பிழைப்புக்கு நகரம் வந்து பலே திருடர்களாகும் ரோமியோ ஜூலியட்!

 











பலே தொங்கலு

தெலுங்கு

தருண், இலியானா

இயக்கம் விஜய பாஸ்கர்


சிற்றூர்களிலிருந்து ஆண், பெண் (ராம், ஜோதி)என இருவர் ஹைதராபாத்திற்கு ஓடி வருகிறார்கள். இந்த பயணத்தில் அவர்களின் பயணப்பை, ரயில் பயணத்தில் காணாமல் போகிறது. வேறுவழியில்லாமல் தங்களை ஏமாற்றிய நகரத்தை அவர்களும் திருடர்களாக மாறி ஏமாற்றுகிறார்கள். இந்த திருட்டுகளின் விளைவாக போதை மாஃபியா தலைவர், போலீஸ் என இரண்டுபக்கமும் வேட்டை தொடங்க காதல் ஜோடியின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை.

தருண் (ராம்), ஆபீஸ் வேலைக்கு அப்பா சேர்த்துவிட முயல்கிறார். ஆனால் அவருக்கு 9 டு 5 என்ற வேலை பிடிக்கவில்லை. ஏதாவது வணிகம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அதில் என்ன செய்வது என்று அவரது அப்பாவிற்கு கூறத்தெரியவில்லை. எனவே, வீட்டிலிருந்து தப்பி நகரத்திற்கு வந்து ஏதாவது செய்ய நினைக்கிறார். இன்னொருபக்கம், ஜோதி எனும் இலியானா, இவருக்கு விளம்பர மாடல் ஆசை.வீட்டில் பாட்டி கல்யாணம் செய்து வைக்க முயல்கிறார்கள்.

எனவே அவர் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஹைதராபாத்திற்கு வருகிறார். இப்படிப்பட்ட குணாம்சம் கொண்ட இருவரும் ரயிலில் சந்திக்கிறார்கள். அங்கு சக பயணியிடம் தருண் மயக்க பிஸ்கெட் சாப்பிட்டு கீழே விழ, அருகிலுள்ள ஜோதி சாதாரணமாகவே நன்கு தூங்கி என இருவருமே தங்கள் பைகளை திருடர்களிடம் இழக்கிறார்கள்.

மாடல் போட்டி ஒன்றில் பங்கேற்ப வரும் ஜோதியை அதை ஏற்பாடு செய்பவர் படுக்கைக்கு அழைக்கிறார். எனவே, மாடல் போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகுகிறார். ராம், ரயில் திருட்டில் பணத்தை இழந்த காரணத்தால் தங்கத்தை அடகு வைத்து பணம் பெறுகிறார். அதில் மார்வாடிகள் அவரை ஏமாற்றுகிறார்கள். அதற்கு வட்டியும் முதலுமாக ஜோதியின் நகையை வைத்து மார்வாடியை தருண் ஏமாற்றி பணத்தை பெறுகிறார். இந்த  திருட்டு, எலக்ட்ரானிக் கடையில் வாஷிங்மெஷினை திருடுவதாக மேம்பட்டு வளர்கிறது. அந்த கடை, மாஃபி யா தலைவர் ஒருவருடையது. பத்து லட்ச ரூபாய் சரக்கை ரோமியோ ஜூலியட் என்ற பெயரில் திருடிக்கொண்டு செல்கிறார்கள். இந்த நேரத்தில் நோயில் பாதிக்கப்ட்ட சிறுமிக்கு உதவி செய்ய மேலும் திருட்டு செய்ய நேருகிறது. மும்பைக்கு ஜோதியை அனுப்பி வைத்து மாடல் ஏஜென்சியில் கோர்ஸ் கற்க வைப்பதுதான் தருணின் நோக்கம். ஆனால் அவள், தருணை காதலிப்பதால் தனக்கு மாடல் ஆகும் ஆசையில்லை. அவனின் மனைவி ஆனால் போதும் என கூறிவிடுகிறாள். எனவே, தருண் ரயில்வே ஸ்டேஷன் போய்க்கூட  அவளது மனதை மாற்ற முடியவில்லை. எனவே, திரும்ப ஹோட்டலுக்கு வருகிறார்கள். அடுத்த திட்டம்தான் பெரியது. போதைப்பொருளை விற்பனைக்கு உள்ளது போல நடித்து போலியாக சோடா மாவை கொடுத்து ஏமாற்றுவது. இந்த முறையில் மாஃபியா தலைவரே லூசு போல ஏமாந்துவிடுகிறார். முதலில் இவரது கடையில் பத்துலட்சம், போதை மருந்து வகையில் இருபது லட்சம் என ஆக மொத்தம் முப்பது லட்சத்தை இழக்கிறார். ரோமியோ ஜூலியட்டைப் பிடிக்க தனது ஆட்கள், கூடவே காவல்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்துகிறார். இதில் டிசிபி யுகேந்தர் என்ற முன்கோப அதிகாரியிடம் வழக்கு செல்கிறது.

குற்றவாளிகளுக்கு எந்த ஆதரவும் கொடுக்காத ஆள்தான் யுகேந்தர். அவரது உயரதிகாரி யையே எதிர்த்து பேசுகிற தில் இருக்கிற  ஆள். அவரால் ரோமியோ ஜூலியட்டைப் பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதே கதை.

கதையில் லாஜிக்கெல்லாம் பார்க்காதீர்கள். இலியானாவைப் பாருங்கள். அவரது இடுப்பை பாருங்கள். அதுவே போதுமானது. தருண், இலியானா என இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். மாஃபியா தலைவனின் பணத்தை திருடுகிறார்கள். அதை தங்களுக்கென கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை குழந்தை சிகிச்சைக்காக செலவிடுகிறார்கள். இதனால் அவர்கள் செய்வது சரியாகிவிடாது அல்லவா?

தருண் வணிகம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் கடைசியில்  திருடனாகிறார். இதற்கான பிளான் வகையில் அவர் மார்க்கெட்டிங் சிறப்பாக செய்கிறார். அவருக்கு நோக்கம் என்பது வணிகம் செய்ய பணம் தேவை. நகரத்தில் பணம் திருடுபோனபிறகு, சாப்பிடுவதற்கே கஷ்டப்படுகிறார். எனவே, பிறரை விட தன்னையும், காதலி ஜோதியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். ஆனால் ஜோதி தனது கனவை விட்டுக்கொடுத்தால் கூட நோயுற்ற சிறுமி பற்றி கவலைப்படுகிறார். அதற்கு உதவி  செய்ய தருணின் உதவியை நாடுகிறார்.  அவரும் காதலுக்காக ஒப்புக்கொள்கிறார். அதுதான் கடைசியில் வம்பாகிறது. டிசிபி யுகேந்தர் அவர்களை பிடித்துவிடுகிறார். இறுதியாக அவர்களைக் கொல்ல மாஃபியா தலைவர் முயல்கிறார். காதல் ஜோடி தப்பித்தார்களா இல்லையா என்பதே இறுதிக்காட்சி. ஜெகதிபாபுவை போலீஸ் பாத்திரத்தில் பார்த்தாலும் எந்த நம்பிக்கையும் வரமாட்டேன்கிறது. கோபக்கார அதிகாரி பாத்திரம் அவருக்கு பொருந்தவில்லை.

படத்தில் பெரிய லாஜிக் ஏதும் கிடையாது. அதை பார்த்தால் சுவாரசியம் போய்விடும். எனவே, ஜாலியாக சாய்ந்து உட்கார்ந்து படத்தைப் பார்க்கலாம். பெரிதாக மோசமாக நடக்க ஏதுமில்லை. அதுதான் டிசிபி யுகேந்தர் இருக்கிறாரே,. பார்த்துக்கொள்வார். இடையில் சார்மியின் குத்தாட்டம் வேறு இருக்கிறது. பிரம்மானந்தத்தின் நகைச்சுவை படத்தில் சில காட்சிகளை சுவாரசியமாக்குகிறது. அவ்வளவுதான். அவருக்கான காட்சிகளே குறைவு. கதை ஆதித்ய சோப்ரா. இதை எதற்கு அவரிடமிருந்து வாங்கி படம் உருவாக்கவேண்டும்? அந்தளவு எந்த முக்கியமான அம்சமும் கதையில் படத்தில் இல்லை.

கோமாளிமேடை டீம்

Release date: 4 April 2008 (India)
Music director: K. M. Radha Krishnan
Story by: Aditya Chopra

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்