உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100
ஷாய் சுரூய் 26
பழங்குடி நிலங்களைக் காப்பவர்
சுரூய் பிரேசில்
நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார்.
தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு
மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக்
காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும்
அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை
அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின்
பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்”
என்றார்.
அர்மானி சையத்
நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே,
33
நோயாளிகளுக்காக போராடும் போராளிகள்
மேற்சொன்ன
இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின்
பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய
மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மையே காரணம்.இந்த மருந்து விலை மலிவானது. வேறு மருந்தை
எடுத்துக்கொண்டால் வேகமாக பாதிப்பின்றி குணமாகி இருக்கலாம். ஆனால் அது தனியார் நிறுவனத்தின்
கையில் உள்ளது.
தனியார் மருந்து
நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் , பாதுகாப்பான காச நோய் மருந்தை விற்கிறது. ஆனால்
இதன் விலை அதிகம். காப்புரிமையை இந்த நிறுவனமே வைத்திருப்பதால், இந்த மருந்தை பிற நிறுவனங்கள்
தயாரித்து விற்க முடியாது. கடந்த ஜூலை மாதம் காப்புரிமை முடிந்தநிலையில் , மீண்டும்
காப்புரிமை பெறுவதற்கு ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால்
காசநோய்க்கான மருந்து சந்தையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் மட்டுமே கோலோச்சும். வேறு எந்த
நிறுவனங்களும் அதன் அருகில் கூட வரமுடியாது.
இந்தியாவைச்
சேர்ந்த நந்திதா, ஜான்சன் தனது காசநோய் மருந்தை
இரண்டாவது முறை காப்புரிமைக்காக விண்ணப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் முறையிட்டார். அரசும், இதை ஏற்றுக்கொண்டு காப்புரிமைக்கு
தடை விதித்துள்ளது. இதன்மூலம் பிற நிறுவனங்கள் காசநோய்க்கான மருந்தை தயாரித்து குறைந்த
விலையில் விற்க முடியும். இந்த தீர்ப்பு வந்தபிறகு
ஜான்சன் நிறுவனம் பிராண்ட் இல்லாத ஜெனரிக் மருந்துகளை தயாரித்து விற்க முயல்வதாக கூறியுள்ளது.
இதன்மூலம் வறுமையான நிலையில் உள்ள காசநோய் நோயாளிகள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்க
முடியும் என்பது அந்த நிறுவனத்தின் கருத்து. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புமேஸா அவர்கள்
நாட்டில் காப்புரிமைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
‘’இதுபோன்ற
ஏகபோக மருந்து விற்கும் நிலைமையை பிற நாடுகளில் நடைபெறாமல் தடுக்கவேண்டும்’’ என்றார்
நந்திதா.
அன்னா கார்டன்
காலி அம்டூனி 30
அகதிகளுக்கான உத்வேக குரல்
இத்தாலி குடியுரிமை
இல்லாமல் அங்கு ராப் பாடல்களை பாடிக்கொண்டு வாழும் புகழ்பெற்ற மனிதர். பாடுகிறோம்,
சம்பாதிக்கிறோம் என்று இல்லாமல் அகதிகளுக்கான உரிமைக்குரல் கொடுப்பது, அவர்களைக் கடலில்
இருந்து பாதுகாப்பாக இத்தாலி நாட்டிற்குள் கூட்டி வர சிறு படகுகளை வழங்குவது, அகதிகளைப்
பற்றிய கரிசனத்தை பாடலாக எழுதி பாடுவது என இயங்கி வருகிறார்.
காலி வாங்கிக்
கொடுத்த படகைக் கூட அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது. அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாத காலி, தான் இத்தாலியன் அதே போல துனிசியன் என்று கூறிக்கொண்டு இயங்கி வருகிறார்.
இவரது பாடல்களில் அரபி, பிரெஞ்சு, ஆங்கில வரிகள் உண்டு. ‘’வாழ்க்கை மற்றும் உணர்வு
நிலைகளை ஒன்றாக்கி அதை இத்தாலியர்களின் மனதில் கொண்டுவருவதற்கு முயன்று வருகிறேன்’’
என்றார்.
அர்மானி சையத்
ரினா கோனோய் 23
பாலியல் வல்லுறவு, தாக்குதல்களுக்கு
எதிரான குரல்
2011 ஆம்
ஆண்டு டோகோக்கு நிலநடுக்கம், சுனாமி ஆகிய பேரிடர்களில் ஜப்பானிய தற்காப்பு ராணுவப்படைப்பிரிவு
செய்த தன்னலமற்ற பணிகளைப் பார்த்துவிட்டு, ராணுவத்தில் சேர முடிவு செய்தார். நோக்கம்
நன்றாக இருந்தாலும் அங்கு வேலை செய்யும்போது பாலியல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டார்.
இதனால் 2022ஆம் ஆண்டு அந்த வேலையைக் கைவிட்டு ராணுவத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட
பெண் வீர ர்களைப் பற்றி பேசத் தொடங்கினார்.
அரசு அதைப்
பற்றிய விசாரணை தொடங்குமளவு அவரின் பிரசாரம் நீண்டதாக மாறியது. இப்போது மெல்ல ராணுவத்தில்
பணியாற்றிய பெண் வீரர்கள் தங்களின் வேதனைக் கதைகளை உலகிற்கு கூறத்தொடங்கியுள்ளனர்.
ஜப்பானிய சமூகத்தில் பாலியல் வல்லுறவுகளை தாக்குதல்களை பேசுவதே தவறு என்று நினைத்த
எண்ணம் மாறிவருகிறது. உரையாடினால்தான் தவறுகளை களைய முடியும் என்ற நம்பிக்கையை ரினா
கோனோய் ஏற்படுத்தியிருக்கிறார்.
ஷியோரி இடோ
ரிக்கி ஹெல்ட் 22
பசுமையைக்
காக்க சட்டப்போராட்டம்.
நிறையப் பேர்
இப்படி செய்வார்களாக என்று தெரியவில்லை. ஆனால் ரிக்கி ஹெல்ட் பேசுவதை விட செயல்படுவதே
மேல் என முடிவு செய்துவிட்டார். அவர் சில்ரன்ஸ் டிரஸ்ட் என்ற சட்ட அமைப்பு மூலம் மாண்டனா
மாகாண அரசு மீது சூழல் சட்டங்களை கடைபிடிக்கவில்லை என்ற வழக்கு போட்டுவிட்டார். இளைய
தலைமுறை மோசமான சூழ்நிலையில் வாழ வேண்டியுள்ளது.
பிறருக்கு அக்கறையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது என ரிக்கி நினைக்கிறார்.
அரசு தனது
குடிமக்களுக்கு சுத்தமான ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தரவேண்டும் என ரிக்கி ஹெல்ட்
நினைக்கிறார். இவரின் செயல்பாடு, அமெரிக்காவில் அரசியலமைப்பு சட்டப்படி சூழல் சார்ந்த
அக்கறையில் மாகாண அரசை எதிர்த்து போடப்பட்ட முதல் வழக்கு என்ற வகையில் கவனம் ஈர்த்துள்ளது.
இதில் கிடைக்கும் தீர்ப்பு அரசை நல்வழியில் செலுத்த வாய்ப்புள்ளது. வழக்கில் தீர்ப்பு
வந்தபிறகு சூழல் சார்ந்த அல்லது நீரியல் சார்ந்த படிப்பை ரிக்கி ஹெல்ட் தேர்ந்தெடுத்து
படிக்கவிருக்கிறார். தொடர்ச்சியாக பசுமை தொடர்பான தனது செயல்பாடுகளை செய்யவிருக்கிறார்.
ஜெஃப்ரி க்ளூகர்
துவா தாரிக்
30
சர்வாதிகாரத்தை
எதிர்க்கும் இளம் தலைவர்
2019ஆம் ஆண்டு
சூடான் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சி கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக போராடியவர்களில்
முக்கியமானவர், துவா தாரிக். அமைதியான நோக்கம் ஒன்றை இலக்காக கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கு
பிறகு ராணு ஆட்சி கலைந்து மக்கள் இயல்பான வாழ்க்கை தொடங்கியது என்று எண்ணினர். ஆனால்,
2021ஆம் ஆண்டு மீண்டும் ராணுவத்தில் கலகம் நடைபெற்று சூழல் மாறியபோது, நாட்டின் தலைநகருக்கு
சென்று அங்கு போர்க்கொடுமையால் உடல், மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வைத்து ஓவியங்களை
வரையும் செயல்பாட்டை செய்தார். ‘’நீங்கள் பயப்படக்கூடாது.
பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உலகம் இருளாக, மோசமாக இருந்தாலும் பயப்படாதீர்கள். உங்களைச்
சுற்றி நாங்கள் இருக்கிறோம்’’ என்று துவா தைரியம் கூறியிருக்கிறார்.
கார்ல் விக்
அனைத்து கட்டுரைகளும்
டைம் வார இதழில் (டைம் 100 செப்.2023) இடம்பெற்றவை.
கருத்துகள்
கருத்துரையிடுக