இடுகைகள்

கோமாளி மேடை எக்ஸ்க்ளூசிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் செய்திகள் உங்களுக்காக.....

படம்
கோமாளி செய்திகள்! pixabay ஆஹா... மழை... மழை கேரளத்தில் இரு மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 204.4 மி.மீ. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. எர்ணாக்குளம், கண்ணூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர் ஆகிய நகரங்களிலும் மழை பெய்யும் என்று கூறு மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளனர். கேரள அரசு, தனியார் வானிலை நிறுவனங்களுக்கும் நிதியளித்து, தகவல்களை பெற்று வருகிறது. நியூஸ்மினிட் அட அதிவேக கணிதன் இங்கிலாந்தைச்சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர் நாபு கில்(10), அதிவேகமாக கணக்குபோட்டு கின்னஸ் சாதனை செய்துள்ளார். இவர் ஒரு நிமிடத்தில் 196 பெருக்கல், வகுத்தல் கணக்குகளை தீர்த்து சாதித்துள்ளார். இவரோடு 700 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். யுபிஐ     pixabay நோ.. நோ ரொம்ப பழசு ஃபேஸ்புக் நிறுவனம், புதிய வசதி ஒன்றை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர்கள் 90 நாட்களுக்கும் முந்தைய பழைய செய்திகளை பதிவிட்டால், புதிய வசதி அவர்களை எச்சரிக்கும். தவறான பழைய செய்திகளை புதிய செய்திகள் போல பரப்புவதை

பிரபலங்களின் தொப்பிகள் -கயல்விழி பாமா

படம்
பிரபலங்களின் தொப்பிகள்    அரசியலோ சினிமாவோ தன்னை சிறப்பாக வெளிப்படுத்துகிறவர்களே ஜெயிக்கிறார்கள் என்பது ஹிஸ்டரி சொல்லும் உண்மை .  காந்தியின் கண்ணாடி , எம் . ஜி . ஆரின் ரஷ்ய குல்லா மற்றும் கண்ணாடி , பாரதியின் தலைப்பாகை என இவையின்றி இவர்களை உங்களால் கற்பனை செய்ய முடியுமா ? இந்த  புகழ்பெற்ற மனிதர்கள் அணிந்த தொப்பிகளைப் பற்றி பார்ப்போமா ? சர்ச்சிலின் ஹோம்பர்க் தொப்பி    உலகப்போரின்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தனது சுருட்டுகளுக்கு மட்டுமல்ல , தலையில் அணிந்த  தொப்பிகளுக்காகவும் புகழ்பெற்றவராவார் .. நடுவில் அழகிய ரிப்பன் வைத்து கம்பளியில் தைக்கப்பட்ட இத்தொப்பியின் மேற்பகுதியில் இதனை தனித்துவமாக காட்டும் ஒரு பள்ளம் ஒன்றுண்டு . முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஹோம்பர்க் தொப்பிகள் இன்றைய  தொப்பிகளைவிட பெரியவை .    1880 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசரான 7 ஆம் எட்வர்ட் ஜெர்மனி , பேட் ஹாம்பர்க் நகருக்கு சென்றார் . அங்கு வழங்கப்பட்ட ஹாம்பர்க் தொப்பியின் அழகில் மயங்கி , அதனை எங்கும் பயன்படுத்த தொடங்க உலகமே அவரை லைக் செய்து ஹாம்பர்க் தொப்பிக்கு ஆர்டர் குவிந்தது

3 வது உலகப்போருக்கு முன்னோட்டமா?

படம்
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை - 3 வது உலகப்போருக்கு முன்னோட்டமா ?      கடந்த செப்டம்பர் 9 அன்று வடகொரியா தனது 5 வது அணு ஆயுத சோதனையை உலகமே அதனை எதிர்த்தாலும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிவிட்டது . ஐ . நா சபை விதித்த   5 பொருளாதார தடைகளை மீறி வடகொரியா இவ்வாண்டில் நிகழ்த்தும் இரண்டாவது  அணு ஆயுத சோதனை இது .  பல நாடுகளின் கண்டன எதிர்ப்புகளைத் தாண்டி நிகழ்த்தப்பட்ட இந்த அணு ஆயுத சோதனை என்பது ஒப்பீட்டளவில் முன்பு நடந்த சோதனையைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது . வடகொரியா நடத்திய 4 வது அணு ஆயுத சோதனையில் 6 கிலோ டன்கள் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது எனில் தற்போது நடத்தப்பட சோதனையில் 20 கிலோடன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு இது 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டின் சக்திக்கு சமம் என திகில் கிளப்புகிறது தென்கொரியாவின் வானிலை அமைப்பு . அணுவைப் பிளந்ததால் நடுக்கம்  அணுகுண்டு சோதனை பெருமிதம் நெஞ்சில் இருக்கும்போது அதன் பக்கவிளைவாக 5.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சோதனை நடந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது .  முன்னர் நடந்த சோதனையின் போது நிலநடுக்க அளவு 4.8 என்ற தகவல்கள

அசரடிக்கும் புதுமை கட்டிடங்கள்

படம்
அசரடிக்கும் புதுமை கட்டிடங்கள் - தொகுப்பு: சோமவீர சுந்தர்     கட்டிடங்கள் கட்டுவது தலைக்கு மேலே ஒரு கூரை என்ற பழைய கருத்தையெல்லாம் என்றோ தாண்டிவிட்ட இன்றைய நவீன கட்டிடங்கள் குறிப்பிட்ட நகரின் பெருமை மிக்க பேஷன் அடையாளமாகவே வடிவமைக்கப்படுகின்றன . கட்டிடம் புகழ்பெற்றுவிட்டால் , கட்டிடத்தை வடிவமைப்பாளரின் பெயரை வாழ்நாள் முழுக்க உலகுக்கு சொல்லும் போர்ட்போலியோவாக அமைந்து , வரலாற்றிலும் பதிவாகிறது . இதோ இங்கு நாம் காணப்போவதும் அப்படி கிரியேட்டிவிட்டியை கரைத்து ஊற்றிய கட்டிய விருது வென்ற சில கட்டிடங்களைத்தான் . நட்பு மையம் (Friendship center), வங்காளதேசம்     2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்தின் தொன்மையான இடமொன்றினால் இன்ஸ்பிரேசன்   ஆன காஷப் மெஹ்பூப் சௌத்ரி , அர்பனா என்னும் தொண்டு நிறுவனத்திற்காக கட்டிய அழகு கட்டிடம்தான் இது . வங்காளதேசத்தின் கைபந்தா எனுமிடத்தில் இந்த நட்பு மையம் அமைந்துள்ளது . வங்காளதேசத்தின் டாகாவில் பிறந்த காஷப்பின் தந்தையும் கட்டிட பொறியாளர்தான் . 1995 ஆம் ஆண்டு காஷப் , பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (BUET) கட்டிடக்கலை பயின்றவராவார் . புகைப்படம

இந்தியர்களின் 5 தன்னிகரற்ற கண்டுபிடிப்புகள் -ச.அன்பரசு

படம்
இந்தியர்களின் 5 தன்னிகரற்ற கண்டுபிடிப்புகள்  - ச . அன்பரசு கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் பங்கு என்றால் ஜீரோ மற்றும் சதுரங்கம் என்று கூறுவார்கள் . ஆனால் சமகாலத்திலும் இந்தியர்கள் பல சமூகத்திற்கு பயன்படும் ஆல் நியூ அவதாரமாக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் . இதுவரை நாமறியாத இந்தியர்கள் கண்டுபிடித்த 5 கண்டுபிடிப்புகளைப் பற்றித்தான் படிக்கப்போகிறோம் .     பிளாஸ்டிக் சாலைகள் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பெருகிவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த அதனை சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என கூறியிருந்தது . பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலை கெடுத்தாலும் அதனை மறுபயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது அதன் மாசுபாட்டை குறைக்கமுடியும் . அதற்கு ஒரு உதாரணம் பிளாஸ்டிக் சாலைகள்தான் . இதனை சாதித்து காட்டியவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவரான டாக்டர் ராஜகோபாலன் வாசுதேவன் . கழிவு மேலாண்மையில் ஆர்வம் கொண்ட ஆர் . வாசுதேவன் 2006 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்த பிளாஸ்டிக் சாலைகளை உருவாக்கும் நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார் . பிளாஸ்டிக் மனிதன் என்று கூறும்

உலகின் முதல் முகமாற்று அறுவைசிகிச்சை -தொகுப்பு:சரஸ் சோபியா.

படம்
உலகின் முதல் முகமாற்று அறுவைசிகிச்சை   -தொகுப்பு:சரஸ் சோபியா.  உலகில் நடைபெறும் பல்வேறு பணிகளில் விபத்து ஏற்படுவது சகஜம் . ஆனால் அந்த விபத்து உடலில் ஏற்படுத்தும் தழும்புகளையும் வலிகளையும் தாண்டி நடைமுறை வாழ்க்கைக்கு வருவது அவ்வளவு எளிதல்ல . நம்மைப்போல ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்த பேட்ரிக் தன் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறும் என நினைத்திருப்பாரா ?    அன்று அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அவரது வாழ்வை முதலிலிருந்து தொடங்க செய்தது . நடந்தது என்ன ? 2001 ஆம் ஆண்டு மிசிசிபியில் வசித்து வந்த தீயணைப்பு வீரரான பேட்ரிக் ஹர்டிசன்னுக்கு மிசிசிபி மாநிலத்தின் கட்டிடம் ஒன்றில் தீ பிடித்ததாக அழைப்பு வர , தன் குழுவோடு கிளம்பி அந்த இடத்திற்கு சென்றார் . அங்கு உள்ளே தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஹர்டிசன் மேல் தீயோடு கட்டிடக்கூரை இடிந்து விழுந்ததில் தலை , கண்புருவங்கள் , உதடு , காதுகளில் கடுமையான நெருப்பு காயம் ஏற்பட்டது . 63 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உயிர்பிழைத்ததே ஆச்சரியம் எனும்போது முகம் உருகி உருக்குலைந்து போனதைப்பற்றி எப்படி கவலைப்பட முடியும் ? சிதைந்துபோன முகத்து

உலகை மாற்றிய வணிகத்தடங்கள்! -ச.அன்பரசு

படம்
உலகை மாற்றிய வணிகத்தடங்கள் ! -ச.அன்பரசு     உலகை விரிவடையச்செய்து பல நாட்டு மக்களை பன்னாட்டு  கலாச்சாரங்களோடும் கைகோர்க்கச் செய்யும் நாகரிகப்போக்குக்கு வழிவகுத்தது எது ? நம்முன்னே விரிந்துள்ள சாலைகள்தான் . தொன்மைக்காலம் தொடங்கி வணிக சரக்குகளை வாங்குவதற்கு வணிகர்கள் சென்று வந்த வழித்தடங்களே இன்றும் முக்கியமான பாதைகளாக உறுதியாக உருவாகியுள்ளன . வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்ட வழித்தடங்களின் வரலாறைத்தான் இங்கே முதலடி எடுத்து வைத்து படிக்கப்போகிறோம் . வாருங்கள் !   பட்டு சாலை     சீனாவையும் ரோம நாட்டையும் இணைக்கும் 6 ஆயிரத்து 500 கி . மீ தொலைவு நீண்ட பட்டுசாலை மிகவும் பழமையானதும் புகழ்பெற்றதுமான வணிகச் சாலையாகும் . சீனப் பட்டுத்துணிகள் இவ்வழியே கொண்டு செல்லப்பட்டு லாபகரமாக விற்பனை நடைபெற்றதால் பட்டுச்சாலை என்று பெயர் பெற்றது .     1877 ஆம் ஆண்டு பட்டுச்சாலை என்ற பெயரை இந்த சாலைக்கு வைத்தவர் ஜெர்மானிய புவியியலாளரான பெர்டினண்ட் வான் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்பவராவார் . முதல் நூற்றாண்டிலிருந்து  இச்சாலை வழியே ரோம நாட்டுக்கும் சீனாவுக்கும் கம்பள