தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

 






நிக் ஹிக்கின்ஸ்



தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம்

நிக் ஹிக்கின்ஸ்  45

புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான்.

ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.

தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் ஒருவர் புதுமைத்திறன் கொண்ட கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாது. யோசிக்க முடியாது. படிக்க வேண்டிய நூல்களை வாசகர்களே முடிவு செய்யட்டும் என தடைசெய்யப்பட்ட நூல்களை நிக், சேமித்து வைத்து வழங்குகிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள் என அனைத்து விஷயங்களிலும் குறிப்பிட்ட ஒற்றைவாத கருத்துகள் திணிக்கப்படும் நிலையில் வளரும் குழந்தைகள் சார்பின்றி யோசிக்க பல்வேறு நூல்களை தடையின்றி வாசிப்பது முக்கியம். அந்த வகையில் நிக் முக்கியத்துவம் பெறுகிறார்.

ஜார்ஜ் எம் ஜான்சன்

 

இனவெறியைத் தூண்டும் மெட்டாவுக்கு எதிர்ப்பு

மெர்சி மூடெமி 34

 

ஃபேஸ்புக் எங்கெல்லாம் வலுபெறுகிறதோ அங்கு சக்தி வாய்ந்த அரசியல் கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு இனவெறியை, கலவரத்தை தூண்டுவதோடு ஜனநாயகத்தை வலியுறுத்தும் சக்திகளைக் கட்டுப்படுத்த தொடங்கும். அந்த வகையில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மீது வழக்குரைஞர் மெர்சி மூன்று வழக்குகளை பதிவு செய்து வாதிட்டு வருகிறார்.

இரண்டு எத்தியோப்பியர்களுக்கு வழக்குரைஞராக ஆஜராகும் மெர்சி, கடந்த நவம்பரில் நடந்த உள்நாட்டுப் போரில் மெட்டா நிறுவனம், இனவெறியைத் தூண்டியது என வழக்கு பதிவுசெய்துள்ளார். இதில், வழக்கு பதிந்த நபர்களில் ஒருவரின் தந்தை, ஃபேஸ்புக்கில் ஊக்குவிக்கப்பட்ட இனவெறி காரணமாக கொல்லப்பட்டார் என கூறினார். கென்யா நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மெர்சிக்கு ஆதரவாக நீதிபதி ஒருவர், தீர்ப்பை கூறியுள்ளார். அம்னெஸ்டி இண்டர்நேஷனல், முதல்முறையாக மெட்டா தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

பில்லி பெர்ரிகோ

மறுசுழற்சிதான் அடிப்படை

ஜான் சேவேயா 32

கென்யா நாட்டைச் சேர்ந்த ஜான், குப்பை பொறுக்குவோர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். சங்கத்தின் 30 ஆயிரம் பேர்களுக்கும் மேல் உள்ளனர். உலகம் முழுக்க 20 மில்லியன் குப்பை பொறுக்குவோர் உள்ளனர். ஆனால் இப்படி பணியாற்றுபவர்கள் சேகரிக்கும் குப்பைகளில் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதியெல்லாம் நிலங்களில் நீர்நிலைகளில் குப்பையாக வீசப்படுகிறது.

ஜானின் பெற்றோர் பயன்படுத்திய துணிகளை சலவை செய்து விற்கும் தொழிலை செய்து வந்தனர். சந்தையில் நடந்த விபத்தில், இத்தொழில் முழுக்க அழிந்து போனது. இப்போது குப்பை பொறுக்கும் தொழிலை செய்யும் ஜானுக்கு இதிலேயே நல்ல வருமானம் கிடைக்கிறது.

மறுசுழற்சி செய்யமுடியவில்லை என்று கூறுகிறீர்களா? அப்படியெனில் அப்படியொரு பொருளை தயாரிக்கவே வேண்டாம் என்று கூறுகிறார். இது அவரின் தொழிலை பாதிக்காதா, குப்பை பொறுக்கும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போகுமே என்றால், கென்யாவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை முழுமையாக அள்ளி முடிக்கவே நூறு ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் ஜான். அண்மையில் பாரிசில் நடைபெற்ற பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான சூழலுக்கு இசைவான நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மறுசுழற்சி மதிப்பு இல்லை. எனவே, அதை தொழிலாளர்கள் தீயிட்டு எரித்து வந்தனர். இதனால் சூழலில் மாசுபாடு கடுமையாக அதிகரித்தது. இதை குறைக்க அதுபோல பொருட்களை தயாரிக்கவேண்டாம் என ஒரே போடாக போடுகிறார்.

ஆரின் பேக்கர்

 

பசிஃபிக் பாதுகாவலர்

சிந்தியா ஹவுனியுஹி 29

இந்த ஆண்டின் முற்பகுதியில், பசிஃபிக் ஐலேண்ட் ஸ்டூடன்ஸ் ஃபைட்டிங் கிளைமேட் சேன்ஞ் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பலருக்கும் தெரிய வந்தது. இந்த அமைப்பில் பசிஃபிக் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் கடலில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவர், சிந்தியா.

ஐ.நா அமைப்பு  கூறியுள்ள பல்வேறு விதிகள், ஒப்பந்தங்களில் நாடுகள் எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர் என ஆராய்வது, அரசை சூழல் பற்றிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வைக்க ஊக்குவிப்பது ஆகியவற்றை சிந்தியாவின் அமைப்பு முக்கியமாக எடுத்துக்கொள்கிறது.

மேரி ராபின்சன்

வெயிலை சமாளிப்போம்

ஆண்ட்ரியாஸ் ஃபிளோரிஸ்  44

அனைத்து நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஏசிகளை முடுக்கிவிட்டு அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்களை விட வெளியில் ப்ளூ காலர் வேலைகளில் உடல் உழைப்பு தொழிலாளராக உள்ளவர்களுக்கு அதிக சிக்கல் ஏற்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான தொழிலாளர் விதிகளை உருவாக்குவது, தொழிலாளர்களுக்கென தனி வெப்பம் அறியும் ஆப்பை உருவாக்கியுள்ளார் ஆண்ட்ரியாஸ். இதைப்பயன்படுத்தி வேலை செய்யும் பகுதியில் உள்ள வெப்பநிலையை அறிந்து அதற்கேற்ப முடிவுஎடுத்து வேலை செய்யலாம். வெயிலால் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்து குறிப்பிட்ட இடைவேளை விடுத்து தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தருகிறார் க்ரீஸ் நாட்டு சூழல் இயற்பியலாளர் ஆண்ட்ரியாஸ்.

ஆரின் பேக்கர்

 

டிஜிட்டல் காலனிமயமாக்கலை தடுப்பவர்

அபேபா  பிர்கானே

செயற்கை நுண்ணறிவு, அதை யார் வடிவமைக்கிறார்களோ அவர்களின் மூளையில் உள்ள கருத்துக்களின் படியே உருவாகிறது. இதில் மதவாதம், இனவெறி, சாதி என பலவற்றையும் இணைத்து விடுபவர்களே அதிகம். வெளிநாட்டில் உள்ள ஏஐ வசதிகளில் பெரும்பாலானவை கருப்பின மக்களை குற்றவாளிகளாக காட்டுபவை. அவர்களுக்கு பொருந்தாதவை.

இப்படி செயற்கை நுண்ணறிவு வசதிகள் உள்ள பொல்லாதவைகளை எடுத்து சொல்லி  அதை மேம்படுத்த முயன்று வருகிறார் ஆராய்ச்சியாள் அபேபா. ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், தனது நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு பற்றி பிரசாரம் செய்து வருகிறார். செயற்கை நுண்ணறிவுக்கு பயன்படும் டேட்டா மாடல்களை கவனித்து ஆராய்வதே அபேபாவின் முக்கியப் பணி. தனது நாட்டில்  ஏஐயை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சேர்த்துதான் தனது ஆராய்ச்சியை மக்கள் முன்வைக்கிறார். கட்டுரைகளை எழுதுகிறார். அதைபற்றி பேசி வருகிறார்.

 

 

மார்க்கரேட் மிச்செல்

 

பால்புதுமையினத்தவர்களுக்குப் பாதுகாப்பு

டைலன் பிராண்டிட் 17

பால்புதுமையின சிறுவர்களுக்கு பாதுகாப்பை தடை செய்து அர்கான்சாஸ் வினோதமான சட்டம் இயற்ற, அதை டைலன் எதிர்த்து போரிட்டவர்களில் டைலனும் ஒருவர். 2021ஆம் ஆண்டு இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு முடிவில் தீர்ப்பு பால்புதுமையின குழந்தைகளுக்கு ஆதரவாக வந்தது.

இந்த உலகில் நீங்கள் உண்மையாக இருந்து கருத்துகளை கூறி உயிர்பிழைப்பது கடினம். முதுகை வளைத்து கைகளை கூப்பி முகமன் கூற பலரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், டைலன் செய்தது ஒன்றுதான். தான் நம்பிய கருத்தை உறுதியாக பின்பற்றி சட்டத்தின் வழியே போராடினார். கருணையும் கனிவும் கொண்ட டைலன் இனிமேல் சற்று அமைதி பெறலாம். தனது வாழ்வை நிம்மதியாக வாழலாம்.

மிஸ் மேஜர் கிரிஃபின் கிரேஸி

 

போதைப்பொருள் மரணங்களை தடுப்பவர்

நாபருன்தாஸ் குப்தா 44

நார்த் கரோலினா ஜில்லிங்க்ஸ்  உலக பொது மருத்துவ பள்ளியைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் போதைப்பொருட்களை அதிகம் உண்டு பாதிப்பு அடைபவர்களை காப்பதற்கான மீட்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் இதுபோல பிரச்னை  அதிகம் உள்ளது. ரெமடி அலையன்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.  போதை மருந்துகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறந்து வருகிறார்கள். இந்த மரண எண்ணிக்கை என்பது வெறும் கோட்பாடு அளவில் அல்ல. நடைமுறையில் நடக்கிறது என தீவிரமான தொனியில் கூறுகிறார்.

தாரா லா

 

டைம் 100 செப்.2023 இதழின் கட்டுரைகளை தழுவியது.

 

 

 

 

 

 

கருத்துகள்