இடுகைகள்

ஆரோக்கியம். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதுமான ஊட்டச்சத்து என்பது உண்மையா?

படம்
pixabay உடல் சிறப்பாக இயங்க வைட்டமின்களும் மினரல்களும் தேவை. ஆனால் இவை உடலில் எந்தளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கான தினசரி அளவுகோல் உள்ளது. அதிகமானால் பல்வேறு சிக்கல்களை உடல் சந்திக்கும். குறைவானால் உங்களுக்கே தெரியும், நோய்கள் உருவாகும். வைட்டமின்கள் பாதிப்பு உடலில் பல்வேறு உணவுப் பொருட்கள் மூலம் மெக்னீசியம் அதிகரித்தால் வயிற்றுப் போக்கு அதிகரிக்கும். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ கூடுதலானால், எலும்புகள் அடர்த்தி குறையும். இந்த சத்து குறைந்தால் கண்களுக்கு லென்ஸ்கார்ட்டில் கண்ணாடி ஆர்டர் செய்யவேண்டியிருக்கும். விட்டமின் சி உடலில் குறைந்தால் மூக்கில் நிற்காமல் ரத்தம் கொட்டத் தொடங்கும். உலகளவில் 2.5 சதவீதம் பேர் அதிகளவு வைட்டமின்கள் உடலில் சேர்வதால் பல்வேறு பாதிப்புகளை அடைகின்றனர். என்ன செய்யலாம்? ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவான பாதுகாப்பான வைட்டமின்களின் அளவு என்று ஒன்று கிடையாது. எனவே, முடிந்தளவு அனைத்து சத்துகளும் கிடைக்கும் அளவு உணவுப்பொருட்களை சாப்பிடுவது அவசியம். பால், முட்டை, அரிசி, முட்டை, இறைச்சி என அனைத்து பொருட்களையும் சாப்பிடுவது அவசியம். இல்லையென

காபியை குடித்துவிட்டு தூங்கினால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபி குடித்து தூங்கினால் என்ன விளைவு ஏற்படும்? நீங்கள் கடுமையான உழைப்பாளி. வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தூங்க கூட நேரமில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? டீயை விட காபியை இப்போது தேர்வு செய்யலாம். இதன் விளைவுகள் என்ன? பொதுவாக மிகவும் சோர்வாக இருக்கிறது. உடனே காபியை குடிக்கத் தோன்றுகிறது. உடல் சோர்வாக தூக்கம் வருவது போன்று இருந்தால் 30 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. காபி குடித்தால் இதே தூக்க நேரத்தை பத்து நிமிடங்களாக மாற்றிக்கொள்ளலாம். இது ஆழமான தூக்கத்தை ஒத்த நல்ல பயன்களைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில் டீ, காபி குடித்தால் உங்களுக்கு தூக்கம் வராது. அப்படி தூங்கி எழுந்தாலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்படி? காபி குடித்தவுடன் அதன் மூலக்கூறுகள் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து அதிலுள்ள அடென்சின் மூலக்கூறுகள் மூளையில் உள்ள செல்களுக்கு செல்கிறது. காபீனின் தன்மையால் மூளை சோர்விலிருந்து விழிக்கிறது. இந்த மாற்றங்கள் காபி குடித்த 20 நிமிடங்களிலிருந்து தொடங்கிவிடுகிறது. இதனால் காபி குடித்து எழும் நேரம் குறைகிறது. எழும்போத