இடுகைகள்

திருட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல செய்தி - முன்னர் இளம் குற்றவாளி இப்போது மாரத்தான் வீரர்!

படம்
  ஒருவர் இளம் வயதில் வழிதவறி சிறை சென்றுவிட்டால் இயல்பான வாழ்க்கைக்கு மீள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளை மீட்க சமூகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குற்றவாளிகளை மனம் திருந்தியபிறகு, இயல்பான சமூகத்தில் வாழ அனுமதிப்பது கடினமாகவே உள்ளது. சமூக கண்ணோட்டம், முன்முடிவுகள், போலியான செய்திகள், வதந்திகள்  என நிறைய அம்சங்கள் பின்னணியில் உள்ளன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர் சிறை சென்றவர். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு விளையாட்டு மூலம் தனது வாழ்க்கையை மடை மாற்றிக்கொண்டார். அதோடு பிறருக்கும் வழிகாட்டி உதவி வருகிறார்.  2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் ஜான் மெக்கவி அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார். அவரது இலக்கை எட்டிப்பிடிக்க நான்கு கி.மீ. தூரம்தான் இருந்தது. சாமோனிக்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதை எட்டிப்பிடிப்பது சவாலானது. ஆனால் முடியாத ஒன்றல்ல. நாற்பது வயதில் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது.  பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜானின் வாழ்க்கை வேறுவிதமாக இரு

பிழைப்புக்கு நகரம் வந்து பலே திருடர்களாகும் ரோமியோ ஜூலியட்!

படம்
  பலே தொங்கலு தெலுங்கு தருண், இலியானா இயக்கம் விஜய பாஸ்கர் சிற்றூர்களிலிருந்து ஆண், பெண் (ராம், ஜோதி)என இருவர் ஹைதராபாத்திற்கு ஓடி வருகிறார்கள். இந்த பயணத்தில் அவர்களின் பயணப்பை, ரயில் பயணத்தில் காணாமல் போகிறது. வேறுவழியில்லாமல் தங்களை ஏமாற்றிய நகரத்தை அவர்களும் திருடர்களாக மாறி ஏமாற்றுகிறார்கள். இந்த திருட்டுகளின் விளைவாக போதை மாஃபியா தலைவர், போலீஸ் என இரண்டுபக்கமும் வேட்டை தொடங்க காதல் ஜோடியின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை. தருண் (ராம்), ஆபீஸ் வேலைக்கு அப்பா சேர்த்துவிட முயல்கிறார். ஆனால் அவருக்கு 9 டு 5 என்ற வேலை பிடிக்கவில்லை. ஏதாவது வணிகம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அதில் என்ன செய்வது என்று அவரது அப்பாவிற்கு கூறத்தெரியவில்லை. எனவே, வீட்டிலிருந்து தப்பி நகரத்திற்கு வந்து ஏதாவது செய்ய நினைக்கிறார். இன்னொருபக்கம், ஜோதி எனும் இலியானா, இவருக்கு விளம்பர மாடல் ஆசை.வீட்டில் பாட்டி கல்யாணம் செய்து வைக்க முயல்கிறார்கள். எனவே அவர் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வருகிறார். இப்படிப்பட்ட குணாம்சம் கொண்ட இருவரும் ரயிலில் சந்திக்கிறார்கள். அங்கு

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனைப் பொறுத்தவரை அவனுக

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து   அவளையும் த

''கொலைகளை செய்யாமல் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை''

படம்
  1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிகாகோவின் புறநகரான லிங்கன்வுட்டில் பிறந்தார். அப்பா, தனியார் உருக்காலையில் வேலை செய்து வந்தார். வில்லியமிற்கு செக்ஸ் என்பது மகா பாவம் என சொல்லி வளர்த்தனர். செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் வரும் என கூறினார்கள். பிறரது வீட்டுக்குள் பிறந்து, அங்கு வாழும் பெண்களின் ஜட்டி, பேன்டீசை திருடுவது வில்லியமிற்கு   மகிழ்ச்சியாக   இருந்தது. ஏறத்தாழ பாலுறவு கொள்வது போன்ற சந்தோஷம். 1942ஆம் ஆண்டு வில்லியமிற்கு பதிமூன்று வயது. அப்போதே குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று காவல்துறையால் கைதானார். வில்லியமின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் அளிக்க, அவர்கள் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போதே பதினொரு கொள்ளைகளை வில்லியம் செய்திருந்தான். ரைபிள், நான்கு பிஸ்டல்கள் என திருடி வைத்திருந்தான். பெற்றோர் தம் செல்வாக்கைப் பயன்படுத்த வில்லியம் மீது வழக்கு பதியப்பட வில்லை. இந்தியானாவில் உள்ள பள்ளியொன்றில் பதினொரு மாதங்கள் இருந்த வில்லியம், பின்னர் ஊருக்குத் திரும்பினார். வில்லியம் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருட வில்லை. அதை வாய்ப்பு கிடைக்கும்போது அணிந்தும

செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

படம்
  கல்யாண் -கிக் (தெலுங்கு) ரவிதேஜா இயக்குநர் – சுரேந்திர ரெட்டி வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,   அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண். கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே? வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவங்களை சமூ

திருட்டு, கொலை ஆகியவற்றில் உள்ள உளவியல் கோட்பாடுகள்

படம்
  மக்கள் கூடும் இடங்களான மதுபானக்கடை, கிளப், பப் ஆகியவற்றில் எப்படியும் வன்முறை சம்பவங்கள் நடந்துவிடுவது வாடிக்கை. மது குடித்துவிட்டு மனிதர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டும்போது, பிறர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் மதுவைத் தொடர்ந்து அடிதடி, கைகலப்பு,   கொலை வரை நீள்கிறது. மதுபானக்கடைகளைப் பொறுத்தவரை அடிப்பவர், அடிபடுபவர் என இருவருமே மது அருந்திய மது பிரியர்கள்தான். நாட்டின் தூண்களான குடிமகன்கள்தான்.   உளவியலாளர் ஹெண்டர்சன் வன்முறை என்பதை   கைதிகள், சிறை நிர்வாக அதிகாரிகள் என இரண்டு வகையாக பிரித்துக் காட்டுகிறார். குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்த கைதிகளை அடக்கி வழிக்கு கொண்டுவர, தனக்கேற்றாற்போல நடந்துகொள்ள வைக்க சிறைத்துறை   அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக சிறைக்கைதியை அடித்து உதைப்பது, தனிமைச்சிறையில் அடைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள். சிறை என்பது தனி உலகமாக சமூகத்திற்கு கட்டுப்படாத இடமாக உள்ளது. சிறைக்கு அடுத்து குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம், மனநல குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் மீதான வன்முறை என்பது

பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

படம்
  கூமன் மலையாளம் இயக்கம் ஜீத்து ஜோசப் நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக் தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை. காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான். சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன். அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன்

தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

படம்
  கல்யாணி - தேவன் கல்யாணி தேவன் அல்லயன்ஸ் 220 தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு.  கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள்.  ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு

நகைகளை குறிவைத்து திருடும் ஓநாய்க்கூட்டத்தைப் பிடிக்கும் ஸகூபிடூ குழு! - பிக் டாப் ஸ்கூபிடூ அனிமேஷன்

படம்
              பிக் டாப் ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் நகரில் ஓநாய் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச்செல்கிறது . இதனை யார் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை . அப்போது அங்கு வெல்மாவின் துப்பறியும் குழு வருகிறது . எப்படி மர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை . சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து சேரும் குழுவினர் , அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது அங்குதான் ஓநாய் பல்வேறு நகைக்கடைகளை உடைத்து நகைகளை அள்ளிச்சென்று வருவதைக் கண்டுபிடிக்கின்றனர் . இப்படி நகைகளை திருடுவதும் குறிப்பிட்ட பேட்டர்னில் நடைபெறுகிறது . இப்படி நடைபெறும் திருட்டுகளை காவல்துறை பிடிக்கமுடியாமல் திணறுகிறது . இந்த வகையில் இன்னும் ஒரு நகை மட்டுமே திருட வேண்டியிருக்கிறது . வெல்மா , பிரெட் , டெப்னி , சேகி , ஸ்கூபி ஆகியோர் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர் . இதனால் அவர்களே அங்கு சர்க்கஸை நடத்தவேண்டியதாகிறது . ஆளுக்கொரு வேலையை ஏற்றுக்கொள்கின்றனர் . இதில் வெல்மா தவிர பிறர் அனைவருமே சோபித்து ப