செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?
ஹியூமன் கம்பாட்டிபிள்
ஸ்டூவர்ட்
ரஸ்ஸல்
வைகிங்
செயற்கை நுண்ணறிவு
நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை
விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன்
வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள்,
அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார்.
அடிப்படையில்
செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான
நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின்
டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு
உதாரணம்.
செயற்கை நுண்ணறிவை
அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம்
முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக
பிடித்து ஒழித்துக்கட்ட உதவும் வசதி இது.
வெறும் உரையாடும் பாட் வகைகளில் இருந்து செயற்கை
நுண்ணறிவு தன்னை எப்பட மேம்படுத்திக்கொள்கிறது என்பது ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார்.
அமேஸான் அலெக்ஸா, கூகுள் ஹோம், ஆப்பிள் சிரி ஆகியவை எப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவு
வகைமை என விளக்கி எடுத்துக்காட்டியிருக்கிறார்.
அடிப்படையாக
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதை எப்படி மேம்படுத்துவது, அதற்கு மனிதர்கள் செய்யக்கூடிய
உதவி, செயற்கை நுண்ணறிவு மேம்படும்போது என்னென்ன வேலைகள் இல்லாமல் போகும் என்பதை விளக்கியிருக்கிறது.
கணித, டெக் விஷயங்கள்தான் அதை சற்று எளிமையாக கூறியிருக்கிறார் நூலாசிரியர். அதுதான்
நூலை சற்று படிக்கும் விதமாக தோன்றச்செய்கிறது.
கோமாளிமேடை
டீம்
நன்றி
அண்டன் பிரகாஷ்
- Discusses the misuses of AI
- Explores the problem of aligning AI with humanity's objectives and values
- Outlines a new approach to AI that would allow us to reap the benefits of automation without suffering its worst potential consequences
கருத்துகள்
கருத்துரையிடுக