இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

 








இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன.

கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது.

கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள் வாழ்நாளை கடந்துவிட்டன என தேசிய தணிக்கை அலுவலக தகவல் உறுதிபடுத்துகிறது. ராக் கலவையுள்ள கட்டுமானங்களை முழுமையாக, பகுதியாக, பழுதுபார்த்து பயன்படுத்துவது என பட்டியலிட்டு பிரிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

இதற்கான எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு கென்ட் என்ற இடத்திலுள்ள தொடக்கபள்ளி இடிந்து விழுந்ததில் கிடைத்தது. பிறகு.  எசக்ஸ். வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நான்கு பள்ளிகள் ராக் கலவையில் கட்டப்பட்டவை என தெரிந்து உடனே மூடப்பட்டன.

நாடு முழுக்க உள்ள அரசு பள்ளிகள் பழுதுபார்க்கப்படவேண்டிய நெருக்கடியில் உள்ளன. நிறைய பள்ளிகளில் மேற்கூரை என்பதே குழந்தைகளுக்கு ஆபத்தான சுவாச நோய்களை தரும் ஆஸ்பெடாஸ் கூரைகளில் அமைக்கப்பட்டுள்ளது. 2019இல் அரசிடம் மானிய உதவி பெறும் 672 பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது. இன்றும் தொண்ணூறு சதவீத இங்கிலாந்து பள்ளிகளில் ஆஸ்பெடாஸ் பயன்பாடு உள்ளது. இவை சேதப்படுத்தப்பட்டு இதன் இழைகள் குழந்தைகளின் உடலுக்குள் சென்றால் எளிதாக நோய்கள் உருவாகும். 2019இல் செய்த சோதனையில் நாலாயிரம் பள்ளிகள் உடனே பழுதுபார்க்கவேண்டிய நிலையில் உள்ளன. இங்கிலாந்து அரசு கடந்த ஜூனில் பதினான்காயிரத்து தொள்ளாயிரம் பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டு தொடங்கி அரசு பள்ளிகளுக்கு செலவிடப்படும் தொகை 50 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டு கல்விக்கான 15 பில்லியன் பவுண்டு பட்ஜெட்டில், 1.4 பில்லியன் பவுண்டுகளை வெட்டியிருக்கிறார் இந்திய வம்சாவளி புகழ் பிரதமர் ரிஷி சுனக்.

கார்டியன் இதழில் வெளியான மாபெல் பான்ஃபீல்ட் வாச்சி கட்டுரையைத் தழுவியது.

 

 

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்