்டியதுதான். சாதாரண யூரியாவின் செயல்திறன் 25 சதவீதம் என்றால் இதன் திறன் 85-90 சதவீதம் என்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை லிக்விட் நானோ யூரியா மூலம் இறக்குமதி குறையும் என நினைக்கிறது.  2 முதல்

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின்

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?

படம்
  மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை,  மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்