ஜோம்பிகளுக்குத் தப்பி மாலில் வாழும் ஆறு மனிதர்கள்!

 

வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட் - ஜே டிராமா
வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட்

 ஜே டிராமா

 

ஜோம்பிக்களின் கதை. ஜப்பானில் நாடே ஜோம்பி வைரஸ் பரவி பிரச்னையாக உள்ளது. எம் மால் என்ற கட்டிடத்தில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் கட்டிடத்திற்கு அருகில் ரிரிசான் என்ற இளம் மாணவி மயக்கமடைந்து விழுகிறாள். அதைப் பார்க்கும் ஒருவர், மொட்டை மாடியில் இருந்து அந்த மாணவியை மீட்கிறார். மாணவி ரிரிசான் கண் விழிக்கும்போது குழு தலைவர், சமையல் பெண்மணி, யூட்யூப் வீடியோ எடுக்கும் இளம்பெண், தரையை துடைக்கும் வேலையை செய்பவர், உடற்பயிற்சி செய்யும் இளைஞர், மாடல் பெண்மணி  என பலரையும் பார்க்கிறாள். இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.  அங்குள்ள உடை, எலக்ட்ரானிக்ஸ், உணவு, மளிகைப்பொருட்கள் , அழகு சாதனம் என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

உதவி வேண்டி மொட்டை மாடியில் சில ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனாலும் கூட அது பயனளிக்கவில்லை. இதற்கு இடையில் மனிதர்களுக்கு  அன்பு, காதல், நட்பு உருவாகிறது. அதுவே சண்டை, பழிக்குப்பழி என பலதையும் ஏற்படுத்துகிறது. தொடரை சற்று காமெடியாக எடுக்க முனைந்திருக்கிறார்கள். பீஸ்ட் சான் காட்சிகள் நன்றாக வந்துள்ளன. தனக்கு எப்படிப்பட்ட காதல் வேண்டும் என அவள் கூறுவது சிறந்த காட்சி. அடுத்து, அவளின் காதலனிடம் தனது வாழ்க்கை பற்றி ஸ்கேட்போர்ட்டில் சுற்றியபடி கூறும் காட்சி முக்கியமானது.

பேரழிவு சூழ்நிலையில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது மனதில் எழும் யோசனைகள், திட்டங்கள், சுயநலமான எண்ணங்கள் என அனைத்தையும் கூற முயன்றிருக்கிறார்கள். ஆறு எபிசோடுகள்தான். இதில் பெரும்பாலும் மூன்று பெண்கள் இருப்பதால், அவர்கள் மீதான காதலை முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள். வேறு விஷயங்களையும் பேசியிருக்கலாம். காதலைத் தவிர பிற விஷயங்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

ரிரிசான்தான் நாயகி. அந்த வகையில் ஜோம்பிகளால் ஏற்பட்ட பிரச்னை, மனதில் உள்ள ஒட்டுதலால் பிறருக்கு ஏற்படுத்திய ஆபத்து ஆகியவற்றை அவர் நினைத்துப் பார்க்கிறார். அதனால் சனா கானை அவர் பேஸ்பால் மட்டையால் அடிப்பதில்லை. ஜோம்பிகளுடனான சண்டை அதிகம் காட்சிபடுத்தப்படவில்லை. முழுக்க அறைக்குள்ளேயே டிராமாவை படமாக்கிவிட்டனர். அதுதான் தொடரை சற்று ஏமாற்றத்திற்குள்ளாக்குகிறது. மற்றபடி எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். லெஸ்பியல் சமையல் பெண்மணி, உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் இளைஞர், மனிதர்களை எப்படி நிர்வாகம் செய்வது என நூல்களைப் படிக்கும் ஸ்டார்ட்அப் இயக்குநர், தரையை சுத்தப்படுத்துவதை செய்யும் இளைஞன். மோசமான இறந்த காலத்தை மறக்க வீடியோ எடுக்கும் பீஸ்ட் சான் என பாத்திரங்கள் வினோதமாக உள்ளன.

மாறுபட்ட அனுபவத்திற்காக தொடரைப் பார்க்கலாம். ஆறு எபிசோடுகள் என்பதால் அதிக நேரம் செலவாகாது. தொடர் இன்னும் முடியவில்லை. அடுத்த சீசன் வெளியாகும் என நம்பலாம். ஏனெனில் மாலில் உள்ளவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்