சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மர்மம்! ஆம்பர் ஹாகர்மன்

 





சிறுமி ஆம்பர் ஹாகர்மன்




டெக்ஸாஸின் ஆர்லிங்க்டன் பகுதியில் இருந்த தாத்தாவின் வீட்டில் ஆம்பர் ஹாகர்மன் வாழ்ந்து வந்தார். வீட்டுக்கு அருகில், ஒன்பது வயது சிறுமியான ஆம்பர், தனது ஐந்து வயது சகோதரன் ரிக்கியுடன் சைக்கிளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். 1996ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று, கைவிடப்பட்ட வின் டிக்ஸி என்ற காய்கறிக்கடையின் பார்க்கிங் பகுதியில்தான் ஆம்பர் காணாமல் போனார். எப்போதும் போல அங்கு தனது சகோதரனுடன் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் அடையாளம் தெரியாத மனிதர் மூலம் கடத்தப்பட்டார். அப்படித்தான் அங்குள்ளவர்கள் காவல்துறையில் தகவல் சொன்னார்கள். கருப்பு நிற பிக் அப் காரில் வந்த மனிதர் ஆம்பரை சைக்கிளில் இருந்து கடத்திச்சென்றார் என வயதான தம்பதியினர் 911 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் சொன்னார்கள். காவல்துறை அதிகாரிகள் வரும்போது, அங்கு ஆம்பரின் அடையாளம் ஏதுமில்லை.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஆம்பரின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்டது. நாயுடன் வாக்கிங் சென்றவர், கடத்தப்பட்ட இடத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் இருந்த இடத்தில் ஆம்பரின் உடல் கிடப்பதை காவல்துறைக்கு தகவல் சொன்னார். ஆம்பர் கடத்தி கொலை செய்யப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. இன்றுவரை குற்றவாளியின் கால் தூசியைக் கூட அடையாளம் அறிய முடியவில்லை. ஆனால், ஆம்பரின் பெயரில் பெண் குழந்தைகள் காணாமல் போனால் உடனே நடவடிக்கை எடுக்கும் எச்சரிக்கை வசதி ஒன்றை உருவாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளை காப்பாற்ற அரசு முயற்சி எடுத்திருக்கிறது.

‘’அவள் தனது முழு வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டாள். அவள் ஒரு சிறுமி. அவளை ஏன் கொல்லவேண்டும்?’’ என கேட்கிறார் சிறுமி ஆம்பரின் தாய் டான்னா வில்லியம்ஸ்.

ஆர்லிங்க்டன் பகுதி காவல்துறைக்கு, ஆம்பர் வழக்கு பெரும் தர்மசங்கடத்தை கொடுத்தது. ஏனெனில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கில் பெரிய முன்னேற்றமில்லை. 180 நாட்களுக்குள் ஒரு வழக்கை துப்பு  கண்டுபிடித்து குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லாதபோது அந்த வழக்கு தீர்க்க முடியாத வழக்காக மாறி விடுகிறது. பிறகு, கோப்பு அலுவலகத்தில் நிரந்தரமாக தூங்க தொடங்கிவிடும். ஆனால் ஆர்லிங்க்டன் காவல்துறை, ஆம்பர் வழக்கை, நவீன வசதிகளைப் பயன்படுத்தி கண்டுபிடிப்போம் என கூறி செயல்பட்டு வருகிறது.

ஆம்பர் அலர்ட் வசதியை உலகில் 33 நாடுகள் பின்பற்றுகின்றன. அந்தளவு பெண் குழந்தைகளை காணாமல் போனால் கண்டறிவதற்கான எச்சரிக்கை  மேம்பட்ட தன்மையில் உள்ளது. இதை டான்னா வில்லியம்ஸ், தன் குழந்தையால் சமூகத்திற்கு கிடைத்த நன்மை என்று கருதுகிறார்.

ஆம்பர் ஹாகர்மன், கடத்தப்ப்ட்ட இடத்திற்கு ஆம்பர் அலர்ட் என்று அரசு பெயரிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி 1998ஆம் ஆண்டு, பிறந்த இரண்டு மாதமான குழந்தை லெய் பிராட்பர்ரி  கடத்தப்பட்டு 90 நிமிடங்களில் மீட்கப்பட்டது. இந்த குழந்தை வளர்ந்து வழக்குரைஞராகி ஆம்பர் அலர்டிற்காக பிரசாரம் செய்து வருகிறார். இதை உண்மையில் தற்செயல் என்று கூறுவதா என்ன?

ஆம்பர் கடத்தப்பட்டு சில நாட்கள் உயிரோடு இருந்தபிறகுதான் கொல்லப்பட்டிருப்பார் என காவல்துறை கருதுகிறது. ஆம்பரின் பெற்றோர், உள்ளூரைச்சேர்ந்த கொலைகாரரைப் பற்றி  யாரேனும் தகவல் கொடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆம்பரைப் பற்றிய தகவல்களை தெரிந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். அவளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என டான்னா வில்லியம்ஸ் மக்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.  அவரின் குரலுக்கு நியாயந்தீர்க்கத்தான் யாருமில்லை.

மார்க் பெய்சர், கிறிஸ்டைன் பெலிசெக்

பீப்புள் இதழ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்