பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு
பிரிவினைவாத
இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு
ரா அமைப்பு
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து
விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க
முடியாது.
இதுபற்றிய
உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக
நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான
தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது
என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான்.
சீக்கியர்கள்
கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர்
இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு
சும்மா இருப்பார்களா?
பிரிட்டிஷ்
கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்றுவிட்டு
பார்க்கிங்கில் உள்ள காரை எடுக்க வந்த ஹர்தீபை இரண்டு முகமூடி அணிந்த மனிதர்கள் சுட்டுக்கொன்றுவிட்டு
தப்பினர். தனது பிக்அப் வேன் அருகே இறந்துகிடந்த ஹர்தீப், பிளம்பிங் வேலைகளை செய்து
வந்தவர். காலிஸ்தான் எனும் சுதந்திர சீக்கிய நாட்டுக்காக போராடி வந்தவர். இவரின் கொலையைத்தான்
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பங்கு உள்ளது என
வெளிப்படையாக பேசினார். அதோடு நிறுத்தாமல் இந்திய தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பியது. இந்திய – கனடா வர்த்தக உறவுகள்
எப்படி நடைபெறும் என்பது அந்தரத்தில் உள்ளது.
இந்தியா மக்கள்தொகையில்
சீனாவை முந்தினாலும் அதன் பொருளாதார பலம், திட்டமிடுதலுக்கு முன்னே பின்தங்கிய நாடாகவே
உள்ளது. இந்த நேரத்தில் இந்துத்துவ தத்துவத்தை முன்வைத்து தன்னை பெரிய நாடாக காட்ட
வேண்டிய அவசியம் உள்ளது. பிரதமர் மோடி அதற்குத்தான் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
ஜி20 மாநாட்டை ரஷ்யாவின் போர் பற்றி பேசாமல் தந்திரமாக நடத்தியதை கனடா சொல்லிய புகார்
உடைத்து எறிந்திருக்கிறது.
காலிஸ்தான் இயக்க பிரிவினைவாத தலைவரை படுகொலை செய்த
இந்தியாவை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதிக்கூட சில
தமிழ்நாட்டு பத்திரிகைகள் கொண்டாடின. என்ன ஒரு முட்டாள்தனமான போக்கு?
உளவு அமைப்பான
ரா மீது இதுவரை வெளிநாட்டு மண்ணில் எதிரிகளை கொன்றதாக வழக்கு பதிவானதில்லை. அந்த குறையை
கனடா படுகொலை தீர்த்திருக்கிறது. ராவின் அனைத்து வேலைகளும் நேரடியாக பிரதமரின் அலுவலகத்திற்கு
வந்து சேர்பவை. கனடா படுகொலை தொடர்புடைய உளவு
அமைப்பின் அதிகாரிகள் மீது நடவடிக்கை அல்லது வழக்கு பதிவு செய்வது இனிமேல் நடந்தேற
வாய்ப்புள்ளது.
காலிஸ்தான்
தனிநாடு கோரிக்கை ரத்தம் படிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. சீக்கியர்களின் இந்த அரசியல்
கோரிக்கையை இந்திய அரசியல்வாதிகள் ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி, ஆபரேஷன் ப்ளூஸ்டார்
என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் இருந்த பிரிவினைவாத தீவிரவாத கும்பலை சுமார் நானூறு
பேர்களை சுட்டுக்கொன்றார். அதற்கு பதிலடியாக அவரை அவரது சீக்கிய பாதுகாவலர்களை சுட்டுக்கொன்றனர்.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் தொண்டர்கள் கலவரத்தில் இறங்க 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இன்றுவரை அந்த கலவரத்தின் காயம் ஆறவில்லை.
மரம் வீழும்போது கீழுள்ள தரை அதிரத்தான் செய்யும் என இந்திராவின் இறப்புக்குப்
பிறகான கலவரம் பற்றி அவரது மகன் ராஜீவ்காந்தி கூறினார்.
இதற்கு பதிலடியாக
காலிஸ்தான் போராளிகள் ஏர் இந்தியா விமானத்தை கடத்தி வெடிக்க வைத்தனர். இதில் விமானம்
அயர்லாந்து கடல்புறத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் 24 இந்தியர்கள் இறந்தனர்.
268 கனடா நாட்டுக்காரர்கள் அநியாயமாக பலியானார்கள். ஒரே நாடு ஒரே பால் ஒரே பிரெட் என
அணுக்க முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ள பாஜக அரசு, காலிஸ்தானுக்கு எப்போதும்
ஆதரவாக இருக்கப்போவதில்லை. எனவே அதை தூண்டும் தலைவர்களை கொல்ல நினைக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா
ஆகிய நாடுகள் அமைதியாக நடுநிலை வகிக்க நினைக்கின்றன. அது எந்தளவுக்கு சாத்தியமாகும்
என்று தெரியவில்லை.
ஹன்னா எல்லிஸ்
பீட்டர்சன் கார்டியன் நாளிதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக